Skip to main content

Posts

Showing posts from March, 2019

நெல்லையின் மெரினா ஆகிறது நயினார்குளம்.

 அழகும் பழமையும் மிக்க நம் நெல்லை டவுணில் பரந்து விரிந்து இருப்பது நயினார்குளம். நம் நெல்லை மாநகரத்தை வடக்கு நோக்கி வளர விடாமல் தடுத்து மேற்கு - கிழக்காக வளர வைத்ததில் இந்த நயினார் குளத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் எழில்! நெல்லை டவுணுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது நயினார்குளம். இந்த குளத்திற்கு   நீரை தருவது திருநெல்வேலி கால்வாய். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளத்திற்கு தாமிரபரணி நீரை கொண்டுவரும் பொருட்டு சுத்தமல்லி தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து வெட்டப்பட்டது இக்கால்வாய். ஆரம்பத்தில் இந்த கால்வாயில் மிகவும் சுத்தமான நீர் தான் ஓடிக்கொண்டிருந்தது. நாறி நாசமான நயினார்குளம். ஆனால் தற்போது கழிவு நீர் கலப்பினால் இந்த குளம் கடுமையாக மாசுபட்டுள்ளது. நெல்லையின் மெரினா ஆகுமா? இந்த குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள சாலை நம் நெல்லையின் அழகான சாலைகளுள் ஒன்று. வடக்கு தெற்காக சுமார் 1.5 கி.மீ தூரம் அமைந்துள்ள இச்சாலையில் பயணப்படும் போது நம் நெல்லையப்பர் கோவிலின் நான்கு கோபுரங்களும் கம்பீரமாக காட்சியளிக்கும். தூரத்தில் தெரியும் பொதிகை மலை அழகை இன்னும் கூட்

தமிழர்களை பிரிக்கிறதா நெல்லை FB பேஜ்கள்?

நம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான பெரிய நகரங்கள் பத்துக்கும் குறைவு தான். அதில் முதலிடம் பிடிப்பது சிங்காரச் சென்னை. நம் மாநிலத்தின் தலைநகரகமாக இருப்பதால் தமிழர்களின் மனம் கவர்ந்த நகரமாக அது இருக்கிறது. சென்னையை மையப்படுத்தி பல மீம்ஸ் பக்கங்கள் முகநூலில் உண்டு. இவற்றிற்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். சென்னைக்கு அடுத்து எது? மக்கள் தொகையில் சென்னைக்கு அடுத்து கோவையும்,மதுரையும்,திருச்சியும் இருக்கின்றன. இதில் மதுரையின் மீம்ஸ் பக்கங்கள் தமிழகம் முழுவதும் பிரபலம். அது மதுரையைப் பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் குறித்தும் பேசுகிறது. அதைவிட்டால், கோவை திருச்சி பற்றிய முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றன. அசத்தும் நெல்லை அட்மின்கள் : ஆனால் மேற்கண்ட ஊர்களின் மீம்ஸ் பக்கங்களை போல் அல்லாமல் முழுக்க முழுக்க சொந்த ஊர் பெருமையை பேசி அசால்ட்டாக ஆயிரம் லைக்குகளை அள்ளுகிறது நம்மூர் முகநூல் பக்கங்கள். இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் நம்மூர் மீம்ஸ் கிரியேட்டர்களை தற்பெருமை பேசுபவர்கள், தமிழர்களை பிளவுபடுத்துவர்கள் என்றெல

பறிபோகும் நம் நெல்லை ரயில்கள்.!

தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் கடைகோடி ரயில் நிலையமாக இருக்கிறது நம் திருநெல்வேலி ஜங்ஷன். நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு அந்த புறம் திருவனந்தபுரம் கோட்டம் ஆரம்பமாகிவிடுகிறது. நெல்லையே எல்லை! இதனால் வட மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும்  சிறப்பு ரயில்கள் நம் நெல்லையோடு நின்றுவிடும். அதேப் போல கேரளா மார்க்கமாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நாகர்கோவிலோடு நின்றுவிடும். மதுரைக் கோட்டத்தில் கடைசியாக இருப்பதால் நம் நெல்லையிலிருந்தே பெரும்பாலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நம் நெல்லையர்களுக்கு முன்பதிவற்ற பெட்டிகளில் இடவசதியும் முன்பதிவும் தாராளமாக கிடைத்து வந்தது. பறிபோகும் நெல்லையர்களின் உரிமை: ஆனால் நமது இந்த செளகரியத்திற்கு உலை வைக்கும் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. நம் நெல்லையிலிருந்து இயங்கிவந்த பல ரயில்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது. நம் உரிமையை பறிக்கும் குமரி! நெல்லை - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஏற்கனவே திருவந்திரம் வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக தற்போது நெல்லை-தாம்பரம் அ

நெல்லையின் பெருமையை தட்டிப்பறித்த நாகர்கோவில்.

கடந்த 25 ஆண்டுகளாக நம் நெல்லை வசம் இருந்த பெருமையை நாகர்கோவில் சமீபத்தில் தட்டிப்பறித்துள்ளது. கடைகோடி மாநகராட்சி: நகராட்சியாக இருந்த நம் நெல்லை 1994 ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. அப்போது தமிழ்நாட்டின் கடைகோடி மாநகராட்சி என்ற பெருமை நம் நெல்லைக்கு கிடைத்தது. சுமார் 25 ஆண்டுகளாக அந்த பெருமையை தன் வசம் திருநெல்வேலி வைத்திருந்தது. கைமாறியது : இந்நிலையில் சமீபத்தில் நம் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டின் கடைகோடி மாநகரமாக அது மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடைகோடி மாநகரமாக அது தற்போது மாறியுள்ளது.(இதற்கு முன்பு திருவனந்தபுரம்). நெல்லைக்கு பிளஸ் தான்.! எனினும் நாகர்கோவில் மாநகராட்சியாகிருப்பதால் நம் நெல்லை பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.  நெல்லை,தூத்துக்குடி,நாகர்கோவில் என மாநகரங்களின் பிராந்தியமாக நம் நெல்லை மண்டலம் உருவாகியுள்ளது. எந்த விதமான பெரிய தொழில்,உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நம் நெல்லை பிராந்தியம் இந்த இடத்திற்கு வந்துள்ளதே பெரும் சாதனைதான்.!

