Skip to main content

Posts

Showing posts from May, 2018

காலா: தூரத்தில் ஒலிக்கும் நெல்லைக் குரல்.!

ரஜினி நடித்து விரைவில் வெளிவரவுள்ள காலா திரைப்படம் ஊரை விட்டு பம்பாய்க்கு பிழைக்கச்சென்ற திருநெல்வேலி குடும்பங்களின் கதையை திரையில் பேசவுள்ளது. அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாய நிலங்களற்ற மக்கள் பிழைப்பு தேடி பம்பாய் மாநகரில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு பின்னர் அவர்களின் சொந்த பந்தங்களும் பம்பாய்க்கு சென்று உருவாக்கியதே இன்றைய தாராவி. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் இன்றும் தமிழர்களே பெரும்பான்மையாக வசித்துவருகின்றனர். தாராவி இன்றைய மும்பையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் அந்த இடத்தின் மதிப்பு பல ஆயிரம் மடங்காக அதிகரித்துள்ளது. காலங்காலமாக தமிழர்களே அந்த இடத்தை புழங்கி வந்திருந்தாலும், அவர்களை அகற்ற பம்பாய் தாதாக்கள் எடுத்த முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. அப்படி எடுத்த முயற்சிகளுக்கு கடும் சவாலாக நம் திருநெல்வேலி தமிழ் மக்கள் இருந்துள்ளனர். பல நேரங்களில் பம்பாய் தாதாக்களை நம் நெல்லையை சேர்ந்த மக்கள் அவர்களின் வழியிலேயே விரட்டியடித்த கதைகளை இப்போதும் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் வசிக்கும் பம்பாய் குடும்பத்தினரிடம் கேட்கலாம். காலா என்ற பெயரோடு இந்த படத்த

குற்றாலத்தில் துவங்கியது சீசன்.!

தென்மேற்கு பருவமழை நேற்று கேரளாவில் தொடங்கியது. இதனால்  நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் வெள்ளம் தணிந்து மிதமான தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, பழைய குற்றாலம்,ஐந்தருவி,புலியருவி முதலியவற்றில் குளிப்பதற்கு ஏற்றவாறு தண்ணீர் விழுகிறது.தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான தென்றல் தவழ்வதாலும் விட்டு விட்டு தூறல் தூற்றுவதால் இந்தாண்டுக்கான சாரல் காலம் (சீசன்) தொடங்கிவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். வாரத்தின் இரண்டாம் நாளான இன்று குற்றாலத்தில் கூட்டம் அவ்வளாக இல்லை. எனினும் வார இறுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.!

குற்றால சீசனில் திருநெல்வேலி எப்படி இருக்கும்.?

குற்றாலத்தில் சீசன் துவங்கிவிட்டால் தென் தமிழக மக்களுக்கு ஆனந்தம் பூரிக்கும். அருவியில் குளித்து மகிழலாம் என்பது ஒரு புறம் இருந்தாலும் குற்றால சீசன் தென் மாவட்ட வானிலையை முற்றிலுமாக மாற்றிப்போட்டுவிடும் என்பதே அதற்கு காரணம். தென்காசி,செங்கோட்டை முதலிய நகரங்கள் குற்றால சாரலை நேரடியாக அனுபவிக்கும். நெல்லையின் மேற்கு பகுதிகளான பாபநாசம், சேர்வலார் முதலிய பகுதிகளிலும் மழை அடிக்கும். திருநெல்வேலியில் எப்படி இருக்கும்.? குற்றாலம் சாரலில் நனைந்து கொண்டிருக்கும் போது திருநெல்வேலி மாநகரம் தென்றலால் தாலாட்டப்பட்டு கொண்டிருக்கும். மலையாள மழை மேகங்கள் தாங்கள் கொண்டுவந்த நீரை  குற்றாலத்தில் முழுவதும் இறக்கி வைத்துவிட்டு நெல்லையில் குளிர் காய விரைந்து வரும். ஆனி,ஆடி முதலிய மாதங்களில் திருநெல்வேலியில் புதுத் தென்றல் விசும். அவ்வப்போது சாரலும் அடிக்கும். மிதமான வானிலையே நிலவும். புதுவித அனுபவத்தை அது தரும்.

