தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் நெல்லை பிரிக்கப்பட்டுவிட்டது. இதுநாள் வரை நெல்லையின் பெருமிதங்களாக நாம் கொண்டாடி வந்த பல அம்சங்கள் நம்மைவிட்டு போயிருக்கின்றன. கேரள எல்லை இனி நெல்லையிடம் இல்லை: கேரள மாநிலத்தோடு சாலை வழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் வெகு சில மாவட்டங்களுள் ஒன்றாக நம் நெல்லை இருந்துவந்தது. தென்காசியின் பிரிவால் இனி எல்லை நம்மிடம் இருக்கப்போவதில்லை. பார்டர் புரோட்டா கடையும் தென்காசி மாவட்டத்துக்காரரின் கடையாகி விட்டது! வீரபூமியின் பெயர் மாறிவிட்டது: கட்டபொம்மனையும் பாரதியையும் தூத்துக்குடி எடுத்துக் கொண்டது போல வாஞ்சிநாதனையும்,பூலித்தேவனையும் தென்காசி எடுத்துக் கொண்டுவிட்டது. குற்றாலம் இனி அண்டை மாவட்ட சுற்றுலாத் தலம்: "நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது" என்று இனி எந்தப் பத்திரிகையும், செய்திச் சொல்லப்போவதில்லை. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரெயிலாக மாறிவிட்டது. திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பிரச்னை இனிமேல் தென்காசி மாவட்டத்தின் பிரச்னை. நகரங்களை இழந்த