Skip to main content

Posts

2-ம் உலகப் போரில் நெல்லைக்கு வந்த போர் விமானங்கள்.!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் ஆயுதப் போர் உலகம் முழுமைக்கும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. எங்கே, 3-ம் உலகப் போர் மூண்டு விடுமோ என உலகின் பணக்கார, நடுத்தர நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன. இந்த தருணத்தில் நம் நெல்லையின் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளை சற்றேனும் திரும்பிப் பார்ப்போம். பிரிட்டன் படையில் அன்றைய இந்தியா: 2-ம் உலகப் போர் நடந்த சமயத்தில் இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக இல்லை. பிரித்தானிய பேரரசின் காலனியாதிக்க நாடாகவே இருந்தது. எனவே, அன்றைய இந்திய வீரர்கள், பிரிட்டன் ராணுவப்படையில் சோ்ந்து 2-ம் உலகப் போரில் ஈடுபட்டார்கள்.  நெல்லை - அதிமுக்கிய விமான தளம்: 2-ம் உலகப்போரின் போது மதறாஸ் மாகாணத்தில் மிக முக்கிய விமான தளமாக நெல்லை கயத்தாறு விமான நிலையம் செயல்பட்டது. 1936-ம் ஆங்கிலேயர்களால் எழுப்பப்பட்ட கயத்தாறு இரட்டை விமான தளத்தில் 2-ம் உலகப் போர் சமயத்தில் பெரிய பெரிய போர் விமானங்கள் வந்திறங்கி தென்னாட்டின் வான்வெளியை கண்காணித்துள்ளன. ஒரே நேரத்தில் 2 விமானங்கள் தறையிறங்கவும், வானில் எழும்பவும் செய்தன என்று கயத்தாறு ஊர்மக்கள் நினைவுபடுத்துகிறார்கள்.  உலகப்போருக்கு பின்னர்
Recent posts

பொருநை நதியை புகழ்ந்து அமெரிக்க மாகாணம் பிரகடனம்.!

  தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் சேரும் ஒரே வற்றாத நதியும் தமிழ் மொழி பிறந்த பொதிகை மலையை தனது தோற்ற இடமாக கொண்ட தாமிரபரணி நதியின் சிறப்பை அமெரிக்காவின் North Carolina மாகாணம் பிரகடனமாக வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடும் முடிவையும் வடக்கு கரோலினா ஆளுநர் அந்த பிரகடனத்தில்  வெளியிட்டுள்ளார்.  ஆளுநரின் அட்டகாச காரணங்கள் : ஆளுநரின் பிரகடனம். ஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக அறிவிக்க பல்வேறு நியாயமான காரணங்கள் இருப்பதாக நார்த் கரோலினா ஆளுநர் தனது பிரகடனச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவைகள்: 1. 3,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருநை நாகரிகம் மற்றும் கீழடி அகாழாய்வின் மூலம் உலகின் பழமையான மொழி – தமிழ் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  2. நார்த் கரோலினா மாகாணத்திற்கு தமிழர்கள் வழங்கிவரும் பங்களிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, 2022 ஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக பிரகடனப்படுத்துகிறேன் என ஆளுநர் திரு. ராய் கூப்பர்  அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். நமது பொருநை அகழாய்வின் தாக்கம் அமெரிக்கா வரை எதிரொலித்து இருப்பது உண்மையிலேயே நெல்லைக்கு பெருமையளிக

தமிழர்களின் தொல்லியல் பூமியாக மாறும் திருநெல்வேலி.!

தமிழ் பிறந்த மாவட்டம் என்ற சிறப்பை கொண்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இப்போது தமிழர்கள் தோன்றிய மாவட்டம் என்ற பெருமையை அறிவியல் பூர்வமாக பெற்றிருக்கிறது. திருநெல்வேலியில் தோன்றும் நதிகள் இந்த பெருமையை நெல்லைக்கு பெற்றுத் தந்துள்ளன.  முதலில் தாமிபரணி: இப்போது நம்பியாறு இந்தியாவிலேயே முதன்முதலில் அகழாய்வு நடந்த நதிக்கரை என்ற பெருஞ்சிறப்பு பொருநை நதிக்கு உண்டு. நெல்லையில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூரில் அந்த அகழாய்வு முதல்முறையாக நடந்தது. தற்போது, அது கொற்கை, சிவகளை என பிரம்மாண்டமான முறையில் விரிவடைந்துள்ளது. அதன் அடுத்த கட்டமாக தாமிரபரணியின் கிளை நதியான நம்பியாறு அகழாய்வாளர்களின் அடுத்த களமாக உருவெடுத்துள்ளது. துலுக்கர்பட்டி எனும் தொல்லியல் பொக்கிசம்: திருநெல்வேலி மாநகரின் தென் பகுதியில் இந்த தளம் அமைந்திருக்கிறது. வள்ளியூருக்கு தென்கிழக்கில் 6 கி.மீ தொலைவில் இருக்கும் துலுக்கர்பட்டி தமிழ்நாட்டின் கடைக்கோடி தொல்லியல் தளமாக அகழாய்வு செய்யப்படவுள்ளது. இந்த இடத்தில் குறியீடுகள் கொண்ட கருப்பு சிவப்பு மண் ஓடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இது பழம்பெரும் காலமாக கருதப்படும் இரும்பு மற்றும

