Skip to main content

Posts

Showing posts from December, 2017

ராகுல் எழுச்சியால் மோடி வீழ்கிறாரா?

ராகுல் எழுச்சியால் மோடி வீழ்கிறாரா? நாடே எதிர்ப்பார்த்த குஜராத் தேர்தல்   முடிவுகள் வெளிவந்து விட்டன. பிரதமர் மோடிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் நடந்த உச்சகட்ட மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது.  பா.ஜ. கட்சியின் கோட்டை எனக் கருதப்படும் குஜராத்தை எப்படியாவது தன் வசம் கொண்டு வந்துவிட முயன்ற காங்கிரசுக்கு மகிழத்தக்க தோல்வி (77) கிடைத்திருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்புகளை கடந்து அங்கு ஆட்சியமைத்து விட்டது (99). பா.ஜ.கவுக்கு ஆச்சரியமளிக்கும் முடிவுகள்.      ஆட்சியமைத்து  விட்டோம் எனக் கருதும் பா.ஜ.க தனது கிராமப்புற வாக்காளர்களை இத்தேர்தலில் இழந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், மோடியின் பிறந்த மண்ணிலேயே அக்கட்சி தோல்வி கண்டுள்ளது. மாதக்கணக்கில் அங்கு முகாமிட்டு மோடி பிரச்சாரம் செய்தாலும், பா.ஜ.கவின் இந்த சறுக்கல் அக்கட்சியினரை கவலை கொள்ள வைத்துள்ளது. காங்கிரசின் "கை" ஓங்குகிறது.      ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி காலரை தூக்கிக் கொண்டாடும் நிலையில் இருக்கிறது. பட்டேல்,பிற்படுத்தப்பட்டோர்,தலித் சமூகங்களை இணைத்து கூட்டணியை உருவாக்கிய ராகுலின் வ

நீங்கா நினைவுகளான நெல்லை நிகழ்வுகள் - 2017

  நெல்லை - 2017.          பரபரப்பான நிகழ்வுகளுக்கு நம்ம  திருநெல்வேலியில் என்றுமே பஞ்சம் இருக்காது . விரைவில் விடைபெறவுள்ள 2017ம் ஆண்டிலும் நம் திருநெல்வேலி பல நேரங்களில் தலைப்புச் செய்தியானது. அதில் மிக முக்கியமான ஐந்து நிகழ்வுகளை வரிசைப்படுத்தி உங்களுக்காக கீழே அளித்துள்ளோம்.   5. இந்திய அணியில் இடம்பெற்ற ஓர் நெல்லையன். திரு. விஜய் சங்கர்       உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியான இந்திய அணியில் நம் நெல்லையை சேர்ந்த விஜய் சங்கர் இந்தாண்டு  இடம்பிடித்து பிறந்த நெல்லை மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.   4. பேய் மழையைப் பெற்ற நெல்லை மாவட்டம் . பொங்கி பாயும் தாமிரபரணி           இந்தாண்டு நம் நெல்லை மாவட்டம் வரலாறு காணாத மழையை பெற்றது. குமரிக் கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல், நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பெரு மேகவெடிப்புகளை நிகழ்த்தியது. திருநெல்வேலி மாவட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 45 செ.மீ மழை ஒரே நாளில் பாபநாசத்தில் கொட்டித் தீர்த்தது.இதைத் தொடர்ந்து, தாமிரபரணியும் பெருக்கெடுத்தது.   3. ஜல்லிக்கட்டுக்காக களம் கண்ட

நியாபகம் வருதே நியாபகம் வருதே...!

                                                                                   அழகிய ஆற்றுப் பாலக் காட்சிகள்                ஒரு வாரத்துல மொத்தம் ஏழு நாட்கள். அது தான் எல்லாத்துக்கும் தெரியுமே.? ஆமா, அந்த ஏழு நாட்கள்ள ஐஞ்சு நாள் தான் எனக்கு காலேஜ் இருந்துச்சு. ... காலேஜ் இருந்ததது நம்ம பாளையங்கோட்டையில தான். அதாவது ஜங்சன்ல இருந்து சரியா 3 கி.மீ. எல்லாத்தைப் போல நானும் பஸ்லப் போற ஆள் தான். அதுவும் வேணி பஸ்ஸா பார்த்து ஏர்றது வழக்கம். மூஉனு கி.மீ!! பயணங்கறதுனால சீட்டு இருந்தாதா ஏற்ரது. ஏற்ன உடனே பின் வாசலுக்கு நேரெதிர் சீட்ட புடிச்சாச்சுனா ஒரு நிம்மதி.   பயணம் ஆரம்பம் .         வண்டி சங்சன (ஜங்சனை) தாண்டி தேவர் சிலைக்கு வந்துரும். சில நேரம் சிக்னல்ல சிக்கி 20 செகண்ட் நிக்குறது வாடிக்கை. அத தாண்டி ஒரு வழியா மீண்டு வந்ததும் அழகான ஆத்துப்பாலம் கண்ணுக்கு தெரியும். சுலோச்சனா முதலியாருன்னு அதுக்கு பேர் விட்ருக்காங்க, அத கட்டுனவரும் அவரு தான்.   பாலத்தின் மீது பயணம்.   பஸ் அந்த பாலத்துல போய்க்கிட்டிருக்கும் போது உண்மைலயே பெருமையா பிரம்பிப்பா இருக்கும். என்னா அ