Skip to main content

Posts

Showing posts from 2019

நதிக்கு நடுவில் ஓர் அசால்ட் ஆறுமுகம்.!

தமிழ்க் கடவுள் முருகன் ஒரு திரில்லிங் பிரியர். ஆம், நண்பர்களே பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அப்படி..! குன்றின் மேல் குமரன்: நம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மலை உச்சியில் நின்று கொண்டு தான் அருள்பாலிக்கிறார் முருகன். அப்படி அருள்பாலிப்பதனாலேயே நம் அழகனுக்கு "குன்றின் மேலிருக்கும் குமரன்" என பெயர்சூட்டினர் நம் முன்னோர்கள். அதேப் போல திருச்செந்தூரில் ஆர்ப்பரிக்கும் ஆழி அருகே கோவில் கொண்டு காட்சியளிக்கிறார் சண்முகர். நெல்லையில் திகில் சாகசம்: ஆனால் நம் நெல்லையில் இன்னும் ஒருபடி மேலே போய் பாய்ந்தோடும் தாமிரபரணிக்கு நடுவே அசால்ட்டாக அமர்ந்திருக்கிறார் ஆறுமுகன். உலகில் உள்ள கடவுள் சிலைகளுக்கு ஆற்று நீர் கொண்டு அபிஷேகம் நடைபெறும் நிலையில், ஆறே வந்து வருடந்தோறும் முருகனுக்கு அபிஷேகம் செய்கிறதென்றால் அது நம் நெல்லையில் மட்டும் தான் நடக்கும். வியக்க வைக்கும் விஞ்ஞானம்: காலங்காலமாக வருடந்தோறும் பெருக்கெடுக்கும் தாமிரபரணியின் சீற்றத்தை இந்த முருகன் கோவில் எப்படி தாக்குபிடிக்கிறது என்று பார்க்கும் போது, நம் முன்னோர்களி

நதிக்கு நடுவில் ஓர் அசால்ட் ஆறுமுகன்.

தமிழ்க் கடவுள் முருகன் ஒரு திரில்லிங் பிரியர். ஆம், நண்பர்களே பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அப்படி..! குன்றின் மேல் குமரன்: நம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மலை உச்சியில் நின்று கொண்டு தான் அருள்பாலிக்கிறார் முருகன். அப்படி அருள்பாலிப்பதனாலேயே நம் அழகனுக்கு "குன்றின் மேலிருக்கும் குமரன்" என பெயர்சூட்டினர் நம் முன்னோர்கள். அதேப் போல திருச்செந்தூரில் ஆர்ப்பரிக்கும் ஆழி அருகே கோவில் கொண்டு காட்சியளிக்கிறார் சண்முகர். நெல்லையில் திகில் சாகசம்: ஆனால் நம் நெல்லையில் இன்னும் ஒருபடி மேலே போய் பாய்ந்தோடும் தாமிரபரணிக்கு நடுவே அசால்ட்டாக அமர்ந்திருக்கிறார் ஆறுமுகன். உலகில் உள்ள கடவுள் சிலைகளுக்கு ஆற்று நீர் கொண்டு அபிஷேகம் நடைபெறும் நிலையில், ஆறே வந்து வருடந்தோறும் முருகனுக்கு அபிஷேகம் செய்கிறதென்றால் அது நம் நெல்லையில் மட்டும் தான் நடக்கும். வியக்க வைக்கும் விஞ்ஞானம்: காலங்காலமாக வருடந்தோறும் பெருக்கெடுக்கும் தாமிரபரணியின் சீற்றத்தை இந்த முருகன் கோவில் எப்படி தாக்குபிடிக்கிறது என்று பார்க்கும் போது, நம் முன்

நீங்கா வலி தரும் நெல்லைப் பிரிவினை

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் நெல்லை பிரிக்கப்பட்டுவிட்டது. இதுநாள் வரை நெல்லையின் பெருமிதங்களாக நாம் கொண்டாடி வந்த பல அம்சங்கள் நம்மைவிட்டு போயிருக்கின்றன. கேரள எல்லை இனி நெல்லையிடம் இல்லை: கேரள மாநிலத்தோடு சாலை வழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் வெகு சில மாவட்டங்களுள் ஒன்றாக நம் நெல்லை இருந்துவந்தது. தென்காசியின் பிரிவால் இனி எல்லை நம்மிடம் இருக்கப்போவதில்லை. பார்டர் புரோட்டா கடையும் தென்காசி மாவட்டத்துக்காரரின் கடையாகி விட்டது! வீரபூமியின் பெயர் மாறிவிட்டது: கட்டபொம்மனையும் பாரதியையும் தூத்துக்குடி எடுத்துக் கொண்டது போல வாஞ்சிநாதனையும்,பூலித்தேவனையும் தென்காசி எடுத்துக் கொண்டுவிட்டது. குற்றாலம் இனி அண்டை மாவட்ட சுற்றுலாத் தலம்: "நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது" என்று இனி எந்தப் பத்திரிகையும், செய்திச் சொல்லப்போவதில்லை. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரெயிலாக மாறிவிட்டது. திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பிரச்னை இனிமேல் தென்காசி மாவட்டத்தின் பிரச்னை. நகரங்களை இழந்த

குப்பைக் கூளமாக மாறுகிறதா நெல்லை?

இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான நம் நெல்லை கூடங்குளம் அணுமின்நிலையத்தில்  நாட்டின் முதல் அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அணுக்கழிவு மையம் என்றால் என்ன? அணுமின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு மிஞ்சும் பொருள்களே அணுக்கழிவுகள் எனப்படுகின்றன. இந்தக் கழிவுகள் அதிக கதிர்வீச்சு அபாயம் கொண்டவையாகும்.  உலகின் பல நாடுகளில் இந்தக் கழிவுகள் அணுமின்நிலையங்களிலேயே சேமிக்கப்படுகின்றன. இந்திய அணுமின் நிலையங்களிலும் இதே வழியில் தான் கழிவுகள் கையாளப்பட்டு வருகின்றன. கூடங்குளத்திலும் இதுவரை இந்த முறையிலேயே கழிவுகள் கையாளப்பட்டு வந்தன.  ஆனால் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அணுக்கழிவு மையத்தை 2022 ம் ஆண்டுக்குள் அமைப்பதாக இந்திய அரசு வாக்குறுதி தந்தது. அணுமின்நிலையத்திலேயே கழிவுகளை கையாள்வதை விட தனியாக கழிவு மையம் அமைத்து சேமிப்பது பாதுகாப்பது தான். எனினும் பிரச்னை அதுவல்ல..! என்ன ஆபத்து:

நெல்லையில் மாறுது வானிலை..❤

தென்மேற்கு பருவக்காற்று நம் நெல்லையை தழுவ ஆரம்பித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது.. மிதமான ஈரக்காற்றும் வீசுவதால் நெல்லையில் அழகிய காலநிலை நிலவுகிறது. தெளிந்தது பொதிகை: இது நாள் வரை மங்கலாக காணப்பட்ட பொதிகை மலை நீலநிறத்தில் அழகாக காட்சியளிக்கிறது. அதில் வந்து மோதும் மலையாள மழை மேகங்களை கண்கூடாக பார்க்கமுடிகிறது. விரைவில் சீசன்: இதனால் இன்னும் சில நாட்களில் குற்றாலத்தில் சீசன் துவங்கி அருவிகள் ஆர்ப்பரிக்க உள்ளன..! இனி நெல்லையில் ஜில் ஜில் கூல் கூல் தான்.!

தினகரனை கைவிடுகிறதா திருநெல்வேலி.?

தினகரனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துவந்த நம் நெல்லையை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து கலைய ஆரம்பித்துள்ளனர். தேர்தலில் பின்னடைவு: இப்போது நடந்த தேர்தலில் தினகரன் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெருத்த பின்னடைவை அவர் சந்தித்தார். தமிழகத்திலேயே அதிகமாக நம் நெல்லை பகுதியில் அவருக்கு ஆதரவாளர்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் சில எம்.பிகள் என கிட்டத்ட்ட நெல்லையில் பெரும் படையையே வைத்திருந்தார் தினகரன். இதில் விஜிலா உள்ளிட்ட எம்பிக்கள் ஏற்கனவே எடப்பபாடி பக்கம் சென்றுவிட்டனர். தற்போது தேர்தல்முடிவடைந்த நிலையில் மேலும் பலர் அதிமுக பக்கம் தாவ துவங்கியுள்ளனர். நம் நெல்லை தொகுதியில் அமமுக வேட்பாளராக களம்கண்ட மைக்கேல் ராயப்பன் சில நாட்களுக்கு முன் எடப்பாடியுடன் ஐக்கியமானார். இந்நிலையில் நெல்லை அமமுக நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பக்கம் போக முடிவு செய்துள்ளனராம். ஒரு காலத்தில் தினகரனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்த நெல்லை தற்போது அவருக்கு கலக்கத்தை அதிகரித்துள்ளது.

விஜிலாவை அமைச்சராக்க விரும்பிய பாஜக.!

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக ராஜ்ய சபா எம்.பியுமான திருமதி. விஜிலா சத்யானந்திற்கு மத்திய அமைச்சர் பதவி தர பாஜக முன்வந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக இல்லா அமைச்சரவை: தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தேனியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்டது. விஜிலாவை கைகாட்டிய டெல்லி ஒபிஎஸ் மகனுக்கும், வைத்தியலிங்கத்திற்கும் மத்திய அமைச்சர் பதவியை வழங்க அதிமுக கேட்டுக்கொண்டாதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாஜகவோ நம் நெல்லையை சேர்ந்த விஜிலா சத்தியானந்திற்கு அமைச்சர் பதவி முன்வந்ததாக பிரபல ஆங்கில பத்திரிகையான THE WEEK ல் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் விஜிலாவுக்கு அமைச்சர் பதவியை தர அதிமுக தலைமை விரும்பாததால் அதிமுகவில் எவருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்காமல் பாஜக அரசு பதவி ஏற்றுக்கொண்டது. தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பிறகு நம் நெல்லையில் இருந்து  யாருமே மத்திய அமைச்சராகவில்லை. நம் நெல்லையை சேர்ந்த விஜிலா கல்வியாளர், துடிப்புள்ள நாடாளுமன்றவாதி என

நெல்லையின் வளர்ச்சிக்கு ஆபத்து.?

     மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்துள்ளார் மோடி. ஆனால் தமிழ்நாட்டில் மோடியை வீழ்த்தி திமுக கூட்டணி அபார வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் அதிமுக வசம் இருந்த நம் நெல்லை பாராளுமன்ற தொகுதி தற்போது திமுக வசம் சென்றுள்ளது. இதனால் நம் நெல்லைக்கு சாதகமா.? பாதகமா.? அலசுவோம் வாருங்கள்.. தமிழகத்தை வச்சி செய்யப்போகும் பாஜக:      படுதோல்வியால் தமிழக பாஜக தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஏன் மோடிக்கு வாக்களிக்காமல் போனோம் என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள் என தமிழிசை பகிரங்கமாகவே பேசிவிட்டார். எனவே வரும் காலங்களில் நம் தமிழகம் படாதபாடு படப்போவது தொிகிறது. நெல்லைக்கும் தொல்லை.!      திமுக உறுப்பினரை தோ்ந்தெடுத்துள்ளதால், நம் நெல்லைக்கும் பலத்த ஆப்பு காத்திருப்பதாகவே தோன்றுகிறது. அதிமுக சார்பில் களத்தில் இருந்த மனோஜ் பாண்டியன் வென்றிருந்தால் மத்திய அமைச்சராகி இருப்பார். ஆனால் அது நடக்கவில்லை. நெல்லையில்  இனி என்ன நடக்கும்?      ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நம் நெல்லை இணைந்துள்ளதால், பல முன்னேற்றத் திட்டங்கள் இங்கே நடந்து வருகின்றன. அதில் இனி சுணக்கம் ஏற்படலாம்.     பொிய

