ராகுல் எழுச்சியால் மோடி வீழ்கிறாரா? நாடே எதிர்ப்பார்த்த குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. பிரதமர் மோடிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் நடந்த உச்சகட்ட மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. பா.ஜ. கட்சியின் கோட்டை எனக் கருதப்படும் குஜராத்தை எப்படியாவது தன் வசம் கொண்டு வந்துவிட முயன்ற காங்கிரசுக்கு மகிழத்தக்க தோல்வி (77) கிடைத்திருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்புகளை கடந்து அங்கு ஆட்சியமைத்து விட்டது (99). பா.ஜ.கவுக்கு ஆச்சரியமளிக்கும் முடிவுகள். ஆட்சியமைத்து விட்டோம் எனக் கருதும் பா.ஜ.க தனது கிராமப்புற வாக்காளர்களை இத்தேர்தலில் இழந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், மோடியின் பிறந்த மண்ணிலேயே அக்கட்சி தோல்வி கண்டுள்ளது. மாதக்கணக்கில் அங்கு முகாமிட்டு மோடி பிரச்சாரம் செய்தாலும், பா.ஜ.கவின் இந்த சறுக்கல் அக்கட்சியினரை கவலை கொள்ள வைத்துள்ளது. காங்கிரசின் "கை" ஓங்குகிறது. ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி காலரை தூக்கிக் கொண்டாடும் நிலையில் இருக்கிறது. பட்டேல்,பிற்படுத்தப்பட்டோர்,தலித் சமூகங்களை இணைத்து கூட்டணியை உருவாக்கிய ராகுலின் வ