Skip to main content

Posts

Showing posts from September, 2018

விரைவில் திருநெல்வேலியில் ஆம்னி பேருந்து நிலையம்.!

தமிழகத்தின் முக்கிய நகரமாகவும், மதுரைக்கு தெற்கே மிகப் பெரிய நகரமாகவும் விளங்குவது நம் திருநெல்வேலி. தினந்தோறும் பல்லாயிரக்காண மக்கள் தொழில்,வர்த்தகம் மற்றும் கல்வி சார்ந்து நம் நெல்லைக்கு படையெடுக்கின்றனர். மேலும் சுற்றுலா சம்பந்தமாகவும்,சொந்த பந்தங்களை பார்த்து விட்டு செல்லவும் நம் திருநெல்வேலிக்கு அநேகம் பேர் வருகிறார்கள். இவர்களின் பேருந்து போக்குவரத்துக்காக இரு இடங்களில் பெரிய பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. ஒன்று வெளியூர் செல்வதற்கும் மற்றொன்று மாநகர பயணங்களுக்கும் உதவுகின்றன.! பெரும் குறை : இருந்தும் தனியார் நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வெளியூர் ஆம்னி பேருந்துகளுக்கு தனி பேருந்து நிலையம் அமையாதது பெரும் குறையாக உள்ளது. பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் ஜங்ஷனையே தங்களின் நிலையமாக பயன்படுத்துவதால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் ஜங்ஷன் சிக்கித்தவிக்கிறது. கடந்த ஆண்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பேருந்து நிலையம் அருகே தனிப் பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஆட்சியரின் பணி மாறுதலால் அது கைவிடப்பட்டது. இந்நிலை

திருநெல்வேலியே பொறாமைப்படும் அழகிய குமரி.!

தமிழகத்தின் கடைகோடி, இந்தியாவின் கடைகோடி மாவட்டமாக கன்னியாகுமரி இருந்தாலும் இயற்கை அதற்கு எந்த குறையும் வைக்கவில்லை. தமிழ் நிலவகைகள் ஐந்தில் நான்கு இங்கு தனது ஈவிரக்கமற்ற செழிப்பை காட்டுகின்றன. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இங்கு வாழ்கிறார்கள் குமரி மக்கள். குமரியை குட்டிக் கேரளா என்று அழைத்தாலும் தவறில்லை. திருநெல்வேலிக்கு பொறாமை : தமிழ் நிலங்கள் ஐந்தையும் உள்ளடக்கியுள்ள நம் நெல்லைக்கு குமரி பொறாமையை ஏற்படுத்துகிறது. நம் நெல்லையில் குற்றாலம் என்றால் அங்கே திற்பரப்பு, இங்கே பாபநாசம்,மணிமுத்தாறு என்றால் அங்கே பேச்சிப்பாறை,பெருஞ்சானி. நமக்கு மாஞ்சோலை என்றால் அவர்களுக்கு கோதையாறு. இங்கே உவரியென்றால் அவர்களுக்கு முக்கடல் சூழ்ந்த குமரி. ஒரே ஒரு குறை என்னவென்றால் நமக்கு கிடைத்த தேரிக் காடு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதுசரி செழித்த பூமியில் வறட்சிக்கு ஏது இடம்.! இப்படி எல்லாவற்றிலும் நமக்கு பதில் சவால் விடும் குமரி, தமிழிலும் சவால் விடுகிறது. தெளிந்த தமிழ் பேசும் நமக்கு இசை கலந்த அவர்களது நாஞ்சில் தமிழை கேட்கும் போது இனிமையாகத் தான் இருக்கிறது.

வாரி வழங்க காத்திருக்கும் வடகிழக்கு பருவமழை.!

ஆண்டுதோறும் செப்டம்பர் இறுதியில் துவங்கும் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டும் கடும் மழைப் பொழிவை தரப்போகிறதாம்.தென்மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக 30% கூடுதலாக மழை பெய்யவுள்ளதாக தனியார் வானிலை மைய அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.  மன்னார்குடியை சேர்ந்த பிரபல வானிலை ஆய்வாளர் திரு செல்வக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நமது உழவன் என்ற வாட்ஸப் குழுவிலும் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே கேரளாவை புரட்டிப் போட்ட பெருமழை நம் தாமிரபரணியிலும் வெள்ளப்பெருக்கை உண்டாக்கியது. இந்நிலையில் வரும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் நெல்லைக்கு மழை அதிகம் கிடைக்கும் என்ற செய்தி விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அணைகளில் போதிய கொள்ளளவு இல்லாததால் வெள்ளநீர் வீணாக கடலுக்கு செல்லும் என்பதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். எனினும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் இத்தகவலை நாம் கொண்டாடலாம்.! 

நீங்க பாளையங்கோட்டையா.? அப்ப கஷ்டம் தான்.!

பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வரும் செப் 24 முதல் அக். 7 வரை கடுத்த அவதி காத்திதிருக்கிறது. பாளைக்கு மின்சாரம் வரும் மின்பாதையில் "திடீர்" பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அன்றைய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு நடவடிக்கையை பாளை உப மின்நிலையம் எடுக்கவுள்ளது. பாதிக்கப்போகும் பகுதிகள்: புது பஸ்டாண்ட்,ரெட்டியார்பட்டி,மேலப்மபாளையம், ம.ராஜ.நகர்,தி.ராஜ.நகர்,சிவந்திபட்டி,பெருமாள்புரம்,பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை,சாந்தி நகர், கே.டி.சி நகர்,வி.எம்.சத்திரம். இந்த மின்தடையால் நெல்லையின் பாதி மாநகர பகுதிகள் பகல் நேரத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் தொடங்கி செய்துங்கநல்லூர் வரை மின்தடை ஏற்பட உள்ளதால் வீடுகள்,பள்ளி,கல்லூரிகள்,மருத்துவமனைகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட உள்ளனர். இப்போது வறுத்தெடுத்துவரும் வெயில் அப்போதும் தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.!

ஜொலிக்கப்போகிறது ஜங்சன் பேருந்து நிலையம்.!

(படம் : இந்து தமிழ்) நம் நெல்லை மாநகரின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும், நகரின் இதயமாகவும் விளங்குவது ஜங்சன் பேருந்து நிலையம். நெல்லை மக்களால் ஜங்சன் என்றும் பழைய பஸ்டாண்ட் என்றும் அழைக்கப்படும் இந்த பேருந்து நிலையத்திற்கு பகுத்தறிவுப் பேரொளி பெரியாரின் பெயரை மாநகராட்சி நிர்வாகம் சூட்டியுள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. பொலிவுறு நகரங்கள் (Smart City) திட்டத்தின் கீழ் இந்த பணியை நம் மாநகராட்சி நிர்வாகம் செய்யவுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் துவங்கும் எனவும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை வேறு இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. வசதிகள் : 79 கோடியில் இந்த திட்டம்செயல்படுத்தப்படுகிறது. வாகன நிறுத்துமிடம், நவீன கடைகள், நகரும் படிக்கட்டுகள், பேருந்து புறப்பாடு பற்றிய அறிவிப்பு வசதிகள், நவீன இருக்கைகள் என பல வசதிகள் வரவுள்ளதால் நம் ஜங்சன் தலைகீழாக மாறப்போகிறது. நவீன நெல்லையை காணத் தயாராவோம்.!

கடும் வெயிலால் அல்லல்படும் நெல்லை.!

கேரளத்தில் பருவமழை ஓய்ந்ததை அடுத்து நம் நெல்லையில் வெயிலின் உக்கிரம் உச்சியில் நின்று ஆடுகிறது. கடந்த மூன்று மாதங்களாக கேரளத்தை நனைக்க வந்த தென்மேற்கு பருவமழை நம் நெல்லையையும் எட்டிப் பார்த்ததால் நம் மாவட்டமே சாரல் மற்றும் தென்றலில் சிலிர்த்திருந்தது. ஆனால் தற்போது மே மாத வெயிலுக்கு நிகராக பகல் நேர வானிலை வாட்டி வதைக்கிறது. வீட்டில் இருந்தாலும் வெக்கை சூழ்ந்துள்ளதால் மக்கள் ஆறு, வாய்க்காலுக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வப்போது மின்வெட்டும் ஏற்படுவதால் பெரும் சிரமத்திற்கு நெல்லை மக்கள் உள்ளாகியுள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நம் நெல்லையை குளிர்வித்து தாமிரபரணியை புரண்டோட செய்யவேண்டும் என நெல்லை மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 

மதத்தால் அல்ல மனிதத்தால் வாழ்கிறது நம் நெல்லை.!

திருநெல்வேலி என்ற பெயருக்குத்தான் எத்தனை பெருமைகள். இயற்கை அள்ளித்தந்தது ஏராளம் என்றாலும், நம் பண்பாட்டாலும் பழக்கவழக்கத்தாலும் நாம் சேர்த்த சொத்துகளுள் முக்கியமானது மதநல்லிணக்கம். தமிழ்நாட்டில் திருநெல்வேலியை விட மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு மாநகரம் இருக்க முடியாது. இந்துக்களால் நெல்லையும், இஸ்லாமியர்களால் மேலப்பாளையமும், கிருஸ்தவர்களால் பாளையும் உயிர்பெற்று செழித்தன. நெல்லையப்பர் தேரோட்டம் இந்துக்களுக்கானது மட்டுமல்ல திருநெல்வேலிக்கானது. மேலப்பாளையத்தின் ரம்ஜான் பிரியாணி வாசத்திற்கு திருநெல்வேலியே அடிமை. பாளை கிருஸ்தவக் கல்லூரிகளும் பள்ளிகளும் திருநெல்வேலிக்கே ஞான ஒளி ஊட்டின. வெளிநாட்டில் இருந்து மதத்தை பரப்ப வந்தவர்களை மனம் மாறச் செய்து சமூகச் சேவை பக்கம் திருப்பிய மண் இந்த திருநெல்வேலி மண். ஆங்கில சீமைதுரைகளையும் காதல் கொள்ளச் செய்த தமிழ் நம் நெல்லைத் தமிழ். இப்பேற்பட்ட பூமியில் மத வன்முறையா.? நம் நெல்லை மதத்தால் அல்ல, மனிதத்தால் உயிர் வாழும் மண்.! அத்தகைய பாரம்பரிய பண்பாட்டின் மீது கல்லெரிவதை நாம் அனுமதித்தல் ஆகாது. மதத்தை விலக்கி மனிதம் காப்போம். ஒற்றுமைய

