வணக்கம் அன்பு நண்பர்களே . ! தமிழகத்தின் முக்கிய நகரமான நெல்லை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஆம், நம் நெல்லையின் பெருமைமிகு பத்து நாள் திருவிழாவான ஆனிப்பெருந்திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. இனி தினந்தோறும் சுவாமி அம்மன் வீதி ஊர்வலம், கச்சேரி நடனம் என்று பத்து நாள்களுக்கு நெல்லையில் கொண்டாட்டம் தான். இதன் உச்ச நிகழ்வான தேரோட்டம் வரும் 14ம் தேதி நடக்கவுள்ளது. நாட்டில் ஓடும் மற்ற தேர்களுக்கு இல்லாத பெரும் சிறப்புகளெல்லாம் வரும் புதனன்று ஓடவிருக்கும் நம் நெல்லையப்பர் தேர்களுக்கு உண்டு...! அவைகள் என்னென்ன ...? வாருங்கள்....! பார்ப்போம்.. நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: நெல்லையப்பர் பேராலயம் தமிழகத்தின் மிகப்பழமையான சிவாலயங்களில் மிகப்பெரியதாக விளங்கும் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாவின் பத்தாவது நாளன்று நடக்கும் தேரோட்டம் மிகப் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத, வேறுபாடுகள் கடந்து ஒற்றுமையோடு தேரிழுப்பர். குற்றால சாரலில் தென்பொதிகை தென்றலில்