அநீதியை விரட்டியடித்தது தூத்துக்குடி.!

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடி வந்த ஸ்டெர்லைட் சற்றுமுன் இழுத்து மூடப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வன மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசியலமைப்பு நெறிமுறைகளை பின்பற்றும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் தூங்காமல் தூத்துக்குடி போராடியதற்கான பலனை முத்துநகரம் இப்போது பெற்றுள்ளது. 13 அப்பாவி உயிர்களை தியாகம் செய்து இந்த வெற்றியை தூத்துக்குடி பெற்றிருப்பது அம்மண்ணுக்கு கிடைத்துள்ள விடுதலையாக கருத முடியும். வெள்ளைக்காரனுக்கு எதிராக சீறி அவனை துரத்தியடித்த தூத்துக்குடி, தற்போது தனக்கு எமனாக வந்த வேதாந்தா நிறுவனத்தையும் அடித்து விரட்டியுள்ளது. தூத்துக்குடி மூலம் பல கோடி ரூபாய் வர்த்தக லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட், இன்றைக்கு அதன் அடாவடி செயல்பாடுகளால் அம்மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டுள்ளது.! "அன்பா வந்தா ஒளிகொடுப்போம் வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்.!" இதை தூத்துக்குடி தமிழர்கள் செய்து காட்

திருநெல்வேலியிடம் தோற்றுப்போன அக்னிநட்சத்திரம்.!

தமிழ்நாட்டு நிலப்பரப்பை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைய உள்ளது. சித்திரை மாதத்தின் உட்சபட்ச வெப்பம் இந்த காலக்கட்டத்தில் நிகழும். ஆனால், நம் திருநெல்வேலியை பொறுத்த அளவில் இந்த அக்னி நட்சத்திரம் பொதுவாக எடுபடுவதில்லை. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் நெல்லையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. சில நாட்களில் மழையும் பெய்தது. சென்ற ஆண்டும் இதே போன்ற நிலையே நீடித்தது. இதை வைத்து நெல்லை மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது பிற ஊர் மக்கள் அய்யய்யோ என்ற போதும் நம் நெல்லை அரண்டது கிடையாது. அதேப் போல அது முடிவடையும் போதும் அப்பாடா என்று சொல்லும் வழக்கமும் நம் நெல்லையின் அகராதியில் கிடையாது. அது தான் நெல்லை.!

தூத்துக்குடியை இனியும் சீண்டாதீர்கள்.!

தூத்துக்குடியின் மிகப் பெரிய ஆலைகளுள் ஒன்றான ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் போராடியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தங்கள் நிலத்தையும், காற்றையும் விஷத்தில் இருந்து விடுதலை பெற வைக்க தூத்துக்குடி மக்கள் திரண்டெழுந்தனர். இவ்வாறு தூத்துக்குடி மக்கள் திரண்டெழுவது இது முதல் முறையல்ல. நாட்டுக்கே விடுதலை தந்த பூமி: இந்திய நிலப்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வெள்ளைக்காரன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது அன்றைய நெல்லையும் தூத்துக்குடியும். வ.உ.சி ஆங்கிலேய கப்பல்படைக்கு சவால் விட்டு சுதேசி கப்பலை விட்ட போது மிரண்டு போனான் பிரிட்டிஷ் காரன். பாரதி தன் கவிதைகளால் சாட்டையை சுழற்ற, சுப்ரமணிய சிவா முதலியவர்கள் தணியாத வேட்கையோடு சுதந்திர போரில் ஈடுபட்டிருந்நனர். அதற்கு முன்பே கட்டபொம்மன் தூக்கு கயிறுக்கு முத்தமிட்டு மாண்டது இந்த மண்ணில் தான் நிகழ்ந்திருந்தது. இப்படி தங்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து போரிட்டு ஒட்டு மொத்தமாக இந்திய நாட்டிற்கே விடுதலை தந்த மண் தூத்துக்குடி. ஆனால், தற்போது பல்வேறு உள்நாட்டு அரசியல் சூழ்ச்சிகளால் ஆங

தாயை இழக்கிறோம்.?

தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரபரணி 4,000 அடி உயரமான அகத்திய மலையில் பிறக்கிறது. வித விதமான மூலிகை மரங்களை தழுவி பாய்வதால் இதற்கு மருத்துவ நதி என்ற பெயரும் உண்டு. சுமார் 120 கி.மீ பாயும் இந்த நதி நெல்லை,தூத்துக்குடி மாவட்ட விவசாயத்தை செழிக்க வைக்கிறது. தமிழகத்தில் ஆபத்தில் சிக்கியுள்ள நதிகளில் முதன்மையானதாகவும் தாமிரபரணியே திகழ்கிறது. இரண்டு மாவட்ட விவசாயத்திற்கும் ஐந்து மாவட்ட குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் இந்த நதிக்கரையோரம் ஏராளமான தொழிற்சாலைகள் முளைத்துள்ளதே அதற்கு காரணம். தொழிற்சாலைகளின் இயக்கத்திற்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் நீர் ஆற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது. எனினும் தொழிற்சாலைகளுக்கு அடுத்து தாமிரபரணியை நாம் தான் அதிகமாக மாசுபடுத்துகிறோம். பாபநாசத்தில் மலையிலிருந்து இறங்கி சமவெளியில் தாமிரபரணி ஓடத் துவங்குகிறது. அதில் இருந்து வி.கே.புரம், அம்பை,கல்லிடைக்குறிச்சி,சேரன்மகாதேவி முதலிய ஊர்களில் நதி மாசுபாட்டை சந்திக்கிறது.  ஆலைக் கழிவுகளும் ஆற்றில் சேர்கின்றன. அதை தொடர்ந்து திருநெல்வேலி மாநகருக்குள் தாமிரபரணி நுழையும் போது மிகக் கொடுரமாக ஆறு மாசுபடு

நெல்லையின் முதல் பெண் ஆட்சியர் - ஷில்பா.!

திருநெல்வேலி மாவட்டத்தின் 214 வது ஆட்சியராக திருமதி ஷில்பா பிரபாகர் பொறுப்பேற்றுள்ளார். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் இதுநாள் வரை ஆண்களே ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் முறையாக ஒரு பெண் ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தொழில் துறை அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்படிப்பு முடித்துள்ள திருமதி ஷில்பா தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்களுள் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். மேலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக திருநெல்வேலி விளங்குவதாகவும் பெருமையோடு தெரிவித்துள்ளார். சந்தீப் நந்தூரியின் இடமாற்றத்தால் ஏற்பட்டுள்ள குறையை இவர் நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மேலெழுந்துள்ளது.நிர்வாக சவால்கள் அதிகம் இருக்கும் மாவட்டமான நம் நெல்லைக்கு சேவையாற்ற வந்துள்ள திருமதி ஷில்பாவிற்கு வாழ்த்தும் வரவேற்பும் அளிப்போம்.!

ஆட்சியர் இடமாற்றம்; நெல்லைக்கு பின்னடைவு.?

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டிருப்பது நெல்லைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. சந்தீப் நந்தூரி நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு பணிகளை மக்கள் ஆதரவோடு நிறைவேற்றினார். குறிப்பாக தாமிரபரணி ஆற்றை மாணவர்களின் உதவியோடு தூய்மை படுத்தியது, இந்தியாவிலேயே முதல்முறையாக அன்பு சுவர் திட்டத்தை துவங்கியது, தமிழ்நாட்டில் முதல்முறையாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேட்ரி கார் சேவையை துவங்கியது என பல திட்டங்களை நிறைவேற்றி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார். மேலும் நெல்லையப்பர் கோவிலின் மீது தனி அக்கறை எடுத்துக்கொண்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுத்தார். நெல்லை மாவட்ட கோவில்களை உலகறியச் செய்யும் டாக்கிங் டெம்பிள் முதலான டிஜிட்டல் யுகம் சார்ந்த சேவைகளில் கவனம் செலுத்தினார்.  எனினும், சில மாதங்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டு தற்கொலை சம்பவம் நடந்தபோது அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதேப் போல நெல்லையில் ராம ராஜிய ரதம் நுழைந்த போது 144 தடை விதித்த போதும் சர்ச்சையில் சிக்கினார். இருந்தபோ

குற்றால சீசனுக்கு தயாராகுங்கள்.!