வரலாற்றில் இல்லாதளவுக்கு வறண்டது பாபநாசம்

     ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நமது பாபநாசம் அணை வரலாற்றில் இல்லாத அளவுக்கு வறண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டு அடியில் நீர்மட்டம்.!     143 உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் தற்போது வெறும் எட்டு அடி மட்டுமே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. 1942 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து  இந்த அளவுக்கு தண்ணீர் குறைந்த வரலாறே இல்லை என உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். தகிக்கும் பொதிகை மலை.!       வெயிலின் உக்கிரம் தாங்காமல் பொதிகை மலை தவித்து வருகிறது. மலையில் உள்ள ஜீவராசிகள் தண்ணீர் கிடைக்காமல் மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கி விட்டன. பிற வன விலங்குகளின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. வற்றியது தாமிரபரணி.!          வற்றாத ஜீவநதி  என பெயர் பெற்ற தாமிரபரணி வரலாற்றில் முதல் முறையாக வற்றியுள்ளது. தாமிரபரணியின் இந்த பரிதாப நிலையால் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருணபகவான் கைகொடுத்தால் மட்டுமே பிழைப்போம்.!

என்ன தான் நடக்குது ஜங்ஷனுக்குள்ளே..?

நம் ஜங்ஷன் பேருந்து நிலையம்  மூடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகி விட்ட நிலையில் அங்கு என்ன தான் நடக்கிறது.,? தோண்ட தோண்ட ஆற்று மணல்: ஒரு காலத்தில் தாமிரபரணி ஆறு இங்கு ஓடியதோ என்னவோ, இப்போது இந்தஇடத்தில் தோண்ட தோண்ட ஆற்று மணல் வந்து குவிகிறது. பெருக்கெடுக்கும் ஊற்று நீர்:      அருகில் ஆறு ஓடுவதால் தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து அதிகளவில் ஊற்றுநீர் வெளியாகி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. காலியாயின மீதி கடைகள்:     முதல்கட்ட வேலை நடைபெற்ற சமயத்தில் திறந்திருந்த கடைகளும் தற்போது அடைக்கப்பட்டுள்ளன. இரண்டாண்டுகள் ஆகும் போல.!          மூடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் வானம் தோண்டும் பணிகளே நடைபெற்று வருவதால் மொத்த பணிகளும் முடிவடைய எப்படியும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றே தொிகிறது. அதுவரை நெல்லை மக்கள் பேருந்துக்காக வெயிலிலும் மழையிலும்  நனைய வேண்டியது தான்..                                            

திராவிட அரசியலின் பிறப்பிடமே நெல்லை தான்!

திராவிட அரசியலுக்கு மாற்று வேண்டும் என்னும் குரல்கள் சமீபகாலமாக பெருகி வருகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டின் அரசியலை ஐம்பது ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது திராவிட சித்தாந்த கட்சிகள் தான்.  அவ்வளவு வலிமையான திராவிட சிந்தாந்தத்தின் பிறப்பிடம் நம் திருநெல்வேலி தான்.! திராவிடம் பிறந்தது நெல்லையில்! சமயப்பணி செய்ய நெல்லை வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் முதலிய மொழிகளை ஆய்ந்துநோக்கி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்டார். மேலும் இந்த மொழிகளை திராவிட மொழிகள் என்றும் இம்மக்களை திராவிடர்கள் என்றும் அவர் தான் முதலில் அழைத்தார். நம் நெல்லையில் இருந்து அவர் கண்டுபிடித்த அந்த வார்த்தைகள் இன்றளவும் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றன. பெரியாரை உலுக்கிய சேரன்மகாதேவி! 1924 ஆம் ஆண்டில் நெல்லை சேரன்மகாதேவி குருகுலத்தில் நடந்த தீண்டாமை சம்பவமே பெரியாரை காங்கிரசிலிருந்து வெளியேற வைத்தது. அதன் பின்னர் சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார் நம் நெல்லையில் பிறந்த சொல்லான "திராவிடர்" என்ற  பெயரிலேயே கட்சி தொடங்கினார். அவரின் அந்த கட்

ஜங்ஷனில் நிழல் தேடி அலையும் மக்கள்.!

நெல்லை ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் பேருந்துகள் வெளியில் இருந்தே இயக்கப்படுகின்றன. அதனால் பயணிகள் கடும் வெயிலில் காத்திருக்கின்றனர். பெயரளவுக்கே நிழற்குடைகள்: பாளை., டவுண் மற்றும் சேரன்மகாதேவி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் பெயரளவுக்கு இரண்டு நிழற்குடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அது நிரம்பி வழிவதால் வேறுவழியின்றி அக்னி வெயிலில் நனைகின்றனர் நெல்லை மக்கள். வயதான முதியோர்கள் தலையில் துண்டு போர்த்தி முகம் சுளித்து நிற்கிறார்கள். பள்ளிக் கல்லூரி மாணவர்களும் பேருந்துகளுக்காக கடும் வெயிலில் காய்கிறார்கள். நிழல் தருமா மாநகராட்சி? கூடுதல் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்ற நெல்லை மக்களின் வேண்டுகோளுக்கு நெல்லை மாநகராட்சி காது கொடுக்குமா?

இன்று ஜங்ஷன்; அன்று தாமிரபரணி ஆறு?

