திருநெல்வேலி என்ற மாநகரின் வளர்ச்சியில் ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருநெல்வேலி என்றால் டவுண் மட்டுமே என்று இருந்தது. பாளையங்கோட்டை,மேலப்பாளையம் முதலானவைகள் தனித்தனி ஊர்களாக அமைந்திருந்தன. அங்கிருந்து நெல்லை ரத வீதிகளளுக்கு பொருட்கள், துணிமணிகள் வாங்க மக்கள் வருவார்கள். அப்போது திருநெல்வேலி பேருந்து நிலையம் டவுண் பகுதியில் செயல்பட்டது. பின்னர் திருநெல்வேலி நகராட்சி அந்தஸ்திற்கு உயர்ந்த பிறகு ரயில் நிலையத்திற்கு எதிர் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பேருந்து முனையமாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு முன்பு வரை ஜங்சன் பேருந்து நிலையமே திருநெல்வேலி பேருந்து நிலையமாக செயல்பட்டு வந்திருக்கிறது. சென்னை,மதுரை,குமரி,தூத்துக்குடி,கேரளா என அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட்டதால் பெரும் நெருக்கடியில் ஜங்சன் பேருந்து நிலையம் சிக்கி தவித்துள்ளது. 2003 ம் ஆண்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு இது மாநகர பேருந்து முனையமாக மாற்றப்பட்டது. தற்போது திருநெல்வேலி மாநகர,புறநகர பேருந்துகளால