Skip to main content

Posts

Showing posts from July, 2018

நெல்லை-பாலக்காடு ரயில் எங்கெல்லாம் நிற்கும்..?

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை இயக்கப்பட்டுவந்த பாலருவி எக்ஸ்பிரஸ் வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் நெல்லை வரை நீடிக்கப்படுகிறது. செங்கோட்டை-புனலூர் அகலப் பாதை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக ஓடவுள்ள இந்த ரயில் நெல்லையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுத்தங்கள் : புதிய பாலருவி ரயில் செங்கோட்டை,தென்காசி,பாவூர்சத்திரம், கீழக்கடையம்,அம்பை,சேரன்மகாதேவி முதலிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ரயில் ஓடத் தொடங்கினால் நெல்லை-கேரளா இடையே தொழில்  மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லையில் அமையுமா ஐஐடி , என்ஐடி.?

    தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமை நம் திருநெல்வேலிக்கு உண்டு. நெல்லையின் பாளையங்கோட்டை கல்லூரி,பள்ளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நகரம்.  தென்தமிழகம் இன்று அடைந்திருக்கும் கல்வி வளர்ச்சியில் பாளையங்கோட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் பட்டதாரிகள் இன்று உலகம் முழுதும் செல்வாக்கு மிக்க இடத்தில் அமர்ந்துள்ளனர்.  சில ஆண்டுகள் முன்பு வரை அறவே தொழில் வளர்ச்சி இல்லாத நிலை நெல்லையில் தற்போது மாறிவருகிறது. அருகே தூத்துக்குடி மிதமான தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. நெல்லையிலும் தொழில் துறை அரும்பத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு,மனிதவளம் உள்ளிட்டவையும் நம்மிடம் சிறந்த வகையில் உள்ளது. தேவை ஐஐடி, என்ஐடி:      கல்வி ரீதியில் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பல திருநெல்வேலியில் அமைந்திருந்தாலும் இந்திய அரசின் கல்வி நிறுவனம் நெல்லையில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளூரில் தரம் வாய்ந்த கல்வி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதுவும் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரில் ஒரு இந்திய அரசு கல்வி நிறுவனமும் இல்லாதது