நெல்லை ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பூமியை தோண்ட தோண்ட சுத்தமான ஆற்றுமணல் வருவது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது. ஜங்ஷனில் ஓடியதா தாமிரபரணி? தாமிரபரணி ஆற்றிலிருந்து சில அடி தூரத்தில் தான் ஜங்ஷன் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 62 ஆண்டுகள் முன்னர் தான் இங்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்த பகுதி ஆற்றங்கரையாகவே இருந்துள்ளது. அந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் சர்வசாதாரணமாக தண்ணீர் இந்த இடங்களில் புகுந்து விடும். ஆறு ஓடியது உறுதியாகிறது: தற்போது இந்த இடத்தில் அள்ள அள்ள ஆற்று மணல் குவிவது இந்த பகுதியில் ஒரு காலத்தில் தாமிரபரணி ஓடியிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அக்னிநட்சத்திர நாளில் நெல்லையில் மழை

கடந்த ஒரு மாதமாக சூரியன் சுட்டெரித்த நிலையில் சற்று முன்னர் காற்றுடன் அடித்த திடீர் மழை நம் நெல்லை மண்ணை குளிர வைத்தது. அடங்கிய அக்னிநட்சத்திரம் : அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் தொடங்கி இருந்த நிலையில் அதன் தாக்கத்தை இந்த மழை தற்காலிகமாக முறியடித்துள்ளது. ஜெயித்தது நெல்லை.! பொதுவாகவே அக்னி நட்சத்திர காலங்களில் நம் நெல்லையில் மழை பெய்வது வாடிக்கை தான். அது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

பரிதவிக்கும் பாபநாசம். படாதபாடு படும் நெல்லை

எப்போதும் தண்ணீர் துள்ளி ஓடும் நம் தாமிரபரணி இப்போது பரிதவிப்பில் இருக்கிறது. நெல்லையை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம் பொதிகை மலையையும் விட்டுவைக்கவில்லை. விளைவு மாவட்டத்தின் அணைகள் வறண்டு அலங்கோலமாய் காட்சியளிக்கின்றன. பரிதவிப்பில் பாபநாசம்: கடந்த ஆண்டு பருவமழை நம் நெல்லையை ஏமாற்றியதால் பாபநாசம் அணை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறண்டு காணப்படுகிறது. அணையின் உச்சநீர்மட்டம் 143அடி. இப்போது இருப்பது வெறும் 16.30 அடி.! அதிலும் பாதிக்கும் மேல் சகதி தான். அணைக்கு நீர்வரத்தே இல்லாத நிலையில் குடிநீருக்காக மட்டும் நீர் திறக்கப்பட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அதிகப்படியான நீரை தேவையின்றி வெளியேற்றியதே அணையின் வறட்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆறுதல் அளிக்கும் மணிமுத்தாறு.! கடும் கோடை நிலவும் இந்த நேரத்தில் நம் நெல்லைக்கு சற்றே ஆறுதல் தருகிறது காமராஜர் கட்டிய மணிமுத்தாறு. தென்தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணையில் தற்போது 72.32 அடி நீர் இருப்பில் உள்ளது. இதனை வைத்து இந்த கோடையை சமாளித்து விடலாம் என அரசாங்கம் தெரிவிக்கிறது. எனினும

ஐ.டி நகரமாக அவதாரம் எடுத்தது நெல்லை.!

உலகப் புகழ்பெற்ற அடாஸ் சிண்டல் ஐ.டி கம்பெனி நம் திருநெல்வேலியில் நேற்று திறக்கப்பட்டது. கங்கொண்டான் ஐ.டி பார்க்கில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த நிறுவனம் வரும் ஜீன் முதற்கொண்டு செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நகரமானது நெல்லை: இந்த கம்பெனியின் வருகையால் விவசாய நகரமான நம் நெல்லை ஐ.டி நகரமாக புது அவதாரம் எடுத்துள்ளது. இதன் மூலம்  நம் நெல்லை மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. புதிதாக தொடங்கியுள்ள சிண்டல் நிறுவனம் 100 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. தற்சமயம் 25 ஏக்கரில் மட்டுமே கட்டுமானப் பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளும் முடிவடையும் போது 2,300 பணியாளர்களுடன் தென்தமிழகத்தின் மிகப்பெரிய ஐ.டி கம்பெனியாக அது உருமாறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

திருநெல்வேலியே தமிழர்களின் தாய்மடி.!

தமிழர்களின் வரலாறு நம் நெல்லையில் இருந்தே தொடங்குகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஒன்றிய அரசு உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக நாகரிகத்தின் தொட்டில்: நெல்லையில் இருந்து 18 கி.மீ தொலைவிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு இன்று தெரிவித்துள்ளது. அதாவது கிருஸ்து பிறப்பதற்கு முன்னரே நம் தாமிரவருணி கரையில் உயர்ந்த நாகரிகம் செழித்து இருந்துள்ளது. கீழடிக்கும் முந்திய நெல்லை நாகரிகம்: சமீபத்தில் மதுரை கீழடியில் நடந்த அகழாய்வின் போது 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அதற்கும் முந்தியதாக நம் நெல்லை நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கிறது. இதனால் தமிழர்களின் தாய்மடி நம் தென்பாண்டி சீமைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.!

நெல்லையின் மெரினா ஆகிறது நயினார்குளம்.