திருநெல்வேலியில் எத்தனை புலிகள் வாழ்கின்றன.?

       தமிழ்நாட்டின் முதல் புலிகள் சரணாலயமான திருநெல்வேலி களக்காடு முன்டந்துறை புலிகள் சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் காட்டுப் பகுதிகளுக்குள் மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  நவீன முறையில் கணக்கெடுக்கும் பணி: இந்த ஆண்டு நவீன தொழில்நுட்ப உதவியோடு புலிகள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதற்காக தனித்துவமான மென்பொருள் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை தொிவித்துள்ளது. திருநெல்வேலி புலிகள் எத்தனை.? திருநெல்வேலி பொதிகை மலையில் மொத்தம் 14 புலிகள் வாழ்கின்றன. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. நவீன முறையில் இந்த ஆண்டு நவீன முறையில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதால் நெல்லையின் புலிகள் எண்ணிக்கை அதிரிக்கலாம்  என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். 

நெல்லை சர்வதேச விமான நிலையம் - சாத்தியமா.?

பெருமைமிகு நெல்லை மாநகரம்:   சுதந்திரத்திற்கு முந்தைய சென்னை ராஜதானியில் அதிக நகரங்களை கொண்டிருந்த ஜில்லா என்ற பெருமை நம் திருநெல்வேலி ஜில்லாவிற்கு இருந்தது. நம் நெல்லை அடிப்படையில் இரட்டை நகரம் அல்ல. முப்பெரும் நகரம்.! ஆம், திருநெல்வேலி,பாளையங்கோட்டை,மேலப்பாளையம் என மூன்று நகரங்களை உள்ளடக்கியது தான் திருநெல்வேலி மாநகரம்.  சிறப்பான உட்கட்டமைப்பு:   தமிழகத்தில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் நகரங்களுள் நெல்லை முக்கியமானது. தமிழகத்திலேயே மிகக் குறைந்த மக்கள் நெருக்கடியைக் கொண்ட மிகப் பெரிய நகரமாக இருப்பது நெல்லை மாநகரம். பரப்பளவில் சென்னை,கோவை,மதுரைக்கு அடுத்து மிகவும் பரந்து விரிந்த நகரமாக இருப்பது நெல்லை மாநகரம்.  முக்கிய சந்திப்பு:   தமிழ்நாட்டில் மதுரைக்கு தெற்கே மிகப்பெரிய போக்குவரத்து சந்திப்பாக நம் திருநெல்வேலி இருக்கிறது. ரயில், சாலை என இரண்டு வழிகளிலும் மிகப் பெரிய சந்திப்பாக இருப்பது நம் திருநெல்வேலி. பொதிகை மலையில் இருந்து இருபிரிவாக பிரிந்து வரும் தாமிரபரணி, திருநெல்வேலிக்கு அருகிலிருக்கும் சீவலப்பேரியில் தான் ஒன்றாக இணைந்து பெருநதியாக விரிகிறது.  விமான நிலையம் -

சேலத்தில் கட்டப்பட்டுள்ளது ஈரடுக்கு பாலம் தானா?

சேலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்துவைத்துள்ளார். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதான் தமிழகத்தின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்பது போல செய்திகளும் பரவி வருகின்றன. உண்மை என்ன? சேலத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தை ஈரடுக்கு மேம்பாலம் என்று அழைக்கலாமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் தற்போது கட்டப்பட்டுள்ள அந்த பாலம் முழுமையான இரண்டடுக்கு பாலமாக அமைக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பாலம் மேலும் கீழுமாக அமைந்துள்ளது. ஆனால் நெல்லையில் முழு பாலமும் ஈரடுக்காக அமைந்துள்ளது. மேலும், நெல்லை மேம்பாலத்தில் ஒரே தூணின் மீது இரண்டு அடுக்குகளும் அமைந்திருக்கிறது ஆனால் சேலத்தில் பக்கவாட்டில் தூண் எழுப்பப்பட்டு இரண்டாவது பகுதி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீடியாக்கள் இதனை ஈரடுக்கு பாலம் என்றும், தமிழகத்தின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் இது தான் என்பது போலவும் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

மெல்ல மெல்ல மாறும் நெல்லை வானிலை.!

