Skip to main content

Posts

Showing posts from November, 2018

செழிக்கும் நெல்லையை சீரழிக்க முயற்சி.?

சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை போல இராஜபாளையம்-செங்கோட்டை இடையே புதிய நான்கு வழிச்சாலையை போட அரசு முடிவெடுத்துள்ளது. ரம்மியமான மலையடிவாரச் சாலை.! தமிழகத்தின் அழகான சாலைகளுள் மதுரை-செங்கோட்டை சாலையும் ஒன்று.  விருதுநகர்,நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த சாலை அமைந்துள்ளது. எழுமிச்சை,கரும்பு,நெல் என சகலமும் செழித்து வளரும் நிலங்கள் நடுவே இச்சாலை செல்கிறது. இந்த சாலையில் தான் இரு மாவட்டங்களின் முக்கிய நகராட்சிகள் அமைந்துள்ளன. விருதுநகர் : *ஸ்ரீவில்லிபுத்தூர். *ராஜயாளையம். நெல்லை: *புளியங்குடி *சங்கரன்கோவில் (பைபாஸ்) *கடையநல்லூர் *தென்காசி *செங்கோட்டை இந்த நகரங்களை வடக்கு மாவட்டங்களோடு இணைப்பது இச்சாலை தான். ஆண்டு தோறும் குற்றாலம் சீசன் நேரத்திலும், சபரிமலை சீசனிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையில் பயணிக்கும். இதனால் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக்க அரசு முடிவெடுத்துள்ளது. பாதையே மாறுகிறது: புதிதாக வரவுள்ள இந்த நான்கு வழிச்சாலை ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி அமையவுள்ளது. அதாவது சிவகிரி,வாசு,புளியங்குடி முதலிய ஊ

தலைமுறைகள் கடந்தும் தணியாத தாகம்.!

தமிழ்நாட்டிலேயே அதிக அணைகளை நம் திருநெல்வேலி கொண்டிருப்பதால் இங்கு தண்ணீர் பிரச்னையே இல்லை என வெளியூர் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம்மிடமும் ஒரு கண்ணீர் கதை பல தலைமுறையாக நிறைவேறாமல் இருப்பதை அவர்கள் அறிவதில்லை. ஏன் நம்மில் பலருக்கும் கூட அக்கதையின் சோகம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காமரஜர் தீட்டிய கனவுத் திட்டம். தமிழ்நாடெங்கும் நீர்நிலைகளை கட்டியெழுப்பிய காமராஜர் தான் இந்த திட்டத்தை தீட்டியவர். 1962 ம் ஆண்டு கடனாநதி,ராமநதி என்ற இரு அணைத்திட்டங்களோடு ஜம்புநதி கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிறகு ஆட்சிப் பொறுப்பை இழந்தார். பின்னர் வந்த திமுக ஆட்சியில் இரு அணைகள் மட்டும் கட்டியெழுப்பப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கைவிடப்பட்ட கால்வாய் திட்டம்: அணை கட்டியாச்சு.. கால்வாய் எங்கடா.? என்பதைப் போல நீரை தேக்கி வைக்க மட்டும் அணையை கட்டிவிட்டு ஜம்புநதி கால்வாய் திட்ட்டத்தை கைவிட்டது தமிழக அரசு. பிறகு அதிமுக அரசு வந்தது. தென்னகத்தின் கோரிக்கைகள் கோட்டைக்கு பறந்தன. நிறைவேற்றுகிறேன் என்று சொன்ன எம்ஜிஆர் மரணித்துப்போனார். பின்னர் திமுக, அடுத்து அதிமுக எ

இன்டஸ்ட்ரியல் காரிடராகிறது நெல்லை-தூத்துக்குடி ரோடு

திருநெல்வேலியில் இருந்து பிரிந்து சென்ற தூத்துக்குடி இன்று தொழில் வளர்ச்சியில் கோவையோடு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி-மதுரை சாலையை இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்ற அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. திட்டத்தில் திடீர் மாற்றம்.? இந்நிலையில் அதற்கு முன்னதாக திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை முதலில் இன்டஸ்ட்ரியல் காரிடராக மாற்றப்படும் என்ற தடாலடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதை ஒட்டி மதுரையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய தொழில்துறை அமைச்சர் M.C சம்பத் சென்னை-கன்னியாகுமரி தொழில் வளர்ச்சி பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லை-தூத்துக்குடி காரிடர் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார். தொழில்துறைக்கு ஏற்ற பகுதி: அவ்விழாவில் பேசிய அதிகாரிகளும் தென்மாவட்டங்களின் சிறப்பம்சங்களை வெகுவாக விதந்தோதி உள்ளனர். தமிழ்நாட்டில் மின் வசதி தங்குதடையின்றி கிடைக்கும் பகுதி தென்மாவட்டங்கள் தான் என்று பேசியுள்ளனர். துறைமுகம்,ரயில் பாதை,விம

நெல்லையை புயல்கள் தாக்குவதேயில்லை ஏன்.?

மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் தென்னிந்திய தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறுவது இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நீலம்,தானே,வார்தா,ஒக்கி தற்போது கஜா வரைக்கும் அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களையே குறிவைத்து தாக்குகின்றன. விதிவிலக்காக ஒக்கி கடந்த ஆண்டு நம் குமரியை ஓங்கி அறைந்து விட்டுச் சென்றது. நெல்லை அந்த லிஸ்டில் இல்லை: மழைக் காலங்களில் பெரும் புயல்கள் உருவாகும் போதெல்லாம் அது கரையை கடக்கும் மாவட்டங்களில் நம் திருநெல்வேலி இடம் பெற்றதேயில்லை. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டமாக நாம் இருந்தாலும் நாம் இருக்கும் இடம் இயற்கையிலேயே பாதுகாப்பு மிகுந்தது. நெல்லையை காக்கும் இலங்கை : ஆழியின் ஆர்ப்பரிப்பில் இருந்து நம் நெல்லையை காப்பது வேறுயாருமில்லை. நம் தாயக பூமியான இலங்கை தான். வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் தென்தமிழக கடற்பகுதிக்கு நேரெதில் அத்தீவு அமைந்துள்ளது. இதனால் வங்கக் கடல் பகுதி பிளவு பட்டு மன்னார் வளைகுடா என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. அதன் கரையோரத்தில் தான்

நெல்லையை வெளுத்து வாங்க வருகிறது பெருமழை.!

நாளை முதல் நம் நெல்லை மாவட்டத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழமுக்கத்தை ஒட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தாழ்வு மண்டலமானது மெல்ல நகர்ந்து இலங்கை தென் தமிழகம் பகுதியில் மூன்று நாட்களுக்கு நிலைகொள்ள உள்ளது. இதன் காரணமாக நெல்லை,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களின் கடலோரங்களிலும், தாமிரபரணி உருவாகும் பொதிகை மலைப் பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாம்.! இம்மழை 9ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு பருவ காலத்தின் போது மிகுதியான மழைப் பொழிவை நம் நெல்லை மாவட்டடம் பெற்றது. அதனால் அனைத்து அணைகளிலும் கணிசமான நீர் இருப்பு உள்ளது. சமீபத்திய மழையினால் அவ்வணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு பெருமழை பொழிய உள்ளதால் அணைகள் நிரம்பி தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோட வாய்ப்புள்ளது. நாளை தீபாவளி முதல் மழை வலுப்பெற உள்ளதால் நம் நெல்லையின் குட்டிச் சுட்டிகள் கவலையிலும் விவசாய பெருங்குடி மக்கள் ஆனந்த

எந்த மழைக்கும் அசராத திருநெல்வேலி.!

இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த செய்தி பல்வேறு மாவட்ட மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.  ஏனெனில், அந்தளவுக்கு மக்களை பயமுறுத்தி வைத்துள்ளது வடகிழக்கு பருவமழை. ஆனால் வடகிழக்கு பருவமழையின் சர்க்கார் நம் நெல்லையில் எப்போதுமே எடுபடுவதில்லை. அதற்கு காரணம் நம் தாமிரபரணி நதியும் அதன் அணைகளும் தான்.! நதியின் விஸ்வரூபம்! பொதிகை மலையில் ஆண்டு தோறும் மழைப் பொழிவு இருப்பதால் வற்றாத ஜீவநதியாக பாய்கிறது நமது தாமிரபரணி நதி. ஆனால், மழைக் காலங்களில் அதன் ஓட்டம் பெரும் ஆரவாரமாய் இருக்கும்.  மலையிலுள்ள மண்ணையும் மரங்களையும் வாரி சுருட்டிக் கொண்டு சமவெளியில் பாய்ந்து ஓடும்.  எனினும் அதனால் எந்த விதமான பெரும் பாதிப்பும் நம் மக்களுக்கு ஏற்ப்படுவதில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நம் நதியை நாம் பாதுகாக்கும் முறை தான். ஆற்றுக்கு அப்பால் தான் ஊர்கள்: பாபநாசத்தில் தொடங்கி புன்னைக்காயல் வரை ஆற்றுக்கு மிக மிக அருகில் எந்த ஊரும் இருப்பதில்லை. விதிவிலக்கு நம் நெல்லை மாநகரம். இதற்கு முக்கிய காரணம் வெள்ளத்தின் போது ஆறு எடுக்கும