Skip to main content

Posts

Showing posts from 2018

நெல்லையில் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனை.!

நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சட்டக்கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரும் ஜனவரியில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. மூன்றில் ஒன்று நெல்லையில்: தமிழகத்தில் மூன்று இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. நம் நெல்லையோடு சேர்த்து மதுரை மற்றும் தஞ்சையிலும் இந்த மருத்துவமனைகள் அமைகிறது. எய்ம்ஸ்-க்கு நிகரான வசதிகள்: நம் நெல்லையில் அமையவுள்ள பல்நோக்கு மருத்துவமனையை தமிழக அரசின் எய்ம்ஸ் என வர்ணிக்கலாம். கிட்டத்தட்ட எய்ம்ஸ் அளவுக்கான நவீன சிகிச்சை முறைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. நெல்லை மருத்துவமனையின் சிறப்பு: நம் நெல்லையை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகப் பெரிய மருத்துவமனையாக திகழ்வது மேட்டுதிடல் மருத்துவமனை தான். 1958 ல் காமராஜரால் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1964ல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. இந்தியாவில் அதிக நிலப்பரப்பில் அமைந்துள்ள மருத்துவமனைகளுள் நம் நெல்லை மருத்துவமனையும் ஒன்று. வரவிருக்கும் வசதிகள்: நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையி

மெல்ல விடைபெறுகிறது நம் பழைய ஜங்ஷன்.!

ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் துரித கதியில் நடந்துவருகிறது. இந்நிலையில் அங்கு ஒரு விசிட்: பேருந்து இல்லா நிலையம்: பிரைவேட் பஸ்களின் ஹாரன் ஒலியால் தினமும் அலறும் ஜங்ஷன் பஸ்டாண்டில் தற்போது அமைதி தவழ்கிறது. கேடிசி பேருந்துகள் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்தை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் கடந்து செல்கிறார்கள். "டவுண்,மார்க்கட்,ஹைகிரவுண்டே..."என்று நம்மூர் கண்டெக்டர்களின் காட்டு கத்தை கேட்க முடியவில்லை. ஜங்ஷனை சுற்றும் பேருந்துகள்: ஜங்ஷன் மூடப்பட்டுள்ளதால் ஜங்ஷனுக்கு வரும் பேருந்துகள் ஜங்ஷனை ஒரு சுற்று சுற்றி வந்து மக்களை இறக்கி விடுகின்றன. மேற்கிலும் கிழக்கிலும் தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்கோலமாய் காட்சியளிக்கிறது. பேருந்து நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் ஆரம்பித்து விட்டதால் பஸ்டாண்டின் மேற்கூறைகள் அகற்றப்பட்டுள்ளன. பாளை. நகர பேருந்துகள், ரூட் பஸ்கள் வந்து செல்லும் பகுதி புயல் வீசிய பகுதியைப் போல காட்சி தருகிறது. மேற்கூறைகள் இல்லாமல் அந்த பகுதியை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. மைய பகுதியின் நி

வர்த்தக மையமாகிறது நெல்லை பொருட்காட்சி திடல்!

ஆண்டு தோறும் பொருட்காட்சி நடைபெறும் நம் நெல்லை மாநகராட்சி திடல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வர்த்தக மையமாக மேம்படுத்தப்பட உள்ளது.  இதனால் வருங்காலங்களில் பிரம்மாண்ட தொழில் கண்காட்சிகளை நம் நெல்லையில் நடத்த முடியும். புதிதாக அமைய உள்ள இந்த மையம் கோவை கொடிசியா வர்த்தக மையத்தை போன்று மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது. பெருங்குறை நீங்கியது: மதுரைக்கு தெற்கே உள்ள நான்கு மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் பெரிய மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற கண்காட்சிகள் இதுவரை சிறிய மண்பங்களில் தான் நடைபெற்று வருகின்றன. இதனால் நம் நெல்லை பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் புதிய மையம் அமைகிறது. வசதிகள் : 1.   இந்த மையம்  7.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. 2.   தரைத்தளத்தில் சுமார் 350 கார்கள்  நிறுத்தும் வகையில்  விசாலமான   கார்பார்க்கிங்  அமைக்கப்படுகிறது. 3. ‎ மேலுள்ள தளங்களில்  இரு அரங்கங்கள்  மற்றும்  உணவு அருந்தும்  கூடம் ‎முதலியவை அமைக்கப்படுகின்றன. பொங்கலுக்கு பிறகு பணிகள்

நெல்லையில் மாபெரும் எல்பிஜி ஆலை.!

சமையல் எரிவாயு என்றாலே நம் நினைவிற்கு வருவது  இண்டேன் அல்லது பாரத் கேஸ் தான். இதில் இண்டேன் நிறுவனத்தை பொறுத்தவரை நம் தென் மாவட்டங்களுக்குத் தேவையான எல்பிஜி சிலிண்டர்கள் மதுரை,திருச்சி முதலிய பகுதிகளில் உள்ள ஆலைகளில் இருந்து நிரப்பபப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் கால விரையமும் வீண் பயணச் செலவும் ஏற்படுகிறது. நெல்லையில் புதிய ஆலை: இதனை போக்கும் வகையில் நம் நெல்லையை மையமாக கொண்டு புதிய ஆலையை அமைக்க இந்தியன் ஆயில் முடிவு செய்தது. இதற்காக கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் தேர்வு செய்யப்பட்டு 42 ஏக்கரில் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆலையில் இருந்து பத்து லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. விரைவில் செயல்படும்: இந்த ஆலை அமைவது குறித்து ஏற்கனவே ஒன்றிய அமைச்சர் பொன்.ராதா தகவல் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த ஆலை பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நெல்லை ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் எழாததால் விரைவில் இந்த ஆலை செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி தீரனுக்கு இன்று நினைவு நாள்.

ராஜஸ்தான் கொள்ளையர்களை விரட்டிப் பிடிக்கும் சண்டையில் சக காவலரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த திரு. பெரியபாண்டியனுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள். அந்த திருநெல்வேலி தீரனுக்கு தமிழகமே இன்று நினைவஞ்சலி செலுத்துகிறது. இந்நாளில் அவரைப் பற்றிய நினைவலைகளில் சில: சிரித்த முகத்துக்காரர்:  கடினமான காவல் துறையில் பணியாற்றிய போதும் வீரமரணம் அடைந்த பெரியபாண்டியன் எல்லோரிடமும்  சிரித்த முகத்துடனே பழகுவாராம். உழைப்பால் உயர்ந்த காவலர்: காவல் துறையின் மீது பெரும் ஈடுபாட்டை கொண்டிருந்த பெரியபாண்டியன், தனது கடின உழைப்பால் தமிழக காவல் துறைக்குள் நுழைந்துள்ளார். அர்ப்பணிப்புள்ள பணியை அவர் மேற்கொண்டதால் உயர் பதவியும் தேடி வந்தது. சொந்த ஊர்க் காதலர்: வேலை காரணமாக சென்னையில் குடியேறினாலும், தன்னை ஆளாக்கிய சொந்த ஊரான சாலைப்புதூரை அவர் மறக்கவில்லை. தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி அங்கே அரசு பள்ளி வரச்செய்தார். எதிர்ப்பாரா மரணம்: ஆனால் யாரும் எதிர்ப்பாரா வகையில் ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் வேட்டையில் சக காவலரின் குண்டு பாய்ந்து வீர மரணத்தை தழுவினார். நெல்லை

கோவையில் குதூகலிக்க கிளம்பினாள் காந்திமதி.!

தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும்  புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. எழில் கொஞ்சும் கோவை மாவட்டத்தில் தேக்கம்பட்டி என்னும் இடத்தில் இந்த ஆண்டுக்கான முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக நெல்லை அறநிலையத்துறை மண்டலத்தில் இருந்து 8 யானைகள் பங்கேற்கின்றன. கிளம்பினாள் காந்திமதி.! நம் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஐந்து யானைகள் பங்கேற்கின்றன. இதில் நம் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியும் ஒன்று. காந்திமதியை வழியனுப்பும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்த பிறகு நெல்லை M.D.T பள்ளியில் இருந்து லாரியில் புறப்பட்டாள் காந்திமதி. 48 நாட்களுக்கு காந்திமதியை காண முடியாது. 48 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த முகாமில் யானைகளுக்கு சிறந்த உணவு,உடற்பயிற்சி,உடல்நல சிகிச்சை முதலியவை வழங்கப்பட உள்ளன. எனவே அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியை நாம் பார்க்க முடியாது.

உலக நாகரிகத்தின் தொட்டில்: நெல்லை ஆதிச்சநல்லூர்

நாம் படிக்கின்ற காலத்தில் இந்தியாவின் மிகப்பழமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றே நம் வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே நம் நெல்லை தாமிரபரணி கரையோரத்தில் மிகச் செழிப்பான நாகரிகம் இருந்துள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகம். நம் தாமிரபரணி கரையோரப்பகுதி இப்போது போலவே அந்த காலங்களிலும் மிகச் செழிப்பாக இருந்துள்ளது. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை உயர்ந்த நாகரீகத்தை பின்பற்றி நம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆதியில் தோன்றிய ஆதிச்சநல்லூர்: நம் நெல்லையில் இருந்து பதினெட்டே கி.மீ தொலைவில் தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி இங்கே நடந்து கொண்டிருந்த சமயத்தில் அலெக்ஸாண்டர் என்ற தொல்பொருள் ஆய்வாளர் அகழாய்வை மேற்கொண்டார். அதில் அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.  ஆம், உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு ஒன்று அங்கே இருப்பதைக் கண்டு அசந்துபோனார். சுமார் 110 ஏக்கரில் அது அமைந்திருக்கிறது. இடுகாடே இத்தனை பெரியதாக இருந்தால் அங்கே மிகப் பெரிய நகரம் ஒன்றும் இருந்திருக்கும் என அறிவித்தார் அந்த

எப்படி நடக்கிறது நெல்லை பாலப் பணிகள்.?

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சுலோச்சனார் பாலத்திற்கு 176 வயதாகிறது. எனவே இந்த பாலத்தின் பாரத்தை குறைக்கும் வகையில் 18 கோடியில் பாலம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதற்கான பணிகள் ஆறு மாதத்திற்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. விறு விறு பணிகள். புதிய பாலம் 237 மீட்டர் நீளம், 14.8 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதில் 10.5 மீட்டர் அகலத்திற்கு வாகனங்கள் செல்லவும், எஞ்சியுள்ள அளவில் இருபகுதியும் பாதசாரிகள் செல்ல நடைபாதையும் அமைக்கப்படுகிறது.  ஒத்துழைப்பு அளிக்கும் தாமிரபரணி: புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் அதிவிரைவாக நடந்து வருகின்றன. தற்போது வரை பாதிக்கும் மேல் பாலம் அமைக்கப்பட்டுவிட்டது.  நம் நெல்லை மாவட்டத்தில் தற்போது பெருமழைக் காலம். ஆண்டு தோறும் இந்த நேரத்தில் நம் தாமிரபரணி பரந்து விரிந்து பாய்ந்தோடுவாள். ஆனால் இந்த முறை அளவான மழை பெய்துள்ளதால் தாமிரபரணி அமைதியாக தவழ்கிறாள். இது பாலப் பணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. விரைவில் திறக்கப்படுகிறது: இதனால் பாலப்பணிகள் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பிள்ளைய

நம் நெல்லையின் பெயரும் மாறுமா.?

தமிழகம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்த போது பல தமிழக ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் பிழையாக பயன்படுத்தப்பட்டன. அதாவது அவர்கள் வசதிக்கு நமது ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றிவிட்டார்கள். MADRAS முதல் TUTICORIN வரை! மதராசப்பட்டினத்தை மதறாஸ் என அழைத்தது தொடங்கி நம் தூத்துக்குடியை டூட்டிக்குரின் என அழைத்தது வரை அவர்களின் அட்டூழியம் இருந்தது.இந்தியா விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் அந்த பெயரிலேயே அரசு பணிகள் நடந்து வருகின்றன. மீண்டும் THOOTHUKUDI ஆகிறது முத்துநகரம்.! இந்நிலையில் ஆங்கிலேயர்களால் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்களை தமிழில் இருப்பதைப் போல ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய தமிழக அரசுமுடிவெடுத்துள்ளது. அதன்படி - Triplicane,Tuticorin முதலிய ஊர்கள் தமிழ்ப் படுத்தப்படுகின்றன. Tirunelveli யா Thirunelveli யா.? இந்த நிலையில் நம் திருநெல்வேலியின் சரியான ஆங்கிலப் பெயர் எது என்பது குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே Tinnevelly என்ற பெயரில் வழங்கப்பட்டுவந்த நெல்லை பின்னர் Tirunelveli ஆனது. இதை ஆங்கிலத்தில் வாசித்தால் டிருநெல்வேலி என்றே வருகிற

நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுத்தது என்ன?

ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் நம்ம திருநெல்வேலியில் இதையெல்லாம் செயல்படுத்துவார்களா என்ற சந்தேகம் நம் நெல்லை மக்களிடையே நிலவியது. ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் தூர எறிந்து விட்டு நெல்லையை ஸ்மார்ட் ஆக மாற்ற கடும் உழைப்பை மேற்கொண்டு வருகிறது நெல்லை மாநகராட்சி... அடுத்தடுத்து அதிரடி..! நெல்லையை ஸ்மார்ட் ஆக்க முதலில் குப்பை மேலாண்மையை கையில் எடுத்தது மாநகராட்சி நிர்வாகம். மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு சிறந்த முறையில் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநகரமாக நெல்லை மாறியது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி விருதையும் நம் நெல்லை தட்டிச்சென்றது. இதற்கிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் நெல்லையில்  தொடர்ந்து எடுக்ககப்பட்டு வருகின்றன. இதுவரை நடந்தது என்ன? 1. நெல்லை மாநகராட்சி அலுவலகப் பூங்கா அழகுற தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2. ‎அம்ருத் திட்டத்தின் கீழ் பல இடங்களில் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 3.    ஜங்ஷன் பேருந்து நிலையத்தை நவீனமாக்கும் பணிகள் வெகுவிரைவில்

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல்

நெல்லையில் ஆரம்பித்து நெல்லையில் முடித்த ஜெ.

