தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் திருநெல்வேலியை இரண்டாக பிரிக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கிவிட்டது. தென்காசி நகரை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமொன்று மலரவுள்ளது. சிதறும் நெல்லை ஆங்கிலேயர் ஆட்சியில் பரந்து வரிந்த மாவட்டமாக இருந்த திருநெல்வேலி அடுத்து வந்த ஆட்சியாளர்களால் ராமநாதபுரம்,விருதுநகர்,தூத்துக்குடி என துண்டாடப்பட்டது. தற்போது அதுமேலும் பிளவுபட காத்திருக்கிறது. மக்கள் விருப்பம் என்ன? நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க அரசு முயன்று வருவதை நம் மக்கள் பலரும் விரும்பவில்லை. எனினும் தென்காசி சுற்றுவட்டார பகுதி மக்களின் கருத்து வேறு வகையில் உள்ளது. தங்கள் ஊர் மாவட்ட தலைநகரமாக மாறுவதை அவர்கள் விரும்புகிறார்கள். நெல்லைக்கு பேரிழப்பு: தென்காசி தனிமாவட்டமாக பிரிந்தால் நெல்லைக்கு அது பெரும் இழப்பாகும். • குற்றாலம் இனி நெல்லை மாவட்டத்தில் இருக்காது. • செங்கோட்டை பார்டரை இழப்போம். • செழிப்புமிக்க பல விவசாய ஊர்கள் அங்கே சென்றுவிடும். • அழகிய அணைக்கட்டுகள் பல அம்மாவட்டத்தோடு இணையும். • மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி நம்மிடம் இருக்காது. • பாபநாசம்,மாஞ்சோலை