ஒவ்வொரு நகரிலும் புகழ் பெற்ற வணிக நிறுவனங்கள் நிரம்பிய கடை வீதிகள் பல உண்டு. பண்டிகை காலங்களிலும், திருவிழா சமயத்திலும் அங்கு குழுமும் கூட்டம் அந்த வீதிகளையே திருவிழா களங்களாக மாற்றிவிடும். தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் உள்ள ரங்கநாதன் தெரு அத்தகைய சிறப்பு வாய்ந்த பெருவீதி. மதுரையில் விளக்குத்தூண் பகுதியும் பண்டிகைகால பண்டங்கள் வாங்க ஏற்ற இடம். கோவையில் ஒப்பணக்கார வீதி வணிக பெருநிறுவனங்கள் வீற்றிருக்கும் இடமாகும். அந்த வரிசையில் நம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலின் வடக்கு ரத வீதி நமக்கு ஏற்ற கடை வீதியாக திகழ்கிறது. மேற்கண்ட ஊர்களில் உள்ள கடை வீதிகளை விட மிகப் பழமையானது நம் வடக்கு ரத வீதி. நெல்லையப்பர் கோவில் கட்டியே 2000 வருடங்கள் ஆகும் போது இந்த வீதியின் வயது அதற்கும் முந்தியதாக இருக்கவே வாய்ப்புள்ளது. மதுரைக்கு தெற்கே வாழும் மக்களுக்கு சீமைத் துணிகளை விற்கும் கடைகள் இங்கு தான் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. முன்னொரு காலத்தில் திருநெல்வேலி என்றால் அது களைகட்டும் நான்கு ரதிகள் தான் என்ற நிலை இருந்தது. நெல்லையப்பர் கோவில் வாசலில் தான் திருநெல்வேலி பஸ் நிலையமும் செயல்பட