Skip to main content

Posts

Showing posts from January, 2018

போயஸ் கார்டன் - அத்தியாயம் 2.

          அரசியலுக்கு வருவேன், வருகிறேன்.. எனக்கூறிக் கொண்டிருந்த ரஜினி, இதோ நான் வந்தே விட்டேன் என்று அறிவித்து விட்டார். இதன் மூலம் கோடம்பாக்க சினிமாவின் அந்தஸ்து கூடியிருக்கிறது. இன்னும் முக்கியமாக போயஸ் கார்டனின் கெத்து கூடியிருக்கிறது. ஜெயலலிதா அரசியலில் இருந்த நாள் வரை  அவரது போயஸ் கார்டன் வேதா நிலையம் டெல்லி அதிகார பீடத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் இருந்தது. தனது முக்கியமான அரசியல் முடிவுகளை இந்த இல்லத்தில் வைத்தே ஜெயா எடுத்தார். வாஜ்பாய்   தலைமையிலான இந்திய அரசை கவிழ்க்கும் முடிவையும் இந்த இல்லத்தில் வைத்தே ஜெ. எடுத்தார். நாட்டின் பிரதமர் தொடங்கி அதிமுக்கிய அரசியல் தலைவர்கள் வரை போயஸ் கார்வடனுக்கு  வராமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை ஜெயலலிதா ஏற்படுத்தி வைத்திருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் சசிகலா அங்கு தங்கியிருந்ததால் கார்டன் அரசின் அதிகார மையமாக தொடர்ந்து இருந்து வந்தது.ஆனால் அவர் சிறைக்கு சென்ற பிறகு கார்டன் தனது அந்தஸ்தை மெல்ல இழக்கத் தொடங்கியது.  ஆனால் தற்போது ரஜினியின் அரசியல் வருகையால் போயஸ் கார்டனுக்கு மீண்டும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. ரஜினி மக்க