நெல்லைக்கு மேல் அடுத்தடுத்து பறந்த விமானங்கள்.!

(இணையப்படம்) சற்றுமுன்னர் அடுத்தடுத்து மூன்று விமானங்கள் நம் நெல்லை நகரின் வான் வீதியை தாழ்வாக கடந்து சென்றது. ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் கடந்து சென்றது புதிய நிகழ்வாக கருதப்படுகிறது. வழக்கமாக திருவனந்தபுரம்-கொழும்பு விமானங்கள் நெல்லை மாவட்ட வான் வீதியை கடந்து செல்வது வழக்கம். அதுவும் ஒரு நாளைக்கு எப்போதாவது கண்ணில் தென்படும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக அடுத்தடுத்து மூன்று விமானங்கள் நெல்லை மாநகர வான் வீதியில் தாழ்வாக பறந்து சென்றது புரியாத புதிராக உள்ளது. இது குறித்து ஊடகங்களிலும் செய்தி ஏதும் வெளியாகவில்லை.

நெல்லையில் ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் கோவில்.!

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பலருக்கு நண்பராக, கடவுளாக விளங்குபவர் விநாயகர். இன்னும் சிங்கிளாக விளங்குவது அவரது தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட விநாயகருக்கு நம் நெல்லையில்  ராஜாகோபுரத்துடன் கூடிய தனிக் கோவில் கம்பீரமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா.? தாமிரபரணி நதிக் கரையோரத்தில் மணிமூர்த்தீஸ்வரம் என்னும் இடத்தில் அழகிய கோவில் ஆனைமுகனுக்கு அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு என்று பிரத்யேகமாக பல கோவில்கள் இருந்தாலும், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையார் கோவில் என்ற பெருமை நம் நெல்லை. மணிமூர்த்தீஸ்வரம் கோவிலுக்கே உண்டு. பிள்ளையார்பட்டியில் கூட துணைக் கடவுளாக மட்டுமே அருள்பாலிக்கும் விநாயகர் நம் நெல்லையில் மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நம்ம ஊரு விநாயகர் கமிட்டெட் ஆன விநாயகராக இங்கு வீற்றிருக்கிறார். ஆம், விக்னேஷ்வரி என்ற பெண் தெய்வத்தோடு  இங்கு அருள்பாளிக்கிறார் நம்மூரு உச்சிஷ்ட்ட விநாயகர். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், விழாக் கோலம் பூண்டுள்ளது இக்கோவில். வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து இக்கோவிலுக்கு சாலை வசதி உண்டு.! விநாயகர் சதுர்த்த

தாமிரபரணி மகாபுஷ்கரணி ஏன் நெல்லைக்கு முக்கியம்.?

திருநெல்வேலியின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்கும் நம் தாமிரபரணி நதியில் வரும் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 22 வரை மகா புஷ்கரணி விழா நடைபெறவுள்ளது. ஞானத்திற்கு உகந்தவராக கருதப்படும் குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு மகா புஷ்கரமாக கொண்டாடப்படவுள்ளது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால் இந்திய அளவிலான முக்கியத்துவத்தை நம் தாமிரபரணி நதி பெற்றுள்ளது. இன்னும் 144 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இவ்விழா மீண்டும் நம் மண்ணில் நிகழுமாம். எனவே இது குறித்து நெல்லை மக்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்விற்கு எதிராக சில கட்சிகளும் அமைப்புகளும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிகழ்வால் தாமிரபரணி பெருமளவு மாசுபட்டு விடும் என்றும் இந்நிகழ்வு இதற்கு முன்பு நெல்லையில் நடந்ததில்லை என்றும் பல வாதங்களை முன்வைக்கிறார்கள்.  1882 திருநெல்வேலி சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகவில்லை என்ற நியாயமற்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். இது நெல்லை மக்களை ஒரு வித கவலையில் ஆழ்த்தியுள்ளது.  ஏற்கனவே பன்னெடுங் காலமாக நெல்லையின் கலாச்சாரமும், அரும்பெருமைக