அசுர வேகத்தில் ஸ்மார்ட் சிட்டியாகும் நெல்லை

நம் நெல்லையை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்திய ஒன்றியம் தழுவிய ஸ்மார்ட் சிட்டி தரவரிசையில் நம் நெல்லை அபாராமாக முன்னேறி டாப் -20 க்குள் நுழைந்துள்ளது. இந்திய அளவில் 16 வது இடத்தை நம் நெல்லை மாநகராட்சி பிடித்துள்ளது. கடும் பின்னடைவிலிருந்து முன்னேற்றம்: கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நம் நெல்லை 78 வது இடத்தில் இருந்தது. அதன்பின்னர், எடுக்கப்பட்ட அதிரடி முன்னெடுப்புகளின் பயனாக நம் நெல்லை தற்போது 16 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடைபெறும் பணிகள் : 1. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நம் ஜங்ஷன் பஸ் நிலையம் மேம்பட்டு வருகிறது. 2. தாமிரபரணியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கும் மெகா திட்டம் செயல் வடிவம் பெற்றுவிட்டது. 3. நெல்லை மாநகர சாலைகள் அழகுபடுத்தப்படுகின்றன. 4. விரைவில் நெல்லை பொருட்காட்சி திடலில் வர்த்தக மையம் அமைகிறது. 5. நெல்லையில் புதிய ஆம்னி பேருந்து முனையம் அமையவுள்ளது. 6. பல பூங்காக்கள் நவீனமாகி வருகிறது. மேற்கண்ட நடவடிக்கைகள் முழுமை பெறும் பட்சத்தில் நம் நெல்லை தென்னகத்தின் ஸ்மார்ட் சிட்டியாக ஜொலிக்கும் என்பத

நெல்லையின் மறக்க முடியாத ஆட்சியர்.!

         நாள் தோறும் நெல்லைக்குள் சீறிப்பாயும் நவீன ரக மாநகரப் பேருந்துகளின் பெயர் பலகைகள் சுத்த தமிழில் எழுதப் பட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா.? ஜங்ஷனை - நெல்லை சந்திப்பு என்றும், ஐகிரவுண்டை - பாளை மேட்டுதிடல் என்றும் டவுணை - நெல்லை நகரம் என்றும் எழுத வைத்த அந்த நபர் யார் தெரியுமா.? 1998 முதல் 2001 வரை நெல்லையில் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. தனவேல்  I.A.S தான். தனித்துவமான திருநெல்வேலி: தமிழ்நாடு அரசாங்க வட்டாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்று ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்து வகையான நிலப்பரப்பு, பலதரப்பட்ட மக்கள், விநோதமான பிரச்னைகள் என்று பல அம்சங்கள் நம் மாவட்டத்திற்கே உரித்தான விஷயங்கள். எனவே திருநெல்வேலிக்கு திறமையான அதிகாரிகளே ஆட்சியர்களாக நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் தமிழ்நாடு அரசின் மிக உயர்ந்த பதவிகளுக்கும் சென்றுவிடுவார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக பல அதிகாரிகள் உள்ளனர். திருநெல்வேலியை திருத்தியவர் : அவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் நெல்லை ஆட்சியர் திரு. தனவேல். அவரின் பணிகாலத்தில் பல

நெல்லையை அலற விடும் ஆட்சியர் ஷில்பா.!

 இத்தனை நாட்களாக சேலம் ஆட்சியர் ரோகினி பக்கமாகவே திரும்பியிருந்த  தமிழக மீடியாக்களை தனது அதிரடி நடவடிக்கைகளால் நம் திருநெல்வேலி பக்கம் திருப்பியிருக்கிறார்  ஆட்சியர் ஷில்பா.! முன்மாதிரியான ஆட்சியர் : நெல்லையின் முதல் பெண் ஆட்சியர் என்ற பொறுப்பை ஏற்றதாலோ என்னவோ, நம் ஆட்சியர் பல நடவடிக்கைகளில் மற்ற அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கடந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெறவிருந்த மதக்கலவரத்தை களத்தில் இறங்கி துணிச்சலாக திசைதிருப்பினார். இதனால் பெரும் மத மோதல் தவிர்க்கப்பட்டது. அன்பு மகள் அங்கன்வாடியில் ... நடுத்தர வர்கத்தினரே தம் பிள்ளைகளை அங்கன்வாடியில் சேர்க்க யோசிக்கும் இந்த காலத்தில் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட தனது குழந்தையை துணிச்சலாக நம்மூர் அங்கன்வாடியில் சேர்த்து நெகிழ வைத்தார். அதிகாரிகளை அலறவிடுகிறார்: தற்போது தனது மென்மையான போக்கிற்கு விடை கொடுத்து அதிரடியில் இறங்கியுள்ளார் ஆட்சியர் ஷில்பா. இது நெல்லை அரசு அலுவலர்கள் இடையே அலறலை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் விவசாய உதவித்தொகையை பெறுவதற்கு வயதான பெண்மணி ஒருவர் உள்ளூர் அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்ட