தமிழ்க் கடவுள் முருகன் ஒரு திரில்லிங் பிரியர். ஆம், நண்பர்களே பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அப்படி..! குன்றின் மேல் குமரன்: நம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மலை உச்சியில் நின்று கொண்டு தான் அருள்பாலிக்கிறார் முருகன். அப்படி அருள்பாலிப்பதனாலேயே நம் அழகனுக்கு "குன்றின் மேலிருக்கும் குமரன்" என பெயர்சூட்டினர் நம் முன்னோர்கள். அதேப் போல திருச்செந்தூரில் ஆர்ப்பரிக்கும் ஆழி அருகே கோவில் கொண்டு காட்சியளிக்கிறார் சண்முகர். நெல்லையில் திகில் சாகசம்: ஆனால் நம் நெல்லையில் இன்னும் ஒருபடி மேலே போய் பாய்ந்தோடும் தாமிரபரணிக்கு நடுவே அசால்ட்டாக அமர்ந்திருக்கிறார் ஆறுமுகன். உலகில் உள்ள கடவுள் சிலைகளுக்கு ஆற்று நீர் கொண்டு அபிஷேகம் நடைபெறும் நிலையில், ஆறே வந்து வருடந்தோறும் முருகனுக்கு அபிஷேகம் செய்கிறதென்றால் அது நம் நெல்லையில் மட்டும் தான் நடக்கும். வியக்க வைக்கும் விஞ்ஞானம்: காலங்காலமாக வருடந்தோறும் பெருக்கெடுக்கும் தாமிரபரணியின் சீற்றத்தை இந்த முருகன் கோவில் எப்படி தாக்குபிடிக்கிறது என்று பார்க்கும் போது, நம் முன்னோர்களி