Skip to main content

Posts

Showing posts from May, 2019

நெல்லையின் வளர்ச்சிக்கு ஆபத்து.?

     மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்துள்ளார் மோடி. ஆனால் தமிழ்நாட்டில் மோடியை வீழ்த்தி திமுக கூட்டணி அபார வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் அதிமுக வசம் இருந்த நம் நெல்லை பாராளுமன்ற தொகுதி தற்போது திமுக வசம் சென்றுள்ளது. இதனால் நம் நெல்லைக்கு சாதகமா.? பாதகமா.? அலசுவோம் வாருங்கள்.. தமிழகத்தை வச்சி செய்யப்போகும் பாஜக:      படுதோல்வியால் தமிழக பாஜக தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஏன் மோடிக்கு வாக்களிக்காமல் போனோம் என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள் என தமிழிசை பகிரங்கமாகவே பேசிவிட்டார். எனவே வரும் காலங்களில் நம் தமிழகம் படாதபாடு படப்போவது தொிகிறது. நெல்லைக்கும் தொல்லை.!      திமுக உறுப்பினரை தோ்ந்தெடுத்துள்ளதால், நம் நெல்லைக்கும் பலத்த ஆப்பு காத்திருப்பதாகவே தோன்றுகிறது. அதிமுக சார்பில் களத்தில் இருந்த மனோஜ் பாண்டியன் வென்றிருந்தால் மத்திய அமைச்சராகி இருப்பார். ஆனால் அது நடக்கவில்லை. நெல்லையில்  இனி என்ன நடக்கும்?      ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நம் நெல்லை இணைந்துள்ளதால், பல முன்னேற்றத் திட்டங்கள் இங்கே நடந்து வருகின்றன. அதில் இனி சுணக்கம் ஏற்படலாம்.     பொிய

வரலாற்றில் இல்லாதளவுக்கு வறண்டது பாபநாசம்

     ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நமது பாபநாசம் அணை வரலாற்றில் இல்லாத அளவுக்கு வறண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டு அடியில் நீர்மட்டம்.!     143 உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் தற்போது வெறும் எட்டு அடி மட்டுமே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. 1942 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து  இந்த அளவுக்கு தண்ணீர் குறைந்த வரலாறே இல்லை என உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். தகிக்கும் பொதிகை மலை.!       வெயிலின் உக்கிரம் தாங்காமல் பொதிகை மலை தவித்து வருகிறது. மலையில் உள்ள ஜீவராசிகள் தண்ணீர் கிடைக்காமல் மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கி விட்டன. பிற வன விலங்குகளின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. வற்றியது தாமிரபரணி.!          வற்றாத ஜீவநதி  என பெயர் பெற்ற தாமிரபரணி வரலாற்றில் முதல் முறையாக வற்றியுள்ளது. தாமிரபரணியின் இந்த பரிதாப நிலையால் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருணபகவான் கைகொடுத்தால் மட்டுமே பிழைப்போம்.!

என்ன தான் நடக்குது ஜங்ஷனுக்குள்ளே..?

நம் ஜங்ஷன் பேருந்து நிலையம்  மூடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகி விட்ட நிலையில் அங்கு என்ன தான் நடக்கிறது.,? தோண்ட தோண்ட ஆற்று மணல்: ஒரு காலத்தில் தாமிரபரணி ஆறு இங்கு ஓடியதோ என்னவோ, இப்போது இந்தஇடத்தில் தோண்ட தோண்ட ஆற்று மணல் வந்து குவிகிறது. பெருக்கெடுக்கும் ஊற்று நீர்:      அருகில் ஆறு ஓடுவதால் தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து அதிகளவில் ஊற்றுநீர் வெளியாகி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. காலியாயின மீதி கடைகள்:     முதல்கட்ட வேலை நடைபெற்ற சமயத்தில் திறந்திருந்த கடைகளும் தற்போது அடைக்கப்பட்டுள்ளன. இரண்டாண்டுகள் ஆகும் போல.!          மூடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் வானம் தோண்டும் பணிகளே நடைபெற்று வருவதால் மொத்த பணிகளும் முடிவடைய எப்படியும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றே தொிகிறது. அதுவரை நெல்லை மக்கள் பேருந்துக்காக வெயிலிலும் மழையிலும்  நனைய வேண்டியது தான்..                                            

திராவிட அரசியலின் பிறப்பிடமே நெல்லை தான்!

திராவிட அரசியலுக்கு மாற்று வேண்டும் என்னும் குரல்கள் சமீபகாலமாக பெருகி வருகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டின் அரசியலை ஐம்பது ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது திராவிட சித்தாந்த கட்சிகள் தான்.  அவ்வளவு வலிமையான திராவிட சிந்தாந்தத்தின் பிறப்பிடம் நம் திருநெல்வேலி தான்.! திராவிடம் பிறந்தது நெல்லையில்! சமயப்பணி செய்ய நெல்லை வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் முதலிய மொழிகளை ஆய்ந்துநோக்கி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்டார். மேலும் இந்த மொழிகளை திராவிட மொழிகள் என்றும் இம்மக்களை திராவிடர்கள் என்றும் அவர் தான் முதலில் அழைத்தார். நம் நெல்லையில் இருந்து அவர் கண்டுபிடித்த அந்த வார்த்தைகள் இன்றளவும் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றன. பெரியாரை உலுக்கிய சேரன்மகாதேவி! 1924 ஆம் ஆண்டில் நெல்லை சேரன்மகாதேவி குருகுலத்தில் நடந்த தீண்டாமை சம்பவமே பெரியாரை காங்கிரசிலிருந்து வெளியேற வைத்தது. அதன் பின்னர் சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார் நம் நெல்லையில் பிறந்த சொல்லான "திராவிடர்" என்ற  பெயரிலேயே கட்சி தொடங்கினார். அவரின் அந்த கட்

ஜங்ஷனில் நிழல் தேடி அலையும் மக்கள்.!

