தமிழகத்தின் முன்னாள் சபாநாயகரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான பி.ஹெச்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 74. தமிழக அரசியல் களத்தில் தாக்கம் செலுத்திய திருநெல்வேலிக்காரர்களுள் மிக முக்கியமானவர் அவர்.! எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியர் : திறமையான வழக்கறிஞராக திகழ்ந்து அரசியலில் இறங்கிய பாண்டியன் நம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர். சொந்த பகுதியில் தனக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அதிமுகவில் தனக்கென தனியிடத்தை பிடித்து வைத்திருத்தார் பி.ஹெச். பாண்டியன். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் நபர்களில் முக்கியமானவராக விளங்கியவர். வானளாவிய அதிகாரம் படைத்தவர்! தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்த போது தனது அதிரடியான செயல்பாடுகளால் அரசியல் அரங்கை அலற விட்டவர் பி.ஹெச்.பாண்டியன். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று இவர் முழங்கிய போது இந்தியாவே தமிழகத்தை திரும்பிப் பார்த்தது. ஜெயலலிதா முதல் சசிகலா வரை! எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகியா? ஜெயலலிதாவா? என்ற நிலை வந்த போது ஜானகி பக்கம் இருந்து ஜெயலலிதாவை எதிர்த்தார். அப்போது ந