நம் தமிழகம் பழமைக்கும் பாரம்பரியத்துக்கும் பெயர்போன மாநிலம். அதற்கு சான்றாக நாம் பலவற்றை சொல்லலாம். அனால் அவற்றுள் தனித்துவத்தோடு திகழ்வது ஒரு சில மட்டுமே. அந்த ஒரு சிலவற்றுள் ஒன்றுதான் நம் நெல்லை மாநகரம். தமிழகத்தில் பல நகரங்கள் இருக்க நம் நெல்லை மட்டும் ஏன் ஸ்பெஷல் ..? பார்ப்போம் வாருங்கள்... நெல்லை : திருநெல்வேலி, திருநவேலி என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்படும் இந்நகரம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம். தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் வயல்வெளிகளையே வேலியாக கொண்டதத்தால் இப்பெயர் பெற்றது. சரி வரலாற விட்டுட்டு நம் நெல்லை ஏன் ஸ்பெஷல்ங்கிறத பாப்போம். தாமிரபரணி: தாமிரபரணி திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன் பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புர