அதிமுக என்ற கட்சியின் தலைவியாகவும் தமிழக முதல்வராகவும் வீற்றிருந்தவர் ஜெயலலிதா. நடிகையாக தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகி பின்னர் அதிகாரமிக்க அரசியல்வாதியாக உருவெடுத்தவர் அவர். சென்னையில் தொடங்கிய அவரது திரை வாழ்க்கை நிறைவடைந்ததும் அங்கு தான்.! ஆனால் அவரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியதும் நிறைவடைந்ததும் நம் திருநெல்வேலியில் தான். நெல்லையே முதல் களம் ஜெயலலிதா அரசியலில் அடியெடுத்த வைத்த பிறகு அவரின் முதல் பொதுக்கூட்டம் அன்றைய நெல்லை மாவட்டம் எட்டயபுரத்தில் தான் நடந்தது. பாரதி பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவரை திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர். அதிலும் சுற்றிச் சுழன்ற ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பெறச்செய்தார். கடைசி களமும் நெல்லை தான்! எப்படி தனது அரசியல் வாழ்வை திருநெல்வேலியில் தொடங்கினாரோ அதே போல தனது கடைசி பிரச்சார கூட்டத்தையும் நெல்லையிலேயே முடித்துக்கொண்டார். ஆம் கடந்த 2016 ம் ஆண்டு மே மாதம் நெல்லை பெல் மைதானத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வந்தார். அதற்கு பின்பு அவர் எந்த பிரச்சார மேடையிலு

கழிவுமேலாண்மையில் நாட்டிலேயே நெல்லை முதலிடம்.!

கழிவுகளை கையாள்வதில் நாட்டிலேயே மிக்ச்சிறந்த மாநகர நிர்வாகமாக மாறி நம் நெல்லை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு எடுத்த ஆய்வில் இம்முடிவு வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவு மேலாண்மைனா.? நகரங்களில் உருவாகும் கழிவுகளை மக்கும் கழிவுகள்,மக்காத கழிவுகள் என தரம் பிரித்து கையாள்வதே கழிவு மேலாண்மையாகும். இந்த முறையானது இந்தியாவின் பல மாநகரங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் கழிவுகளை பிரித்தாள்வது பல மாநகர நிர்வாகங்களுக்கு கடும் சிக்கலாகவே இருக்கிறது. பல இடங்களில் கழிவுகள் மொத்தமாக பெறப்பட்டு அதன் பின்னரே பிரிக்கப்படுகின்றன. தனி வழியில் திருநெல்வேலி.! ஆனால் இங்கே நம் திருநெல்வேலியில் குப்பைகள் சேகரிக்கப்படும் போதே அவை மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகின்றன. இந்த முறையை சோதனை அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து பார்த்தது. அன்பான நம் நெல்லை மக்களின் அமோக ஆதரவால் அம்முறை அமோக வரவேற்பை பெற்றது. அதன் விளைவு கழிவு மேலாண்மையில் நாட்டிலேயே சிறந்த மாநகரமாக இன்று நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 100% வெற்றி .! திருநெல்வேலியில் ச

புரோட்டான்னா திருநெல்வேலி காரங்களுக்கு உசுரு.!

சென்னையில் புரோட்டா விலையை கேட்டு அதிர்ந்த நெல்லையர்கள் சிலர் புரோட்டா கடையை சூரறயாடியது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. கடையையே சூறையாடும் அளவிற்கு புரோட்டா மீது பிரியம் வைத்திருக்கும் நம்ம ஊர்மக்களை என்னவென்று சொல்வது.? நெல்லைக்கும் புரோட்டாவுக்குமான உறவு அப்படிப்பட்டது. புரோட்டாவின் பூர்வீகமே நம்மூர் தான்! இரண்டாம் உலகப் போரின் போது கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் களத்தில் இறக்கிவிடப்பட்ட மைதா மாவு நம் நெல்லை தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில் புரோட்டாவாக அவதாரம் எடுத்ததாம். புரோட்டாவின் மகிமை: கடும் உழைப்புக்கு சொந்தக்காரர்களான நம்மூர் விவசாயிகள் நாள் முழுவதும் வயல் வரப்புகளில் வேலை பார்த்துவிட்டு அகோரப் பசியோடு வீடுதிரும்புவர். அவர்களின் பசியை அடக்கும் மகிமை புரோட்டாவை தவிர எதற்கும் இருக்காது. புரோட்டாவை சுடச்சுட பிய்த்து போட்டு குளிர சால்னா ஊத்தி ஒரு பிடி பிடிக்கும் அனுபவமே தனி தான்.! அதனாலேயே நம்மூர் உழைப்பாளர்களின் உற்ற தோழனாக புரோட்டா உருமாறியது. ருசியான சால்னா: புரோட்டாக்கள் தமிழ்நாடெங்கும் புழக்கத்தில் வந்துவிட்டாலும

செழிக்கும் நெல்லையை சீரழிக்க முயற்சி.?

சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை போல இராஜபாளையம்-செங்கோட்டை இடையே புதிய நான்கு வழிச்சாலையை போட அரசு முடிவெடுத்துள்ளது. ரம்மியமான மலையடிவாரச் சாலை.! தமிழகத்தின் அழகான சாலைகளுள் மதுரை-செங்கோட்டை சாலையும் ஒன்று.  விருதுநகர்,நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த சாலை அமைந்துள்ளது. எழுமிச்சை,கரும்பு,நெல் என சகலமும் செழித்து வளரும் நிலங்கள் நடுவே இச்சாலை செல்கிறது. இந்த சாலையில் தான் இரு மாவட்டங்களின் முக்கிய நகராட்சிகள் அமைந்துள்ளன. விருதுநகர் : *ஸ்ரீவில்லிபுத்தூர். *ராஜயாளையம். நெல்லை: *புளியங்குடி *சங்கரன்கோவில் (பைபாஸ்) *கடையநல்லூர் *தென்காசி *செங்கோட்டை இந்த நகரங்களை வடக்கு மாவட்டங்களோடு இணைப்பது இச்சாலை தான். ஆண்டு தோறும் குற்றாலம் சீசன் நேரத்திலும், சபரிமலை சீசனிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையில் பயணிக்கும். இதனால் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக்க அரசு முடிவெடுத்துள்ளது. பாதையே மாறுகிறது: புதிதாக வரவுள்ள இந்த நான்கு வழிச்சாலை ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி அமையவுள்ளது. அதாவது சிவகிரி,வாசு,புளியங்குடி முதலிய ஊ

தலைமுறைகள் கடந்தும் தணியாத தாகம்.!

தமிழ்நாட்டிலேயே அதிக அணைகளை நம் திருநெல்வேலி கொண்டிருப்பதால் இங்கு தண்ணீர் பிரச்னையே இல்லை என வெளியூர் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம்மிடமும் ஒரு கண்ணீர் கதை பல தலைமுறையாக நிறைவேறாமல் இருப்பதை அவர்கள் அறிவதில்லை. ஏன் நம்மில் பலருக்கும் கூட அக்கதையின் சோகம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காமரஜர் தீட்டிய கனவுத் திட்டம். தமிழ்நாடெங்கும் நீர்நிலைகளை கட்டியெழுப்பிய காமராஜர் தான் இந்த திட்டத்தை தீட்டியவர். 1962 ம் ஆண்டு கடனாநதி,ராமநதி என்ற இரு அணைத்திட்டங்களோடு ஜம்புநதி கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிறகு ஆட்சிப் பொறுப்பை இழந்தார். பின்னர் வந்த திமுக ஆட்சியில் இரு அணைகள் மட்டும் கட்டியெழுப்பப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கைவிடப்பட்ட கால்வாய் திட்டம்: அணை கட்டியாச்சு.. கால்வாய் எங்கடா.? என்பதைப் போல நீரை தேக்கி வைக்க மட்டும் அணையை கட்டிவிட்டு ஜம்புநதி கால்வாய் திட்ட்டத்தை கைவிட்டது தமிழக அரசு. பிறகு அதிமுக அரசு வந்தது. தென்னகத்தின் கோரிக்கைகள் கோட்டைக்கு பறந்தன. நிறைவேற்றுகிறேன் என்று சொன்ன எம்ஜிஆர் மரணித்துப்போனார். பின்னர் திமுக, அடுத்து அதிமுக எ

