Skip to main content

Posts

Showing posts from August, 2018

திருநெல்வேலியை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து.!

அயர்லாந்திலிருந்து நம் நெல்லைக்கு வந்து தமிழ் தொண்டாற்றி மறைந்த மொழியியல் அறிஞர் கால்டுவெல் பற்றிய கட்டுரையை கவிஞர் வைரமுத்து நேற்று பாளையங்கோட்டையில் அரங்கேற்றினார். இந்நிகழ்விற்கு வைகோ தலைமை தாங்கினார். அதில் பேசிய கவிஞர் வைரமுத்து நம் திருநெல்வேலியின் பெருமைகளை சிலாகித்துப் பேசினார். குற்றாலத்தைப் போன்ற அழகும்,குளுமையும் நிறைந்த நீர்வீழ்ச்சிகள் உலகில் வேறு எங்குமே இல்லை என கால்டுவெல் தனது புத்தகத்தில் எழுதியிருப்பதாக வைரமுத்து தெரிவித்தார். மேலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக நெல்லைச் சீமை விளங்க கால்டுவெல்லும் ஒரு வகையில் காரணமாக இருந்ததாக அவர் கூறினார். நம் திருநெல்வேலி மண்ணில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை அவர் உணர்ச்சிப் பொங்க கூறிய போது நூற்றாண்டு அரங்கமே ஆர்ப்பரித்தது. விசிலும் பறந்தன. மேலும், திருநெல்வேலியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல இவ்வூரில் வாழும் அஃறிணைகளுக்கும் சுயமரியாதை உணர்வு அதிகம் என வைரமுத்து பேசினார். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே முடியும் ஒரே ஜீவநதியான தாமிரபரணியே அதற்கு சாட்சி என்ற போது கைதட்டல்கள் அரங்கை நிறைத்தன.! கால்டுவெல் ப

திருநெல்வேலியும் கருணாநிதியும்.!

கருணாநிதி.! அரை நூற்றாண்டுகால தமிழக அரசியலில் தன் இருப்பை பல வழிகளில் வெளிப்படுத்தி வந்த ஓர் அரசியல் ஆளுமை. தனது திட்டங்களால் எந்த அளவுக்கு புகழப்பட்டாரோ அதே அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளான அபூர்வ அரசியல்வாதி.! கருணாநிதியின் வாழ்க்கை, முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்தியே அமைந்திருந்தாலும் திருநெல்வேலியோடு அவர் கொண்டிருந்த தொடர்பு மிக முக்கியமானது. நெல்லையை புண்ணிய பூமியாக்கிய கலைஞர் : இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சமயம் கருணாநிதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காண வந்த அண்ணா மிகவும் மனம் நெகிழ்ந்து "என் தம்பி கருணாநிதி அடைபட்டிருக்கும் இந்த இடம் நான் யாத்திரை மேற்கொள்ளவேண்டிய புண்ணிய பூமி" என்று அழைத்து பேசியது திமுகவின் வரலாற்று தருணமாகும். இந்நிகழ்வு  அண்ணா-கலைஞர் இடையேயான ஆழ்ந்த நட்பை  தமிழ்நாட்டுக்கு அறிவித்தது. " நெஞ்சினிக்கும் நெல்லை "! திமுகவின் நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாள் விழா சென்னையில் நடந்து வந்ததே வாடிக்கையாக இருந்த நிலையில் முதன் முறையாக சென்னைக்கு வெளியே நம