 அழகும் பழமையும் மிக்க நம் நெல்லை டவுணில் பரந்து விரிந்து இருப்பது நயினார்குளம். நம் நெல்லை மாநகரத்தை வடக்கு நோக்கி வளர விடாமல் தடுத்து மேற்கு - கிழக்காக வளர வைத்ததில் இந்த நயினார் குளத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் எழில்! நெல்லை டவுணுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது நயினார்குளம். இந்த குளத்திற்கு   நீரை தருவது திருநெல்வேலி கால்வாய். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளத்திற்கு தாமிரபரணி நீரை கொண்டுவரும் பொருட்டு சுத்தமல்லி தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து வெட்டப்பட்டது இக்கால்வாய். ஆரம்பத்தில் இந்த கால்வாயில் மிகவும் சுத்தமான நீர் தான் ஓடிக்கொண்டிருந்தது. நாறி நாசமான நயினார்குளம். ஆனால் தற்போது கழிவு நீர் கலப்பினால் இந்த குளம் கடுமையாக மாசுபட்டுள்ளது. நெல்லையின் மெரினா ஆகுமா? இந்த குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள சாலை நம் நெல்லையின் அழகான சாலைகளுள் ஒன்று. வடக்கு தெற்காக சுமார் 1.5 கி.மீ தூரம் அமைந்துள்ள இச்சாலையில் பயணப்படும் போது நம் நெல்லையப்பர் கோவிலின் நான்கு கோபுரங்களும் கம்பீரமாக காட்சியளிக்கும். தூரத்தில் தெரியும் பொதிகை மலை அழகை இன்னும் கூட்

தமிழர்களை பிரிக்கிறதா நெல்லை FB பேஜ்கள்?

நம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான பெரிய நகரங்கள் பத்துக்கும் குறைவு தான். அதில் முதலிடம் பிடிப்பது சிங்காரச் சென்னை. நம் மாநிலத்தின் தலைநகரகமாக இருப்பதால் தமிழர்களின் மனம் கவர்ந்த நகரமாக அது இருக்கிறது. சென்னையை மையப்படுத்தி பல மீம்ஸ் பக்கங்கள் முகநூலில் உண்டு. இவற்றிற்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். சென்னைக்கு அடுத்து எது? மக்கள் தொகையில் சென்னைக்கு அடுத்து கோவையும்,மதுரையும்,திருச்சியும் இருக்கின்றன. இதில் மதுரையின் மீம்ஸ் பக்கங்கள் தமிழகம் முழுவதும் பிரபலம். அது மதுரையைப் பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் குறித்தும் பேசுகிறது. அதைவிட்டால், கோவை திருச்சி பற்றிய முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றன. அசத்தும் நெல்லை அட்மின்கள் : ஆனால் மேற்கண்ட ஊர்களின் மீம்ஸ் பக்கங்களை போல் அல்லாமல் முழுக்க முழுக்க சொந்த ஊர் பெருமையை பேசி அசால்ட்டாக ஆயிரம் லைக்குகளை அள்ளுகிறது நம்மூர் முகநூல் பக்கங்கள். இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் நம்மூர் மீம்ஸ் கிரியேட்டர்களை தற்பெருமை பேசுபவர்கள், தமிழர்களை பிளவுபடுத்துவர்கள் என்றெல

பறிபோகும் நம் நெல்லை ரயில்கள்.!

தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் கடைகோடி ரயில் நிலையமாக இருக்கிறது நம் திருநெல்வேலி ஜங்ஷன். நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு அந்த புறம் திருவனந்தபுரம் கோட்டம் ஆரம்பமாகிவிடுகிறது. நெல்லையே எல்லை! இதனால் வட மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும்  சிறப்பு ரயில்கள் நம் நெல்லையோடு நின்றுவிடும். அதேப் போல கேரளா மார்க்கமாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நாகர்கோவிலோடு நின்றுவிடும். மதுரைக் கோட்டத்தில் கடைசியாக இருப்பதால் நம் நெல்லையிலிருந்தே பெரும்பாலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நம் நெல்லையர்களுக்கு முன்பதிவற்ற பெட்டிகளில் இடவசதியும் முன்பதிவும் தாராளமாக கிடைத்து வந்தது. பறிபோகும் நெல்லையர்களின் உரிமை: ஆனால் நமது இந்த செளகரியத்திற்கு உலை வைக்கும் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. நம் நெல்லையிலிருந்து இயங்கிவந்த பல ரயில்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது. நம் உரிமையை பறிக்கும் குமரி! நெல்லை - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஏற்கனவே திருவந்திரம் வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக தற்போது நெல்லை-தாம்பரம் அ

நெல்லையின் பெருமையை தட்டிப்பறித்த நாகர்கோவில்.

கடந்த 25 ஆண்டுகளாக நம் நெல்லை வசம் இருந்த பெருமையை நாகர்கோவில் சமீபத்தில் தட்டிப்பறித்துள்ளது. கடைகோடி மாநகராட்சி: நகராட்சியாக இருந்த நம் நெல்லை 1994 ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. அப்போது தமிழ்நாட்டின் கடைகோடி மாநகராட்சி என்ற பெருமை நம் நெல்லைக்கு கிடைத்தது. சுமார் 25 ஆண்டுகளாக அந்த பெருமையை தன் வசம் திருநெல்வேலி வைத்திருந்தது. கைமாறியது : இந்நிலையில் சமீபத்தில் நம் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டின் கடைகோடி மாநகரமாக அது மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடைகோடி மாநகரமாக அது தற்போது மாறியுள்ளது.(இதற்கு முன்பு திருவனந்தபுரம்). நெல்லைக்கு பிளஸ் தான்.! எனினும் நாகர்கோவில் மாநகராட்சியாகிருப்பதால் நம் நெல்லை பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.  நெல்லை,தூத்துக்குடி,நாகர்கோவில் என மாநகரங்களின் பிராந்தியமாக நம் நெல்லை மண்டலம் உருவாகியுள்ளது. எந்த விதமான பெரிய தொழில்,உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நம் நெல்லை பிராந்தியம் இந்த இடத்திற்கு வந்துள்ளதே பெரும் சாதனைதான்.!