இன்டஸ்ட்ரியல் காரிடராகிறது நெல்லை-தூத்துக்குடி ரோடு

திருநெல்வேலியில் இருந்து பிரிந்து சென்ற தூத்துக்குடி இன்று தொழில் வளர்ச்சியில் கோவையோடு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி-மதுரை சாலையை இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்ற அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. திட்டத்தில் திடீர் மாற்றம்.? இந்நிலையில் அதற்கு முன்னதாக திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை முதலில் இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்றப்படும் என்ற தடாலடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதை ஒட்டி மதுரையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய தொழில்துறை அமைச்சர் M.C சம்பத் சென்னை-கன்னியாகுமரி தொழில் வளர்ச்சி பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லை-தூத்துக்குடி காரிடர் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார். தொழில்துறைக்கு ஏற்ற பகுதி: அவ்விழாவில் பேசிய அதிகாரிகளும் தென்மாவட்டங்களின் சிறப்பம்சங்களை வெகுவாக விதந்தோதி உள்ளனர். தமிழ்நாட்டில் மின் வசதி தங்குதடையின்றி கிடைக்கும் பகுதி தென்மாவட்டங்கள் தான் என்று பேசியுள்ளனர். துறைமுகம்,ரயில் பாதை,விம

நெல்லையை புயல்கள் தாக்குவதேயில்லை ஏன்.?

மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் தென்னிந்திய தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறுவது இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நீலம்,தானே,வார்தா,ஒக்கி தற்போது கஜா வரைக்கும் அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களையே குறிவைத்து தாக்குகின்றன. விதிவிலக்காக ஒக்கி கடந்த ஆண்டு நம் குமரியை ஓங்கி அறைந்து விட்டுச் சென்றது. நெல்லை அந்த லிஸ்டில் இல்லை: மழைக் காலங்களில் பெரும் புயல்கள் உருவாகும் போதெல்லாம் அது கரையை கடக்கும் மாவட்டங்களில் நம் திருநெல்வேலி இடம் பெற்றதேயில்லை. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டமாக நாம் இருந்தாலும் நாம் இருக்கும் இடம் இயற்கையிலேயே பாதுகாப்பு மிகுந்தது. நெல்லையை காக்கும் இலங்கை : ஆழியின் ஆர்ப்பரிப்பில் இருந்து நம் நெல்லையை காப்பது வேறுயாருமில்லை. நம் தாயக பூமியான இலங்கை தான். வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் தென்தமிழக கடற்பகுதிக்கு நேரெதில் அத்தீவு அமைந்துள்ளது. இதனால் வங்கக் கடல் பகுதி பிளவு பட்டு மன்னார் வளைகுடா என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. அதன் கரையோரத்தில் தான்

நெல்லையை வெளுத்து வாங்க வருகிறது பெருமழை.!

நாளை முதல் நம் நெல்லை மாவட்டத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழமுக்கத்தை ஒட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தாழ்வு மண்டலமானது மெல்ல நகர்ந்து இலங்கை தென் தமிழகம் பகுதியில் மூன்று நாட்களுக்கு நிலைகொள்ள உள்ளது. இதன் காரணமாக நெல்லை,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களின் கடலோரங்களிலும், தாமிரபரணி உருவாகும் பொதிகை மலைப் பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாம்.! இம்மழை 9ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு பருவ காலத்தின் போது மிகுதியான மழைப் பொழிவை நம் நெல்லை மாவட்டடம் பெற்றது. அதனால் அனைத்து அணைகளிலும் கணிசமான நீர் இருப்பு உள்ளது. சமீபத்திய மழையினால் அவ்வணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு பெருமழை பொழிய உள்ளதால் அணைகள் நிரம்பி தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோட வாய்ப்புள்ளது. நாளை தீபாவளி முதல் மழை வலுப்பெற உள்ளதால் நம் நெல்லையின் குட்டிச் சுட்டிகள் கவலையிலும் விவசாய பெருங்குடி மக்கள் ஆனந்த

எந்த மழைக்கும் அசராத திருநெல்வேலி.!

இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த செய்தி பல்வேறு மாவட்ட மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.  ஏனெனில், அந்தளவுக்கு மக்களை பயமுறுத்தி வைத்துள்ளது வடகிழக்கு பருவமழை. ஆனால் வடகிழக்கு பருவமழையின் சர்க்கார் நம் நெல்லையில் எப்போதுமே எடுபடுவதில்லை. அதற்கு காரணம் நம் தாமிரபரணி நதியும் அதன் அணைகளும் தான்.! நதியின் விஸ்வரூபம்! பொதிகை மலையில் ஆண்டு தோறும் மழைப் பொழிவு இருப்பதால் வற்றாத ஜீவநதியாக பாய்கிறது நமது தாமிரபரணி நதி. ஆனால், மழைக் காலங்களில் அதன் ஓட்டம் பெரும் ஆரவாரமாய் இருக்கும்.  மலையிலுள்ள மண்ணையும் மரங்களையும் வாரி சுருட்டிக் கொண்டு சமவெளியில் பாய்ந்து ஓடும்.  எனினும் அதனால் எந்த விதமான பெரும் பாதிப்பும் நம் மக்களுக்கு ஏற்ப்படுவதில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நம் நதியை நாம் பாதுகாக்கும் முறை தான். ஆற்றுக்கு அப்பால் தான் ஊர்கள்: பாபநாசத்தில் தொடங்கி புன்னைக்காயல் வரை ஆற்றுக்கு மிக மிக அருகில் எந்த ஊரும் இருப்பதில்லை. விதிவிலக்கு நம் நெல்லை மாநகரம். இதற்கு முக்கிய காரணம் வெள்ளத்தின் போது ஆறு எடுக்கும

பாரம்பரியம் குறையாத வடக்குரத வீதி.!

ஒவ்வொரு நகரிலும் புகழ் பெற்ற வணிக நிறுவனங்கள் நிரம்பிய கடை வீதிகள் பல உண்டு. பண்டிகை காலங்களிலும், திருவிழா சமயத்திலும் அங்கு குழுமும் கூட்டம் அந்த வீதிகளையே திருவிழா களங்களாக மாற்றிவிடும். தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் உள்ள ரங்கநாதன் தெரு அத்தகைய சிறப்பு வாய்ந்த பெருவீதி. மதுரையில் விளக்குத்தூண் பகுதியும் பண்டிகைகால பண்டங்கள் வாங்க ஏற்ற இடம். கோவையில் ஒப்பணக்கார வீதி வணிக பெருநிறுவனங்கள் வீற்றிருக்கும் இடமாகும்.  அந்த வரிசையில் நம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலின் வடக்கு ரத வீதி நமக்கு ஏற்ற கடை வீதியாக திகழ்கிறது. மேற்கண்ட ஊர்களில் உள்ள கடை வீதிகளை விட மிகப் பழமையானது நம் வடக்கு ரத வீதி.  நெல்லையப்பர் கோவில் கட்டியே 2000 வருடங்கள் ஆகும் போது இந்த வீதியின் வயது அதற்கும் முந்தியதாக இருக்கவே வாய்ப்புள்ளது. மதுரைக்கு தெற்கே வாழும் மக்களுக்கு சீமைத் துணிகளை விற்கும் கடைகள் இங்கு தான் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. முன்னொரு காலத்தில் திருநெல்வேலி என்றால் அது களைகட்டும் நான்கு ரதிகள் தான் என்ற நிலை இருந்தது. நெல்லையப்பர் கோவில் வாசலில் தான் திருநெல்வேலி பஸ் நிலையமும் செயல்பட

கம்பீரமான திருநெல்வேலி திரையரங்குகள்!