குற்றால சீசனுக்கு மூலமாக விளங்கும் தென்மேற்கு பருவ மழை தென்னிந்தியாவில் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் வரும் வாரங்களில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வெகு விரைவில் குற்றால சாரல் காலம் துவங்கவுள்ளது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததும் குற்றாலத்திலும் சீசன் களை கட்டும். தென் மாவட்டங்களில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இயற்கை அளிக்கும் குளிர்ச்சியை அனுபவிக்க தயாராவோம்.

மூச்சுவிட திணறும் முத்துநகரம்.!

தமிழ்நாட்டு நிலப்பரப்பில் தூத்துக்குடியின் அமைவிடம் சிறப்பு வாய்ந்தது. குறிஞ்சி தவிர்த்து மீதம் நான்கு வகையான நிலங்களும் அம்மாவட்டத்தில் உண்டு. தெற்கே தாமிரபரணி பாய்ந்து செழிக்க வைத்தாலும் பிற பகுதிகளில் வறட்சியே நிலவுகிறது. இது தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு சாதகமாகி விடுகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தூத்துக்குடியில் கோரல் மில் என்ற நூற்பாலை செயல்பட்டது. ஆனால்  இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தூத்துக்குடி ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளால் சீரழியத் துவங்கியது. ஒரு புறம் வேலைவாய்ப்பு, வருமானம் என மக்களின் வாழ்கை தரம் உயர்ந்தாலும், மறுபுறம் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மாவட்டம் ஸ்தம்பித்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் மட்டுமே  இந்திய அரசின் அனல்மின் நிலையம் (இரண்டு) ஸ்பிக் உரத் தொழிற்சாலை, இன்பிற ஆலைகள் என பெரிய தொழிற்சாலைகளின் கேந்திரமாக தூத்துக்குடி மாற்றப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலை தாமிர உருக்கு ஆலையாக செயல்பட்டு தூத்துக்குடி ஊருக்கே உலை வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனின் கழிவுகளால் சுற்றுவட்டார மக்களுக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுவதாக கிராமத்தினர் கூக்குரலிடுகிறார்கள். த

அன்று திருநெல்வேலி; இன்று தூத்துக்குடி.!

இந்திய சுதந்திரத்திற்கு ஏராளமான தியாகிகளை தந்த மண் தூத்துக்குடி (அன்று நெல்லை மாவட்டம்). இன்று விஷக்காற்றில் இருந்து விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறது. அமைதி வழியில் திரண்ட அப்பாவி மக்களை காவல் துறை துப்பாக்கியால் எதிர் கொண்டதில் 11 பேர் செத்து மடிந்திருக்கிறார்கள். மே மாதத்தில் நடந்த வன்முறை சம்பவம் சுதந்திர போராட்டத்தை நினைவு படுத்துகிறது. அரசை தட்டிக்கேட்கும் மக்களை வன்முறையால் ஒடுக்குவது ஏற்கனவே திருநெல்வேலியில் நடந்துள்ளது. அன்று திருநெல்வேலி: ஜீலை 23 1999 ல் இதே போன்ற பிரம்மாண்ட பேரணியை நெல்லை மாநகரம் சந்தித்தது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பெருந்திரளாக திரண்டு போராட்டம் நடத்தினர். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்ற போது, பெரும் தடியடி நடத்தி காவல்துறை விரட்டியடித்தது. துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறுவார்கள். அந்த கோர சம்பவத்தில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் குதித்தும், நெரிசலில் சிக்கியும் செத்துப் போயினர். இன்று தூத்துக்குடி: ஆனால் அதை விட பயங்கரமாய் இன்று தூத்துக்குடியில் 11 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர்

பாண்டிய நாட்டின் இருபெரும் சீமைகள்.