அசுர வேகத்தில் ஸ்மார்ட் சிட்டியாகும் நெல்லை

நம் நெல்லையை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்திய ஒன்றியம் தழுவிய ஸ்மார்ட் சிட்டி தரவரிசையில் நம் நெல்லை அபாராமாக முன்னேறி டாப் -20 க்குள் நுழைந்துள்ளது. இந்திய அளவில் 16 வது இடத்தை நம் நெல்லை மாநகராட்சி பிடித்துள்ளது. கடும் பின்னடைவிலிருந்து முன்னேற்றம்: கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நம் நெல்லை 78 வது இடத்தில் இருந்தது. அதன்பின்னர், எடுக்கப்பட்ட அதிரடி முன்னெடுப்புகளின் பயனாக நம் நெல்லை தற்போது 16 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடைபெறும் பணிகள் : 1. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நம் ஜங்ஷன் பஸ் நிலையம் மேம்பட்டு வருகிறது. 2. தாமிரபரணியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கும் மெகா திட்டம் செயல் வடிவம் பெற்றுவிட்டது. 3. நெல்லை மாநகர சாலைகள் அழகுபடுத்தப்படுகின்றன. 4. விரைவில் நெல்லை பொருட்காட்சி திடலில் வர்த்தக மையம் அமைகிறது. 5. நெல்லையில் புதிய ஆம்னி பேருந்து முனையம் அமையவுள்ளது. 6. பல பூங்காக்கள் நவீனமாகி வருகிறது. மேற்கண்ட நடவடிக்கைகள் முழுமை பெறும் பட்சத்தில் நம் நெல்லை தென்னகத்தின் ஸ்மார்ட் சிட்டியாக ஜொலிக்கும் என்பத

நெல்லையின் மறக்க முடியாத ஆட்சியர்.!

         நாள் தோறும் நெல்லைக்குள் சீறிப்பாயும் நவீன ரக மாநகரப் பேருந்துகளின் பெயர் பலகைகள் சுத்த தமிழில் எழுதப் பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா.? ஜங்ஷனை - நெல்லை சந்திப்பு என்றும், ஐகிரவுண்டை - பாளை மேட்டுதிடல் என்றும் டவுணை - நெல்லை நகரம் என்றும் எழுத வைத்த அந்த நபர் யார் தெரியுமா.? 1998 முதல் 2001 வரை நெல்லையில் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. தனவேல்  I.A.S தான். தனித்துவமான திருநெல்வேலி: தமிழ்நாடு அரசாங்க வட்டாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்று ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்து வகையான நிலப்பரப்பு, பலதரப்பட்ட மக்கள், விநோதமான பிரச்னைகள் என்று பல அம்சங்கள் நம் மாவட்டத்திற்கே உரித்தான விஷயங்கள். எனவே திருநெல்வேலிக்கு திறமையான அதிகாரிகளே ஆட்சியர்களாக நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் தமிழ்நாடு அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கும் சென்றுவிடுவார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக பல அதிகாரிகள் உள்ளனர். திருநெல்வேலியை திருத்தியவர் : அவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் நெல்லை ஆட்சியர் திரு. தனவேல். அவரின் பணிகாலத்தில் பல

நெல்லையை அலற விடும் ஆட்சியர் ஷில்பா.!

 இத்தனை நாட்களாக சேலம் ஆட்சியர் ரோகினி பக்கமாகவே திரும்பியிருந்த  தமிழக மீடியாக்களை தனது அதிரடி நடவடிக்கைகளால் நம் திருநெல்வேலி பக்கம் திருப்பியிருக்கிறார்  ஆட்சியர் ஷில்பா.! முன்மாதிரியான ஆட்சியர் : நெல்லையின் முதல் பெண் ஆட்சியர் என்ற பொறுப்பை ஏற்றதாலோ என்னவோ, நம் ஆட்சியர் பல நடவடிக்கைகளில் மற்ற அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கடந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெறவிருந்த மதக்கலவரத்தை களத்தில் இறங்கி துணிச்சலாக திசைதிருப்பினார். இதனால் பெரும் மத மோதல் தவிர்க்கப்பட்டது. அன்பு மகள் அங்கன்வாடியில் ... நடுத்தர வர்கத்தினரே தம் பிள்ளைகளை அங்கன்வாடியில் சேர்க்க யோசிக்கும் இந்த காலத்தில் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட தனது குழந்தையை துணிச்சலாக நம்மூர் அங்கன்வாடியில் சேர்த்து நெகிழ வைத்தார். அதிகாரிகளை அலறவிடுகிறார்: தற்போது தனது மென்மையான போக்கிற்கு விடை கொடுத்து அதிரடியில் இறங்கியுள்ளார் ஆட்சியர் ஷில்பா. இது நெல்லை அரசு அலுவலர்கள் இடையே அலறலை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் விவசாய உதவித்தொகையை பெறுவதற்கு வயதான பெண்மணி ஒருவர் உள்ளூர் அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்ட

மோடி ஆட்சியில் நம் நெல்லை பெற்றது என்ன?

பெரும் ஆரவாரத்தோடு ஆட்சிக்கு வந்த மோடியின் ஆட்சிகாலம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐந்தாண்டுகால கால மோடி ஆட்சியில் நம் நெல்லை பெற்றது என்ன.? வாருங்கள் பார்ப்போம். உருப்படியான ஸ்மார்ட் சிட்டி திட்டம்: இந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் நம் நெல்லைக்கு கிடைத்த சிறந்த திட்டமென்றால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான். முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த நெருக்கடியால் நம் திருநெல்வேலியையும் அத்திட்டத்தில் ஒன்றிய அரசு சேர்த்துக் கொண்டது. அதனால் பல உட்கட்டமைப்பு வசதிகள் நம்மூரில் நடந்து வருகின்றன. நவீனமாகும் ஜங்ஷன் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நம் ஜங்ஷன் பஸ் நிலையம் 78 கோடி ரூபாயில் நவீனமாகி வருகிறது. மேலும் அம்ருத் என்னும் திட்டத்தின் கீழ் நம் நெல்லையில் பல இடங்களில் பூங்காக்கள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன. மற்றவை : இவைத்தவிர 1. செங்கோட்டை-புனலூர் வழித்தடத்தில் பாலக்காடு-நெல்லை புதிய ரயில். 2. நெல்லை- தாம்பரம் புதிய எக்ஸ்பிரஸ். 3. மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம் நெல்லை வரை நீட்டிப்பு. 4. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட பல்நோக்கு