திருநெல்வேலி என்ற பெயருக்கே தனி கம்பீரமும் கெத்தும் உள்ளபோது, இங்கே இருக்கும் கட்டுமானங்களுக்கு இருக்காதா என்ன. நெல்லையப்பர் கோவில் கோபுரத்தின் கம்பீரம் பற்றி அனைவருக்குமே தெரியும். உயரம் குறைவாக இருந்தாலும் ராஜ கலையில் எழுந்து நிற்கும் அந்த கோபுரத்தின் அழகே தனிதான். அதேப் போல நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், சுலோச்சனார் பாலம் என பல கம்பீரமான  கட்டுமானங்கள் நம் நெல்லையில் உள்ளன. அந்த வகையில் நம் திருநெல்வேலியின் தியேட்டர்களும் தனித்துவமான கலை அழகால் நிரம்பியவை. தமிழ்நாடெங்கும் தியேட்டர்கள் படம் பார்க்க மட்டுமே கட்டப்பட்டிருந்த நிலையில் இங்கே நம் நெல்லையில் அவை கட்டிடக்கலை நுணுக்கங்களால் செதுக்கப்பட்டன என்றே சொல்லலாம். சென்ட்ரல் : இருபது வருடங்களுக்கு முன்பு வரை திருநெல்வேலியில் சினிமா என்றால் முதலில் நினைவிற்கு வருவது சென்ட்ரல் தானாம். நெல்லை சந்திப்பிற்கும் டவுணுக்கும் மத்தியில் இந்த திரையரங்கம் அமைந்திருந்ததால் இதை Central என அழைத்தார்களாம். இந்த திரையரங்கம் கட்டப்பட்ட புதிதில் ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றாக திகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மதுரை தங்கம் திரையரங்குக்கு இருந

திரண்டு ஓட தயாராகும் தாமிரபரணி.!

ஆண்டுதோறும் செப்டம்பர்-டிசம்பர் மாதங்களில் பொழியும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. இந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழைக்கான சூழல் இங்கே தென்தமிழ்நாட்டில் நிலவுகிறது. அதையொட்டி நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய கதிரறுப்பு பபணிகளும் வேகமெடுத்துள்ளது. சரியான நேரத்தில் வரும் மழை: நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற மகா புஷ்கர விழா நாளையுடன் நிறைவடைகிறது. ஒரு வேளை பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருந்தால் புஷ்கர விழா அதனால் தடைபட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறாமல் இயற்கை முழு ஒத்துழைப்பு அளித்தது. மேலும் இனி பெய்யவிருக்கும் பருவ மழையால் தாமிரபரணியில் வெள்ளம் திரண்டோட வாய்ப்புள்ளது. அப்போது புஷ்கர விழாவால் உண்டான கழிவுகள் ஆற்றோடு இழுத்துச் செல்லப்படும். அதாவது நம் தாமிரபரணி தன்னைத்தானே தூர்வாரிக்கொள்ளும்.! கொடுத்து வச்ச நதி நம்ம தாமிரபரணி.!

உண்மையிலேயே களைகட்டுகிறதா புஷ்கர விழா.?

கங்கை, யமுனைப் போல பனி சிகரங்கள் உருகுவதால் ஓடுவதல்ல நம் தாமிரபரணி. இயற்கையாய் வரும் மேகக்கூட்டங்களை பொதிகை மலை கவர்ந்திழுத்து  மழையாய் பொழிய வைத்து அவை துளித்துளியாய் பெருகி பாய்வது தான் நம் தாமிரபரணி. நம்நாட்டில் பல நதிகள் பாய்ந்தாலும் தெய்வாம்சம் பொருந்திய நதிகள் 12 தான். அதில் நம் தாமிரபரணியும் ஒன்று. விருச்சிக ராசிக்கு உரிய நதியாக நம் நதி விளங்குவதால் 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகா புஷ்கரம் இப்போது இங்கு நடைபெறுகிறது. ஆரம்பத்தில் அரசியல்: விழா குறித்து செய்து பரவிய உடனேயே அதனை அரசியல் சூழ்ந்து கொண்டது. பல காரணங்களைக் காட்டி விழாவிற்கு தடை கோரினர் ஒரு தரப்பினர்.  ஆனால் பிரச்னை நீதிமன்ற படியேறி முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக விழாவும் தொடங்கியது. ஆரம்பத்தில் களையிழந்து காணப்பட்ட புஷ்கர விழா பின்னர் சூடுபிடித்தது. புஷ்கரத்தின் தீவிரத்தை நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தான் காண முடிகிறது. தினந்தோறும் பல லட்சம் மக்கள் அங்கு குவிந்து நீராடுகிறார்கள். அதுதவிர அம்பை,கல்லிடை, வீரை, சேரை, கல்லூர்,சுத்தமல்லி,நெல்லை,அருகங்குளம் போன்ற தீர்த்தகட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடி வ

திருநெல்வேலியிலேயே தமிழுக்கு தடையா.?

தமிழ் மொழி பிறந்த பூமி, பாரதிக்கு தமிழ் ஊட்டிய மாநகரம், காலங்காலமாக பல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் நடந்து திரிந்த மண் என பல பெருமைகளை கொண்டது நம் நெல்லை மாநகரம். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக திகழும் நம் திருநெல்வேலியில் ஒரு பல்கலைக்கழகம் இல்லையே என்ற குறையை நீக்கும் விதத்தில் உருவாக்கப்படட்டது தான் நம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பகுத்து இப்பல்கலைக்கழகத்தை உருவாக்கினார் கருணாநிதி. பாரம்பரியமிக்க பல்கலை.! இப்படி தமிழ்ப் பாரம்பரியம் மிக்க இப்பல்கலைக்கழகத்தில் தான் தமிழில் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களை இது கடுமையாக பாதிக்கவுள்ளது. பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என கூறப்பட்டாலும் தமிழில் தேர்வெழுத சட்ட ரீதியாக உரிமைப் பெற்றுள்ள மாணவர்களை தடை செய்வது எவ்விதத்தில் நியாயம்.? மங்கும் புகழ் சமீப காலமாக தலைசிறந்த முன்னெடுப்புகளால் எல்லோரது கவனத்தையும் நம் பல்கலை. ஈர்த்து வந்தது. இந்நிலையில் பல்கலைகழத்தின் உயிர்நாடியாக திகழும் கிரமப்புற மாணவர்

மகாபுஷ்கரத்திற்கு நெல்லை மக்கள் அமோக ஆதரவு.!