பாண்டிய நாட்டிற்கு பெருமைகள் பல இருக்கின்றன. ஆனால், அவற்றுள் முக்கியமானது இரண்டு. ஒன்று- மதுரை. மற்றொன்று நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலி. பாண்டியர்கள் இந்த இரண்டு நகரங்களையே தங்களின் தலைநகரமாக வைத்திருந்தார்கள். இந்த இரு நகரங்களுக்கும் ஏராளமான ஒற்றுமைகளும் உண்டு. இரு நகரங்களும் ஆற்றங்கரையோரம் அமைந்த நகரங்கள். இரு நகரங்களும் மாபெரும் கோவில்களை கொண்ட நகரங்கள். இரண்டும் தமிழ் வளர்ச்சியில் முன்னின்ற பெருமை கொண்டவை. நெல்லை பொதிகை மலையில் பிறந்த தமிழுக்கு மதுரையில் சங்கம் வைத்து வளர்த்தனர் பாண்டி நாட்டு தமிழ்மக்கள். தாமிரபரணி கழிமுகத்தில் பிறந்த முத்துகள் மதுரை ராஜ கிரீடங்களை அலங்கரித்த நாட்களும் உண்டு. பண்டைய தமிழகத்தில் இரு பெரும் நகரங்களாக இவை தான் திகழ்ந்திருக்கின்றன. சைவ வைணவ சமத்துவ களங்களாகவும் இவ்வூர்கள் திகழ்கின்றன. மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை பெருவிழா இதற்கு எடுத்துக்காட்டு. அதே போல் வேறெங்குமே காண முடியாத அதிசயமாக திருமாலும்,சிவனும் அருகருகே அமைந்த கருவறை நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ளது. இன்றும் வீரத்திற்கும் தீரத்திற்கும் இந்த இரு நகரங்களே அ

திருநெல்வேலியின் பென்னிகுவிக்.!

முல்லைப்பெரியாறு அணையை கட்டி மதுரை சுற்றுவட்டார கிராமங்களை பாதுகாத்தவர் திரு.பென்னிகுவிக். வெளிநாட்டில் இருந்து வந்து தமிழகத்தின் வாழ்வு காத்த அவரை தென்மாவட்டங்கள் என்றுமே மறவாது. அப்படி செங்கல்பட்டில் இருந்து வந்து நம் நெல்லை மக்களின் பெருந்தேவையை 1860ம் ஆண்டு தீர்த்து வைத்தவர் திரு. சுலோச்சனார். அன்று திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் பெருந்தொலைவில் இருந்தன. அன்று சீமையாக திகழ்ந்த நெல்லைக்கு பாளை பகுதி மக்கள் வரவேண்டுமெனில் ஆற்றை கடந்தே வர வேண்டும். வசதி உள்ளவர்கள் படகை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலைமை வெகு நாட்களாக நிலவி வந்துள்ளது. நாளடைவில் இரு நகரங்களும் வளர ஆரம்பித்ததும் நதியை கடக்க மக்கள் பெரும் சிரமப்பட்டுள்ளனர். இதை ஆங்கிலேயர்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டார்கள். பாலம் கட்டவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்த போதும் ஆங்கிலேய கலெக்டர்கள் அதை ஏற்கவேயில்லை. பெரும் செலவு செய்ய ஆங்கிலேய அரசு அப்போது பெரிதும் யோசித்தது. இந்த நிலையில் நெல்லை ஜில்லா கலெக்டர் தாம்சனின் சிரஸ்தராக பணியாற்றிய சுலோச்சனர் இந்த பிரச்னையை கையிலெடுத்து தீர்வு காண முயன்றார். அதற்காக தனது மனைவியின் உதவ

ஏன் திருநெல்வேலியை இப்படி கேவலப்படுத்துகிறீர்கள்.?