சபரிமலையை கட்டிய நெல்லை வம்சத்தினர்.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீக தலமான சபரிமலை கோவிலை கட்டியது நம் நெல்லை பாண்டிய வம்சம் தான் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா.? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.. பாண்டிய சாம்ராஜ்யம் : நம் பண்டை தமிழகம் சேரர்,சோழர்,பாண்டியர் என மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்ட நாடு. இதில் பாண்டிய நாடு மதுரை மற்றும் மதுரைக்கு தெற்கு பகுதிகளை உள்ளடக்கிய செழிப்பான நாடு. இந்நாட்டிற்கு மதுரை மற்றும் நெல்லை ஆகியவை தலைநகரமாக இருந்துள்ளன. தென்காசி பாண்டியர்கள் : வடநாட்டு மன்னரான திப்புசுல்தானின் கூட்டம் பாண்டிய நாட்டை கைப்பற்றிய பின்னர் பாண்டிய மன்னர்கள் இரு பிரிவினராக பிரிந்து நாடு தேடினர். அதில் ஒரு பிரிவினர், கேரள மாநிலம் கோட்டயத்தில் ஆட்சி அமைத்தனர். மற்றொரு பிரிவினர்,நம் நெல்லை வள்ளியூருக்கு வந்து அரசமைத்துள்ளனர். பின்னர் தென்காசி சென்ற அவர்கள், அங்கே ஆட்சி புரிந்தனர். அதனால், அவர்கள் தென்காசி பாண்டியர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். பாண்டிய மன்னர் பந்தள மன்னர் ஆனார் . பின்னர் தென்காசியை விட்டு கேரளத்திற்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கு பந்தளம் என்ற பெயரில் அரசை அமைத்துள்ளனர். அ

பிளக்கிறது நெல்லை.பிறக்கிறது தென்காசி.!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் திருநெல்வேலியை இரண்டாக பிரிக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கிவிட்டது. தென்காசி நகரை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமொன்று மலரவுள்ளது. சிதறும் நெல்லை ஆங்கிலேயர் ஆட்சியில் பரந்து வரிந்த மாவட்டமாக இருந்த திருநெல்வேலி அடுத்து வந்த ஆட்சியாளர்களால் ராமநாதபுரம்,விருதுநகர்,தூத்துக்குடி என துண்டாடப்பட்டது. தற்போது அதுமேலும் பிளவுபட காத்திருக்கிறது. மக்கள் விருப்பம் என்ன? நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க அரசு முயன்று வருவதை நம் மக்கள் பலரும் விரும்பவில்லை. எனினும் தென்காசி சுற்றுவட்டார பகுதி மக்களின் கருத்து வேறு வகையில் உள்ளது. தங்கள் ஊர் மாவட்ட தலைநகரமாக மாறுவதை அவர்கள் விரும்புகிறார்கள். நெல்லைக்கு பேரிழப்பு: தென்காசி தனிமாவட்டமாக பிரிந்தால் நெல்லைக்கு அது பெரும் இழப்பாகும். • குற்றாலம் இனி நெல்லை மாவட்டத்தில் இருக்காது. • ‎செங்கோட்டை பார்டரை இழப்போம். • ‎செழிப்புமிக்க பல விவசாய ஊர்கள் அங்கே சென்றுவிடும். • ‎அழகிய அணைக்கட்டுகள் பல அம்மாவட்டத்தோடு இணையும். • ‎மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி நம்மிடம் இருக்காது. • ‎பாபநாசம்,மாஞ்சோலை

திரிபுராவில் வீழ்ந்து திருநெல்வேலியில் எழுந்த லெனின்.!

தனது அயராத உழைப்பாலும்,ஆவேச உரைவீச்சுகளாலும் உலகின் முதல் கம்யூனிச அரசை ரஷ்ய மண்ணில் நிறுவியவர் புரட்சியாளர் லெனின். அவரின் செல்வாக்கு ரஷ்யாவை தாண்டியும் பரவியிருந்தது. அவரது சிலைகள் இந்தியாவின் பல இடங்களில் நிறுவப்பட்டது. திரிபுராவில் வீழ்ந்த சிலை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளா,மேற்குவங்கம்,திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதிக வலுவோடு இருக்கின்றனர். இதில் கேரளம் தவிர்த்த இரு மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியை இழந்தது. கடந்த ஆண்டில் திரிபுராவில் பாஜகவிடம் ஆட்சியை அக்கட்சி பறிகொடுத்தது. அதன்பின்னர் அங்கு  நடந்த அரசியல் வன்முறையில் பல லெனின் சிலைகள் தகர்க்கப்பட்டன. நெல்லையில் எழுந்தார் லெனின். இந்தியாவின் வடகிழக்கு முனையில் வீழ்த்தப்பட்ட லெனினின் சிலை தற்போது தென்கோடி முனையில் எழுப்பப்பட்டுள்ளது. திருநெல்வேலி மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் 4 இலட்ச ரூபாய் மதிப்பில் 12 அடி உயரத்தில் துடிப்புள்ள சிலையாக அச்சிலை நிறுவப்பட்டுள்ளது. நாடு தழுவிய செய்தி. திரிபுராவில் வீழ்த்தப்பட்ட லெனின் சிலை திருநெல்வேலியில் எழுப்பப்பட்டது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மார்க்ஸிட்

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: மேலும

நெல்லை அதிமுக யார் பக்கம்.?