144 ஆண்டுகளுக்கு பிறகு நம் தாமிரபரணியில் மகா புஷ்கரவிழா நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணகக்கான மக்கள் நம் நதியில் நீராட வரவுள்ளனர். இந்த நிகழ்வுக்காக தெற்கு ரயில்வேயும் ஏழு சிறப்பு ரயில்களைஅறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விழாவிற்கு எதிராக சிலர் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். தாமிரபரணியின் தூய்மை இந்த விழாவால் கெட்டுவிடும் என்றும் இதற்கு முன்  இப்படிபட்ட விழாவே நடந்ததில்லை என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள். கிருஷ்ணா நதி புஷ்கரம் . ஆனால் இவர்களின் வாதங்களை திருநெல்வேலி மக்கள் ஒதுக்கித்தள்ளியுள்ளனர். இந்த நிகழ்வை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் நெல்லை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். இயற்கையை கொண்டாடும் இந்த விழாவை நெல்லை மக்கள் வெகு சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தாமிரபரணி நதி கரையோர ஊர்களில் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. கோதாவரி புஷ்கரம் .! 148 தீர்த்தக்கட்டங்களில் விழா ஏற்பாடுகள் துரித கதியில் நடக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக கைப்பிடிகள்,தடுப்பு கம்பிகள், உடை மாற்றும் அறைகள், அன்னதான கூடங்கள் என கரையோரங்கள் களை கட்

வறண்ட நெல்லையை வாழ வைத்த சாமி.!

கல்விக் கண் திறந்தவர், ஏழைப் பங்காளர், எளிமையின் திருவுருவம் என்று அழைக்கப்பட்ட காமராஜரின் நினைவு தினம் இன்று.! தமிழக மக்கள் காமராஜரை இன்று மட்டும் நினைக்கவில்லை. அவர் என்று மரித்தாரோ அன்று முதல் இன்று வரை தலைமுறை தலைமுறையாக அவரை தினம் தினம் நாம் நினைக்கிறோம். அந்த வகையில் நம் திருநெல்வேலிக்கு காமராஜரின் பெரும் பங்களிப்பாக நாம் கருத வேண்டியது மணிமுத்தாறு பேரணை. தென் தமிழகத்தின் மிகப் பெரிய அணையான அந்த அணையை காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 1958 ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த அணையால் வீணாக கடலில் கலந்து வந்த தாமிரபரணி வெள்ளநீர் வறண்ட நிலங்களை வாழவைத்தது. கரிசல்பட்டி, திசையன்விளை போன்ற வறண்ட பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தாமிரபரணியை கொண்டு சென்றார் காமராஜர். மணிமுத்தாறு அணையின் சிறப்புகள்: • தென் தமிழகத்தின் மிகப் பெரிய அணை இது தான். • ‎5,511 மில்லியன் கன அடி தண்ணீரை இதில் சேமிக்க முடியும். • இதன் உயரம் 118 அடி. • ‎அணையின் நீளம் 3 கி.மீ. • ‎நெல்லை மாவட்டத்தின் மிகப் பெரிய அணையும் இது தான். காமராஜர் கட்டிய இந்த அணைக்கு பிறகு இந்த அளவுக்கான பிரம்மாண்ட அணை நம் மாவட்டத்தில் கட்ட

தாமிரபரணிக்காக குரல் கொடுத்த காந்தி.!

இந்திய பெருநாட்டிற்கு ஆயுதமின்றி விடுதலை வாங்கித்தந்த திரு.காந்தியின் 150 வது பிறந்தநாள் இன்று. "காந்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தவர்,இந்தியாவுக்காக போராடியவர்" என்ற கூற்றுக்குள் அவர் ஒவ்வொரு ஊருக்காகவும் போராடியது உள்ளடங்கியுள்ளது. அப்படி நம் திருநெல்வேலிக்கு அவர் எந்த விதத்தில் பங்களித்தார் என்பது குறித்த தகவல் தமிழின் முன்னணி பத்திரிகையான இந்து  தமிழில் வெளியாகியுள்ளது. செ.திவான் என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 முறை காந்தி வந்திருக்கிறார். அதில் 4 முறை அன்றைய நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளாராம். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை வந்த அவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் பாளை. வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தி உரையாற்றியுள்ளாராம். அப்போது பேசிய அவர் தாமிரபரணியில் கழிவுகளை கொட்டாதீர்கள் என நெல்லை மக்களை வேண்டியுள்ளார். அதன் மூலம் காலரா நோய்ப் பரவலை தடுக்க முடியும் என்றும் அவர் பேசியுள்ளார். அவர் பேசி 91 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் நாம

பரியேறும் பெருமாளால் நெல்லைக்கு பெருமையா சிறுமையா.?

   சமீபத்தில் வெளியான பிரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழக மக்களிடையே மனமுவந்த வரவேற்பை பெற்றுள்ளது. நம் திருநெல்வேலியை கதைக்களமாக கொண்ட படங்கள் எப்போதும் பெருவெற்றி பெறும் என்ற கூற்றுக்கு சமீபத்திய உதாரணமாக இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படத்தின் கதை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்தாலும் கதையின் கருவான காதல் நம் நெல்லையில் தான் உருப்பெருகிறது. அதுவும் இதற்கு முன் எந்த படத்திலும் காட்டப்படாத சட்டக் கல்லூரியில் அக்காதல் அரும்புவது கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது. மேலும் படத்தில் நம் திருநெல்வேலியின் சுற்றுப்புறங்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெருமையா.? சிறுமையா.? காட்சி ரீதியில் திருநெல்வேலியை மிக அற்புதமாகக் காட்டியிருந்தாலும் படத்தின்  கதாப்பாத்திரங்களாக வருபர்கள் நம் திருநெல்வேலிக்காரர்களை சரியாக பிரதிபலிக்கிறார்களா என்றால் பெருத்த சந்தேகமே ஏற்படுகிறது.  கதை பெரும்பாலும் சாதிய அவமானங்கள் குறித்தே பேசுகிறது. ஈவிறக்கமற்ற அந்த சாதியக் காட்சிகளை பார்க்க்கும் போது நம்ம திருநெல்வேலியில் இந்தளவுக்கு நடக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அது இயக்குனரின் அனுபவத்திற்கு

விரைவில் திருநெல்வேலியில் ஆம்னி பேருந்து நிலையம்.!

தமிழகத்தின் முக்கிய நகரமாகவும், மதுரைக்கு தெற்கே மிகப் பெரிய நகரமாகவும் விளங்குவது நம் திருநெல்வேலி. தினந்தோறும் பல்லாயிரக்காண மக்கள் தொழில்,வர்த்தகம் மற்றும் கல்வி சார்ந்து நம் நெல்லைக்கு படையெடுக்கின்றனர். மேலும் சுற்றுலா சம்பந்தமாகவும்,சொந்த பந்தங்களை பார்த்து விட்டு செல்லவும் நம் திருநெல்வேலிக்கு அநேகம் பேர் வருகிறார்கள். இவர்களின் பேருந்து போக்குவரத்துக்காக இரு இடங்களில் பெரிய பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. ஒன்று வெளியூர் செல்வதற்கும் மற்றொன்று மாநகர பயணங்களுக்கும் உதவுகின்றன.! பெரும் குறை : இருந்தும் தனியார் நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வெளியூர் ஆம்னி பேருந்துகளுக்கு தனி பேருந்து நிலையம் அமையாதது பெரும் குறையாக உள்ளது. பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் ஜங்ஷனையே தங்களின் நிலையமாக பயன்படுத்துவதால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் ஜங்ஷன் சிக்கித்தவிக்கிறது. கடந்த ஆண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பேருந்து நிலையம் அருகே தனிப் பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஆட்சியரின் பணி மாறுதலால் அது கைவிடப்பட்டது. இந்நிலை

திருநெல்வேலியே பொறாமைப்படும் அழகிய குமரி.!