நெல்லை ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் பேருந்துகள் வெளியில் இருந்தே இயக்கப்படுகின்றன. அதனால் பயணிகள் கடும் வெயிலில் காத்திருக்கின்றனர். பெயரளவுக்கே நிழற்குடைகள்: பாளை., டவுண் மற்றும் சேரன்மகாதேவி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் பெயரளவுக்கு இரண்டு நிழற்குடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அது நிரம்பி வழிவதால் வேறுவழியின்றி அக்னி வெயிலில் நனைகின்றனர் நெல்லை மக்கள். வயதான முதியோர்கள் தலையில் துண்டு போர்த்தி முகம் சுளித்து நிற்கிறார்கள். பள்ளிக் கல்லூரி மாணவர்களும் பேருந்துகளுக்காக கடும் வெயிலில் காய்கிறார்கள். நிழல் தருமா மாநகராட்சி? கூடுதல் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்ற நெல்லை மக்களின் வேண்டுகோளுக்கு நெல்லை மாநகராட்சி காது கொடுக்குமா?

இன்று ஜங்ஷன்; அன்று தாமிரபரணி ஆறு?

நெல்லை ஜங்ஷன் பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பூமியை தோண்ட தோண்ட சுத்தமான ஆற்றுமணல் வருவது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது. ஜங்ஷனில் ஓடியதா தாமிரபரணி? தாமிரபரணி ஆற்றிலிருந்து சில அடி தூரத்தில் தான் ஜங்ஷன் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 62 ஆண்டுகள் முன்னர் தான் இங்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்த பகுதி ஆற்றங்கரையாகவே இருந்துள்ளது. அந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் சர்வசாதாரணமாக தண்ணீர் இந்த இடங்களில் புகுந்து விடும். ஆறு ஓடியது உறுதியாகிறது: தற்போது இந்த இடத்தில் அள்ள அள்ள ஆற்று மணல் குவிவது இந்த பகுதியில் ஒரு காலத்தில் தாமிரபரணி ஓடியிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அக்னிநட்சத்திர நாளில் நெல்லையில் மழை

கடந்த ஒரு மாதமாக சூரியன் சுட்டெரித்த நிலையில் சற்று முன்னர் காற்றுடன் அடித்த திடீர் மழை நம் நெல்லை மண்ணை குளிர வைத்தது. அடங்கிய அக்னிநட்சத்திரம் : அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் தொடங்கி இருந்த நிலையில் அதன் தாக்கத்தை இந்த மழை தற்காலிகமாக முறியடித்துள்ளது. ஜெயித்தது நெல்லை.! பொதுவாகவே அக்னி நட்சத்திர காலங்களில் நம் நெல்லையில் மழை பெய்வது வாடிக்கை தான். அது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

பரிதவிக்கும் பாபநாசம். படாதபாடு படும் நெல்லை

எப்போதும் தண்ணீர் துள்ளி ஓடும் நம் தாமிரபரணி இப்போது பரிதவிப்பில் இருக்கிறது. நெல்லையை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம் பொதிகை மலையையும் விட்டுவைக்கவில்லை. விளைவு மாவட்டத்தின் அணைகள் வறண்டு அலங்கோலமாய் காட்சியளிக்கின்றன. பரிதவிப்பில் பாபநாசம்: கடந்த ஆண்டு பருவமழை நம் நெல்லையை ஏமாற்றியதால் பாபநாசம் அணை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறண்டு காணப்படுகிறது. அணையின் உச்சநீர்மட்டம் 143அடி. இப்போது இருப்பது வெறும் 16.30 அடி.! அதிலும் பாதிக்கும் மேல் சகதி தான். அணைக்கு நீர்வரத்தே இல்லாத நிலையில் குடிநீருக்காக மட்டும் நீர் திறக்கப்பட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அதிகப்படியான நீரை தேவையின்றி வெளியேற்றியதே அணையின் வறட்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆறுதல் அளிக்கும் மணிமுத்தாறு.! கடும் கோடை நிலவும் இந்த நேரத்தில் நம் நெல்லைக்கு சற்றே ஆறுதல் தருகிறது காமராஜர் கட்டிய மணிமுத்தாறு. தென்தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணையில் தற்போது 72.32 அடி நீர் இருப்பில் உள்ளது. இதனை வைத்து இந்த கோடையை சமாளித்து விடலாம் என அரசாங்கம் தெரிவிக்கிறது. எனினும

ஐ.டி நகரமாக அவதாரம் எடுத்தது நெல்லை.!

உலகப் புகழ்பெற்ற அடாஸ் சிண்டல் ஐ.டி கம்பெனி நம் திருநெல்வேலியில் நேற்று திறக்கப்பட்டது. கங்கொண்டான் ஐ.டி பார்க்கில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த நிறுவனம் வரும் ஜீன் முதற்கொண்டு செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நகரமானது நெல்லை: இந்த கம்பெனியின் வருகையால் விவசாய நகரமான நம் நெல்லை ஐ.டி நகரமாக புது அவதாரம் எடுத்துள்ளது. இதன் மூலம்  நம் நெல்லை மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. புதிதாக தொடங்கியுள்ள சிண்டல் நிறுவனம் 100 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. தற்சமயம் 25 ஏக்கரில் மட்டுமே கட்டுமானப் பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளும் முடிவடையும் போது 2,300 பணியாளர்களுடன் தென்தமிழகத்தின் மிகப்பெரிய ஐ.டி கம்பெனியாக அது உருமாறும் என தகவல் வெளியாகியுள்ளது.