 கடந்த ஒன்றரை மாதங்களாக நெல்லையை வாட்டி வதைத்து வந்த கடும் வெயில் விடைபெற ஆரம்பித்துள்ளது. மலையாளக்ரையில் மழை: கேரளாவில் இன்று முதல் தென்மேற்குப் பருவமழை துவங்குகிறது. இதனால் நெல்லை,  குமரி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையமும் அறிவித்துள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் நெல்லையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சீசன்: கேரளாவில் பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் குற்றால சீசனும் அமோகமாக இருக்கும். அருவிகளில் குளிக்க வாய்ப்பில்லாமல் போனாலும் நெல்லை மாவட்டத்தின் வானிலை குளிர்ந்தே இருக்கப் போகிறது.

நெல்லை மண்டலத்தில் எதற்கெல்லாம் அனுமதி?

நாளை முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 6வது மண்டலத்தில் நெல்லை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மண்டலங்களின் பட்டியலில் நம் நெல்லை ஆறாவது மண்டலமாக இடம்பெற்றுள்ளது. நெல்லை மண்டலத்தில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி என நான்கு மாவட்டங்கள் வருகின்னறன. எவையெல்லாம் அனுமதி: • நெல்லை மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. • 50% பேருந்துகளும் இயக்கப்படும். • ஏசி வசதி இன்றி பெரிய கடைகள் செயல்பட அனுமதி. • 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

1993 வெள்ளத்தில் சென்ற பாலத்தின் புது அவதாரம்.

நெல்லை பாபநாசம் முண்டந்துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 28 ஆண்டுகளாக தற்காலிக இரும்பு பாலத்தில் நடந்து வந்த போக்குவரத்து தற்போது புதிய பாலத்திற்கு மாறியிருக்கிறது. சுருட்டியெறிந்த பெருவெள்ளம்: 1993 ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பேயாக கொட்டித் தீர்த்த புயல் மழையில் பாபநாசம் அணை நிரம்பி வழிந்தது. அணை உடைவதை தடுக்க ஒரே நேரத்தில் ஆற்றில் 2லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த வெள்ளத்தில் முண்டந்துறை பாலம் சுக்குநூறாகி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர், ராணுவத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் இதுநாள் வரையில் போக்குவரத்து நடந்து வந்தது. பிறந்தது புதுப்பாலம்: இந்நிலையில் அங்கு புதிய பாலம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது, அது நிறைவடைந்து முதல்வரால் பாலம் எளிமையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் எந்த பெருவெள்ளத்தையும் தாங்கும் வகையில் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை வழியே இலங்கை சென்ற வெட்டுக்கிளிப் படை.

கொரோனாவிற்கு அடுத்து இந்தியாவின் புதிய விருந்தாளியாக வந்து இறங்கியிருக்கிறது வெட்டுக்கிளிகளின் படை. தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வர வாய்ப்புகள் குறைவு என அரசு கூறுகிறது. ஆனால், வரலாற்றில் தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்த நிகழ்வு பதிவாகியிருக்கிறது. ஆதாரத்துடன் கூறும் மதுரை எம்.பி: 17 ம் நூற்றாண்டில் (அதாவது 1600 களில்) வடக்கிலிருந்து வெட்டுக்கிளிகள் சாரை சாரையாக மதுரைக்கு வந்திருக்கின்றன.  சோள கதிர் அளவுள்ள அந்த வெட்டுக்கிளிகள் மதுரையின் விவசாய நிலங்களை பாழ்படுத்தியுள்ளன. பின்னர், அந்த படை தெற்கே நெல்லையை நோக்கி சென்றது என மதுரை எம்.பியும் தமிழின் முன்னணி எழுத்தாளருமான சு. வெங்கடேசன் தனது காவல் கோட்டம் நாவலில் பதிவு செய்திருக்கிறார். மேலும் அது இலங்கை வரை சென்றிருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார். பாதிப்பு அகோரம்: வெட்டுக்கிளிகள் நடத்திய அந்த படையெடுப்பால் ஏராளமான பயிர்கள் நாசமாதோடு பஞ்சமும் பசியும் தலைவிரித்து ஆடியதாகவும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற அந்நாவலில் சு. வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.