தமிழகத்தின் கடைகோடி, இந்தியாவின் கடைகோடி மாவட்டமாக கன்னியாகுமரி இருந்தாலும் இயற்கை அதற்கு எந்த குறையும் வைக்கவில்லை. தமிழ் நிலவகைகள் ஐந்தில் நான்கு இங்கு தனது ஈவிரக்கமற்ற செழிப்பை காட்டுகின்றன. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இங்கு வாழ்கிறார்கள் குமரி மக்கள். குமரியை குட்டிக் கேரளா என்று அழைத்தாலும் தவறில்லை. திருநெல்வேலிக்கு பொறாமை : தமிழ் நிலங்கள் ஐந்தையும் உள்ளடக்கியுள்ள நம் நெல்லைக்கு குமரி பொறாமையை ஏற்படுத்துகிறது. நம் நெல்லையில் குற்றாலம் என்றால் அங்கே திற்பரப்பு, இங்கே பாபநாசம்,மணிமுத்தாறு என்றால் அங்கே பேச்சிப்பாறை,பெருஞ்சானி. நமக்கு மாஞ்சோலை என்றால் அவர்களுக்கு கோதையாறு. இங்கே உவரியென்றால் அவர்களுக்கு முக்கடல் சூழ்ந்த குமரி. ஒரே ஒரு குறை என்னவென்றால் நமக்கு கிடைத்த தேரிக் காடு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதுசரி செழித்த பூமியில் வறட்சிக்கு ஏது இடம்.! இப்படி எல்லாவற்றிலும் நமக்கு பதில் சவால் விடும் குமரி, தமிழிலும் சவால் விடுகிறது. தெளிந்த தமிழ் பேசும் நமக்கு இசை கலந்த அவர்களது நாஞ்சில் தமிழை கேட்கும் போது இனிமையாகத் தான் இருக்கிறது.

வாரி வழங்க காத்திருக்கும் வடகிழக்கு பருவமழை.!

ஆண்டுதோறும் செப்டம்பர் இறுதியில் துவங்கும் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டும் கடும் மழைப் பொழிவை தரப்போகிறதாம்.தென்மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக 30% கூடுதலாக மழை பெய்யவுள்ளதாக தனியார் வானிலை மைய அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.  மன்னார்குடியை சேர்ந்த பிரபல வானிலை ஆய்வாளர் திரு செல்வக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நமது உழவன் என்ற வாட்ஸப் குழுவிலும் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே கேரளாவை புரட்டிப் போட்ட பெருமழை நம் தாமிரபரணியிலும் வெள்ளப்பெருக்கை உண்டாக்கியது. இந்நிலையில் வரும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் நெல்லைக்கு மழை அதிகம் கிடைக்கும் என்ற செய்தி விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அணைகளில் போதிய கொள்ளளவு இல்லாததால் வெள்ளநீர் வீணாக கடலுக்கு செல்லும் என்பதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். எனினும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் இத்தகவலை நாம் கொண்டாடலாம்.! 

நீங்க பாளையங்கோட்டையா.? அப்ப கஷ்டம் தான்.!

பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வரும் செப் 24 முதல் அக். 7 வரை கடுத்த அவதி காத்திதிருக்கிறது. பாளைக்கு மின்சாரம் வரும் மின்பாதையில் "திடீர்" பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அன்றைய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு நடவடிக்கையை பாளை உப மின்நிலையம் எடுக்கவுள்ளது. பாதிக்கப்போகும் பகுதிகள்: புது பஸ்டாண்ட்,ரெட்டியார்பட்டி,மேலப்மபாளையம், ம.ராஜ.நகர்,தி.ராஜ.நகர்,சிவந்திபட்டி,பெருமாள்புரம்,பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை,சாந்தி நகர், கே.டி.சி நகர்,வி.எம்.சத்திரம். இந்த மின்தடையால் நெல்லையின் பாதி மாநகர பகுதிகள் பகல் நேரத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் தொடங்கி செய்துங்கநல்லூர் வரை மின்தடை ஏற்பட உள்ளதால் வீடுகள்,பள்ளி,கல்லூரிகள்,மருத்துவமனைகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட உள்ளனர். இப்போது வறுத்தெடுத்துவரும் வெயில் அப்போதும் தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.!

ஜொலிக்கப்போகிறது ஜங்சன் பேருந்து நிலையம்.!

(படம் : இந்து தமிழ்) நம் நெல்லை மாநகரின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும், நகரின் இதயமாகவும் விளங்குவது ஜங்சன் பேருந்து நிலையம். நெல்லை மக்களால் ஜங்சன் என்றும் பழைய பஸ்டாண்ட் என்றும் அழைக்கப்படும் இந்த பேருந்து நிலையத்திற்கு பகுத்தறிவுப் பேரொளி பெரியாரின் பெயரை மாநகராட்சி நிர்வாகம் சூட்டியுள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. பொலிவுறு நகரங்கள் (Smart City) திட்டத்தின் கீழ் இந்த பணியை நம் மாநகராட்சி நிர்வாகம் செய்யவுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் துவங்கும் எனவும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை வேறு இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. வசதிகள் : 79 கோடியில் இந்த திட்டம்செயல்படுத்தப்படுகிறது. வாகன நிறுத்துமிடம், நவீன கடைகள், நகரும் படிக்கட்டுகள், பேருந்து புறப்பாடு பற்றிய அறிவிப்பு வசதிகள், நவீன இருக்கைகள் என பல வசதிகள் வரவுள்ளதால் நம் ஜங்சன் தலைகீழாக மாறப்போகிறது. நவீன நெல்லையை காணத் தயாராவோம்.!

கடும் வெயிலால் அல்லல்படும் நெல்லை.!

கேரளத்தில் பருவமழை ஓய்ந்ததை அடுத்து நம் நெல்லையில் வெயிலின் உக்கிரம் உச்சியில் நின்று ஆடுகிறது. கடந்த மூன்று மாதங்களாக கேரளத்தை நனைக்க வந்த தென்மேற்கு பருவமழை நம் நெல்லையையும் எட்டிப் பார்த்ததால் நம் மாவட்டமே சாரல் மற்றும் தென்றலில் சிலிர்த்திருந்தது. ஆனால் தற்போது மே மாத வெயிலுக்கு நிகராக பகல் நேர வானிலை வாட்டி வதைக்கிறது. வீட்டில் இருந்தாலும் வெக்கை சூழ்ந்துள்ளதால் மக்கள் ஆறு, வாய்க்காலுக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வப்போது மின்வெட்டும் ஏற்படுவதால் பெரும் சிரமத்திற்கு நெல்லை மக்கள் உள்ளாகியுள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நம் நெல்லையை குளிர்வித்து தாமிரபரணியை புரண்டோட செய்யவேண்டும் என நெல்லை மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 

மதத்தால் அல்ல மனிதத்தால் வாழ்கிறது நம் நெல்லை.!