ஜெயலலிதாவின்  மரணத்திற்கு பிறகு அதிமுகவின் தலைமை எந்த அளவிற்கு ஆட்டம் கண்டதோ அதே அளவிற்கு நெல்லை அதிமுகவும் கடும் சரிவுகளை சந்தித்தது. இந்த சிக்கலான சூழலில் நெல்லை வருகிறார் முதல்வர் எடப்பாடி. திமுகவின் எல்லைக்குள் நெல்லை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாநகரின் இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றியது. இதனால் நெல்லை அதிமுகவினர் சோர்ந்து போய் இருந்தனர். இதையடுத்து நிகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம் நெல்லை அதிமுகவினரை கடும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. மத்திய கட்சியில் மண்ணின் மைந்தன்! ஜெ. இருந்தவரை நெல்லை அதிமுகவின் தவிர்க்கமுடியாத முகமாக இருந்த தொழிலதிபர் நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவின் ஆரம்பகால முக்கியப் புள்ளியான கருப்பசாமிப் பாண்டியனும் தற்போது திமுகவில் இருக்கிறார். நயினார் நாகேந்திரனின் நெருங்கிய நண்பரும் கடந்த தேர்தலில் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டவருமான கல்லூர் வேலாயுதமும் தற்போது தினகரன் பக்கம் நிற்கிறார்.இதனால் கடும் நெருக்கடியில் நெல்லை அதிமுக இருக்கிறது. எனினும் முதலில் சசிகலா தரப்பிற்கு ஆதரவ

நம் நெல்லையர்கள் நாடோடிகளான கதை!

"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது தமிழின் புகழ்ப் பெற்ற முதுமொழி. இந்த புகழ்மொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ, நம் நெல்லையர்களுக்கு மிகச் சரியாக பொருந்தும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொற்கை துறைமுகத்தின் வழியே உலகை அளக்க புறப்பட்ட நமது பயணம் இன்றும் தொடர்கிறது. உலகமயமாக்கல் நமக்கு பழசு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொற்கை முத்துகளும் பாண்டிய நாட்டு பொருள்களும் ரோமாபுரிக்கு பயணப்பட்டுள்ளன. தென்னாட்டின் மிக பரபரப்பான துறைமுகமாக நம் தாமிரபரணியின் கழிமுகப் பகுதி விளங்கியிருக்கிறது. ஆனால் கடல்கோளால் அந்த துறைமுகம் சீரழிந்தப் பிறகு கடல் வாணிபத்தில் நமது தென்பாண்டிச் சீமை பின்தங்கியது. நாட்டுக்குள்ளே நாடோடியானோம் : அதன்பின்னர் பொருள் தேடி இந்த இந்திய நிலப்பரப்பெங்கும் அலைந்து திரிந்தது நம் சமூகம். கடந்த முன்னூறு ஆண்டுகளில் மும்பை,சென்னை,பெங்களுரு,கோவை, திருப்பூர் என்று வடக்கே பல நகரங்களை வளர்த்ததில் நம் நெல்லை மக்களின் பங்கு மிக மிக அதிகம். காரணம் என்ன : நெல்லை மக்களின் இந்த நாடோடி வாழ்கைக்கு காரணங்கள் ஏராளம்.! *படித்த படிப்புக்கு போதுமான வேலையில

பொங்கலுக்கு தயாராகும் நெல்லை மேம்பாலங்கள்.!

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கலை கொண்டாட தமிழகமே தயாராகி வருகிறது. உலகெங்கிலும் வாழும் நெல்லை சொந்தங்கள் பொங்கலை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். புதுப்பொலிவில் வீடுகள்: நெல்லை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்கு வெள்ளையடித்து தை மாதத்தை வரவேற்க காத்திருக்கின்றனர். பளீச் பாலங்கள் : இந்நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் நம் நெல்லை மேம்பாலங்களுக்கும் வெள்ளையடிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. நெல்லை திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், சுலோச்சனார் ஆற்றுப் பாலம் முதலியவற்றில் வெள்ளையடிக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் அவை பளீச்சென காணப்படுகிறது. மக்களுக்கு மன மகிழ்ச்சி: வழக்கமாக ஆண்டின் பிற நாட்களில் நம்மூர் பாலங்களுக்கு வெள்ளையடிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பொங்கலை ஒட்டி வெள்ளை அடிப்பது நெல்லை மக்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் திருநெல்வேலி திமிறிய நாள் இன்று.!

நம் நெல்லையில் ஜல்லிக்கட்டு நடக்காது எனத் தெரிந்தும் ஜல்லிக்கட்டுக்காக நாம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு நம் திருநெல்வேலி நடத்திய மிகப் பெரிய போராட்டமாக அந்த போராட்டம் அமைந்தது. நெல்லை போராட்டத்தின் தனித்துவம்: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தாலும் நம் நெல்லையில் தனி வழியில் அது நடந்தேறியது. • தமிழகம் முழுவதும் வெட்டவெளியில் போராட்டம் நடந்த போது, நம் நெல்லையில் மட்டும் தான் பந்தலின் கீழ் போராட்டம் நடந்தது. • ஜல்லிக்கட்டுக்காக குரலெழுப்பிய நம் நெல்லை இளைஞர்கள் கூடவே, தாமிரபரணியை பாதுகாக்க கோரியும் முழக்கமிட்டனர். • ‎அந்நிய குளிர்பானங்களுக்கு மாலை அணிவித்து பாடை கட்டினர் நெல்லை மாணவர்கள். விளைவு: அந்நிய குளிர்பானங்களை விற்க மாட்டோம் என தமிழக வணிகர்கள் முடிவெடுத்தனர். • ‎தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டான பாளையில் இப்போராட்டம் நடந்ததால் 90% கல்லூரி மாணவர்களே இதில் பங்கு கொண்டனர். • ‎மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய தரமான உணவு அனைவரையும் நெகிழவைத்தது. போராட்ட சின்னம்: ஜல்லிக்கட்டு கோரிக்கையை

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே தென்