கொரோனா : திருநெல்வேலி தடுமாறுவது ஏன்?

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா கொடு நோய். வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை இந்நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. வளர்ந்த மாநிலங்களே இலக்கு: இந்தியாவில் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலமான மகாராஷ்டிரா  தான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  மராட்டியத்திற்கு அடுத்த பெரிய பொருளாதார மாநிலமான நம் தமிழகமும் 2வது அதிக தொற்றாளர்களை கொண்டிருக்கிறது. ஆறுதலளித்த நெல்லை: தமிழ்நாட்டு நிலவரத்தின் படி அதிக தொற்றாளர்களை கொண்டு சென்னை மாநகரம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பாதிப்பை கண்டறிந்த நம் நெல்லையில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஆனால் எண்ணிக்கை 63ஐ தாண்டிய போது நோய் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது 95% பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். நெல்லை மக்களின் ஒத்துழைப்பும், மாவட்ட நிர்வாகத்தின் அதிரடியான நடவடிக்கைகளும் இதற்கு கைகொடுத்தன. திரும்புவோரால் திணறல்: ஆனால், சமீப காலமாக நெல்லையின் கொரோனா எண்

தமிழகமே விரும்பிய திருநெல்வேலி ராஜா.!

  வீரத்திற்கு பெயர்போன நெல்லைச் சீமை பல மன்னர்கள் ஆண்ட பாரம்பரிய பூமி. அப்படிபட்ட நெல்லை சீமையின் தற்போதைய கம்பீர அடையாளமாக வாழ்ந்துவந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் திரு. முருகதாஸ் தீர்த்தபதி. இந்தியாவில் மிக இளவயதில் (மூன்றரை வயதில்) ஜமீன்தாரான இவர், தற்போது தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்தாராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.  செழிப்பான சிங்கம்பட்டி ஜமீன்: சிங்கம்பட்டி ஜமீன் என்பது நெல்லை மாவட்டத்தின் செழிப்புமிக்க பகுதியாக விளங்கும் பாபநாசம், அம்பாசமுத்திரம் வட்டாரத்தை உள்ளடக்கிய ஒரு குறுநிலப்பகுதி. தாமிரபரணி நதியின் பிறப்பிடமான பொதிகை மலை இந்த ஜமீனுக்குள் தான் அமைந்திருந்தது. இந்த பகுதியை ஆயிரமாண்டு பாரம்பரியம் கொண்ட சிங்கம்பட்டி ராஜ வம்சத்தினர் தலைமுறை தலைமுறையாக ஆண்டு வந்துள்ளனர். கால மாற்றத்தால் கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தால் சிங்கம்பட்டி ஜமீன் ஆளும் அதிகாரத்தை இழந்தது. எனினும் அச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே முருகதாஸ் சிங்கம்பட்டி ஜமீனுக்கு ராஜாவாக  முடிசூட்டப்பட்டார். ராஜா தீர்த்தபதி : T.M.S திர்த்தபதி என்றழைக்கப்படும் முருகதாஸ் ஆங

தமிழக அரசியலை அலறவிட்ட திருநெல்வேலிக்காரர்.

தமிழகத்தின் முன்னாள் சபாநாயகரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான பி.ஹெச்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 74. தமிழக அரசியல் களத்தில் தாக்கம் செலுத்திய திருநெல்வேலிக்காரர்களுள் மிக முக்கியமானவர் அவர்.! எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியர் : திறமையான வழக்கறிஞராக திகழ்ந்து அரசியலில் இறங்கிய பாண்டியன் நம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர். சொந்த பகுதியில் தனக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அதிமுகவில் தனக்கென தனியிடத்தை பிடித்து வைத்திருத்தார் பி.ஹெச். பாண்டியன். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் நபர்களில் முக்கியமானவராக விளங்கியவர். வானளாவிய அதிகாரம் படைத்தவர்! தமிழக சட்டசபையின் சபாநாயகராக  இருந்த போது தனது அதிரடியான செயல்பாடுகளால் அரசியல் அரங்கை அலற விட்டவர் பி.ஹெச்.பாண்டியன். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று இவர் முழங்கிய போது இந்தியாவே தமிழகத்தை திரும்பிப் பார்த்தது. ஜெயலலிதா முதல் சசிகலா வரை! எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகியா? ஜெயலலிதாவா? என்ற நிலை வந்த போது ஜானகி பக்கம் இருந்து ஜெயலலிதாவை எதிர்த்தார். அப்போது ந