திருநெல்வேலி என்ற பெயருக்குத்தான் எத்தனை பெருமைகள். இயற்கை அள்ளித்தந்தது ஏராளம் என்றாலும், நம் பண்பாட்டாலும் பழக்கவழக்கத்தாலும் நாம் சேர்த்த சொத்துகளுள் முக்கியமானது மதநல்லிணக்கம். தமிழ்நாட்டில் திருநெல்வேலியை விட மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு மாநகரம் இருக்க முடியாது. இந்துக்களால் நெல்லையும், இஸ்லாமியர்களால் மேலப்பாளையமும், கிருஸ்தவர்களால் பாளையும் உயிர்பெற்று செழித்தன. நெல்லையப்பர் தேரோட்டம் இந்துக்களுக்கானது மட்டுமல்ல திருநெல்வேலிக்கானது. மேலப்பாளையத்தின் ரம்ஜான் பிரியாணி வாசத்திற்கு திருநெல்வேலியே அடிமை. பாளை கிருஸ்தவக் கல்லூரிகளும் பள்ளிகளும் திருநெல்வேலிக்கே ஞான ஒளி ஊட்டின. வெளிநாட்டில் இருந்து மதத்தை பரப்ப வந்தவர்களை மனம் மாறச் செய்து சமூகச் சேவை பக்கம் திருப்பிய மண் இந்த திருநெல்வேலி மண். ஆங்கில சீமைதுரைகளையும் காதல் கொள்ளச் செய்த தமிழ் நம் நெல்லைத் தமிழ். இப்பேற்பட்ட பூமியில் மத வன்முறையா.? நம் நெல்லை மதத்தால் அல்ல, மனிதத்தால் உயிர் வாழும் மண்.! அத்தகைய பாரம்பரிய பண்பாட்டின் மீது கல்லெரிவதை நாம் அனுமதித்தல் ஆகாது. மதத்தை விலக்கி மனிதம் காப்போம். ஒற்றுமைய

நெல்லைக்கு மேல் அடுத்தடுத்து பறந்த விமானங்கள்.!

(இணையப்படம்) சற்றுமுன்னர் அடுத்தடுத்து மூன்று விமானங்கள் நம் நெல்லை நகரின் வான் வீதியை தாழ்வாக கடந்து சென்றது. ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் கடந்து சென்றது புதிய நிகழ்வாக கருதப்படுகிறது. வழக்கமாக திருவனந்தபுரம்-கொழும்பு விமானங்கள் நெல்லை மாவட்ட வான் வீதியை கடந்து செல்வது வழக்கம். அதுவும் ஒரு நாளைக்கு எப்போதாவது கண்ணில் தென்படும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக அடுத்தடுத்து மூன்று விமானங்கள் நெல்லை மாநகர வான் வீதியில் தாழ்வாக பறந்து சென்றது புரியாத புதிராக உள்ளது. இது குறித்து ஊடகங்களிலும் செய்தி ஏதும் வெளியாகவில்லை.

நெல்லையில் ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் கோவில்.!

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பலருக்கு நண்பராக, கடவுளாக விளங்குபவர் விநாயகர். இன்னும் சிங்கிளாக விளங்குவது அவரது தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட விநாயகருக்கு நம் நெல்லையில்  ராஜாகோபுரத்துடன் கூடிய தனிக் கோவில் கம்பீரமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா.? தாமிரபரணி நதிக் கரையோரத்தில் மணிமூர்த்தீஸ்வரம் என்னும் இடத்தில் அழகிய கோவில் ஆனைமுகனுக்கு அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு என்று பிரத்யேகமாக பல கோவில்கள் இருந்தாலும், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையார் கோவில் என்ற பெருமை நம் நெல்லை. மணிமூர்த்தீஸ்வரம் கோவிலுக்கே உண்டு. பிள்ளையார்பட்டியில் கூட துணைக் கடவுளாக மட்டுமே அருள்பாலிக்கும் விநாயகர் நம் நெல்லையில் மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நம்ம ஊரு விநாயகர் கமிட்டெட் ஆன விநாயகராக இங்கு வீற்றிருக்கிறார். ஆம், விக்னேஷ்வரி என்ற பெண் தெய்வத்தோடு  இங்கு அருள்பாளிக்கிறார் நம்மூரு உச்சிஷ்ட்ட விநாயகர். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், விழாக் கோலம் பூண்டுள்ளது இக்கோவில். வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து இக்கோவிலுக்கு சாலை வசதி உண்டு.! விநாயகர் சதுர்த்த

தாமிரபரணி மகாபுஷ்கரணி ஏன் நெல்லைக்கு முக்கியம்.?

திருநெல்வேலியின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்கும் நம் தாமிரபரணி நதியில் வரும் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 22 வரை மகா புஷ்கரணி விழா நடைபெறவுள்ளது. ஞானத்திற்கு உகந்தவராக கருதப்படும் குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு மகா புஷ்கரமாக கொண்டாடப்படவுள்ளது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால் இந்திய அளவிலான முக்கியத்துவத்தை நம் தாமிரபரணி நதி பெற்றுள்ளது. இன்னும் 144 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இவ்விழா மீண்டும் நம் மண்ணில் நிகழுமாம். எனவே இது குறித்து நெல்லை மக்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்விற்கு எதிராக சில கட்சிகளும் அமைப்புகளும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிகழ்வால் தாமிரபரணி பெருமளவு மாசுபட்டு விடும் என்றும் இந்நிகழ்வு இதற்கு முன்பு நெல்லையில் நடந்ததில்லை என்றும் பல வாதங்களை முன்வைக்கிறார்கள்.  1882 திருநெல்வேலி சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகவில்லை என்ற நியாயமற்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். இது நெல்லை மக்களை ஒரு வித கவலையில் ஆழ்த்தியுள்ளது.  ஏற்கனவே பன்னெடுங் காலமாக நெல்லையின் கலாச்சாரமும், அரும்பெருமைக

திருநெல்வேலியை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து.!

அயர்லாந்திலிருந்து நம் நெல்லைக்கு வந்து தமிழ் தொண்டாற்றி மறைந்த மொழியியல் அறிஞர் கால்டுவெல் பற்றிய கட்டுரையை கவிஞர் வைரமுத்து நேற்று பாளையங்கோட்டையில் அரங்கேற்றினார். இந்நிகழ்விற்கு வைகோ தலைமை தாங்கினார். அதில் பேசிய கவிஞர் வைரமுத்து நம் திருநெல்வேலியின் பெருமைகளை சிலாகித்துப் பேசினார். குற்றாலத்தைப் போன்ற அழகும்,குளுமையும் நிறைந்த நீர்வீழ்ச்சிகள் உலகில் வேறு எங்குமே இல்லை என கால்டுவெல் தனது புத்தகத்தில் எழுதியிருப்பதாக வைரமுத்து தெரிவித்தார். மேலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக நெல்லைச் சீமை விளங்க கால்டுவெல்லும் ஒரு வகையில் காரணமாக இருந்ததாக அவர் கூறினார். நம் திருநெல்வேலி மண்ணில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை அவர் உணர்ச்சிப் பொங்க கூறிய போது நூற்றாண்டு அரங்கமே ஆர்ப்பரித்தது. விசிலும் பறந்தன. மேலும், திருநெல்வேலியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல இவ்வூரில் வாழும் அஃறிணைகளுக்கும் சுயமரியாதை உணர்வு அதிகம் என வைரமுத்து பேசினார். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே முடியும் ஒரே ஜீவநதியான தாமிரபரணியே அதற்கு சாட்சி என்ற போது கைதட்டல்கள் அரங்கை நிறைத்தன.! கால்டுவெல் ப