திருநெல்வேலியை ரவுடிளின் களமாக சித்தரித்து வெளியாகியிருந்த 'சாமி' என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவர உள்ளது. இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மிகவும் மோசமாக நம் திருநெல்வேலி இப்படத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது அரிவாளின் நிழலில் திருநெல்வேலி -3 கி.மீ என்ற மைல் கல்லின் மீது போலீஸாக விக்ரம் அமர்ந்திருக்கிறார். காட்சியில் உள்ள பிழைகள்: விக்ரம் அமர்ந்திருக்கும் சுற்றுப்புறமெங்கும் வெட்டவெளியாக உள்ளது. திருநெல்வேலி சுமார் 15 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு மாநகரமாகும். ஆனால் இதில் மூன்று கி.மீ தொலைவில் திருநெல்வேலி இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. டைரக்டர் நம் நெல்லையை குக்கிராமம் என்று நினைத்துவிட்டார் போல.! அடுத்து காட்சியில் டெல்லி-திருநெல்வேலி மெயின் ரோட்டில் விக்ரம் அமர்ந்திருக்கிறார். அந்த ரோடு வடக்கு-தெற்காக நம்ம ஊரில் அமைந்துள்ளது. ஆனால் காட்சியில் கிழக்கு-மேற்காக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊருக்கு திரும்பும் திருநெல்வேலி காரர்களை அரிவாளோடு வரவேற்பதன் மூலம் நெல்லை மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துகிறது திரைக்கதை.

கர்நாடக ஆட்டம் தமிழ்நாட்டிலும் நடக்குமா.?

கர்நாடகத்தில்  அதிரடியான அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விடிய விடிய முயன்று பார்த்தும் காங். மஜதவின் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முடியாமல் பாஜக தணறியது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அரசியல் அதிரடி தமிழக மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் இது போன்று நடக்குமா என்று அவர்கள் சிந்திக்க துவங்கியுள்ளார்கள். அதற்கு வாய்ப்பும் இல்லாமல் இல்லை. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம். அந்த வழக்கிலும் தற்போது எடியூரப்பாவிற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தான் எம்.எல்.ஏக்களுக்காக வாதாடியுள்ளார். எனவே அந்த தீர்ப்பு எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாக வந்தால் அடுத்த கணமே அவர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவார்கள். அப்படி நடந்தால், எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை இல்லாமல் கவிழும். எனவே கர்நாடகத்தில் நடந்தது போன்று நம் தமிழ்நாட்டில் நடப்பதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

விரைவில் குற்றால சீசன்..!

இந்த ஆண்டு குற்றால சீசன் முன்னதாகவே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏனெனில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை வரும் மே 29 ம் தேதியே துவங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 29 தேதியில் அரபிக்கடலில் இருந்து எழும் மேக கூட்டங்கள் கேரளத்தை தழுவி மழையை பெய்விக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளத்தை மழை நனைத்துவிட்டால், கவலையே வேண்டாம். நம் குற்றாலத்திற்கான நீர் ஓடோடி வந்துவிடும். மேலும் மேகங்களும் மலையாள நாட்டை கடந்து வந்து நம் குற்றாலத்திற்கு குடைபிடிக்கும். எனவே இந்த ஆண்டும் சீசனை சிறப்பாக அனுபவிக்க தயாராவோம்.

மீண்டும் அரசு பேருந்து - மதுரை.!

2010 முதல் மதுரைக்கு தெற்கே இயங்கும் அரசுப் பேருந்துகள் அரசு பேருந்து திருநெல்வேலி என்ற தலைப்போடு இயக்கப்படுகிறது. இதற்கு காரணம் அரசுப் போக்குவரத்துக்கழக கோட்டம் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்தது. ஆனால் தற்போது அது மீண்டும் மதுரையோடு இணைக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைந்துள்ளதால் நெல்லை கோட்டம் கலைக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. எனவே, இனி திருநெல்வேலி தூத்துக்குடி,குமரி முதலிய மாவட்டங்களில் இயங்கும் அரசுப் பேருந்துகள் அரசு பேருந்து - மதுரை என்ற தலைப்போடே இயங்கும். கடந்த ஏழு ஆண்டுகளாய் அரசு பேருந்து திருநெல்வேலி என்றே பார்த்து பழகிய நமக்கு இது சங்கடமளிக்கும் செய்தியாகும்.

+2 தேர்வில் தூள் கிளப்பியுள்ள தென் மாவட்டங்கள்.

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல தென்மாவட்டங்கள் தமிழ்நாட்டிலேயே சிறப்பிடம் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக தூத்துக்குடி, சிவகங்கை, நம் நெல்லை, கன்னியாகுமரி முதலிய மாவட்டங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கிறது. நம் மாவட்ட பிள்ளைகளின் கடின உழைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் நம் பிள்ளைகளை இந்த இடத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது.