இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான நம் நெல்லை கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நாட்டின் முதல் அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அணுக்கழிவு மையம் என்றால் என்ன? அணுமின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு மிஞ்சும் பொருள்களே அணுக்கழிவுகள் எனப்படுகின்றன. இந்தக் கழிவுகள் அதிக கதிர்வீச்சு அபாயம் கொண்டவையாகும். உலகின் பல நாடுகளில் இந்தக் கழிவுகள் அணுமின்நிலையங்களிலேயே சேமிக்கப்படுகின்றன. இந்திய அணுமின் நிலையங்களிலும் இதே வழியில் தான் கழிவுகள் கையாளப்பட்டு வருகின்றன. கூடங்குளத்திலும் இதுவரை இந்த முறையிலேயே கழிவுகள் கையாளப்பட்டு வந்தன. ஆனால் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அணுக்கழிவு மையத்தை 2022 ம் ஆண்டுக்குள் அமைப்பதாக இந்திய அரசு வாக்குறுதி தந்தது. அணுமின்நிலையத்திலேயே கழிவுகளை கையாள்வதை விட தனியாக கழிவு மையம் அமைத்து சேமிப்பது பாதுகாப்பது தான். எனினும் பிரச்னை அதுவல்ல..! என்ன ஆபத்து: