கடந்த ஒன்றரை மாதங்களாக நெல்லையை வாட்டி வதைத்து வந்த கடும் வெயில் விடைபெற ஆரம்பித்துள்ளது. மலையாளக்ரையில் மழை: கேரளாவில் இன்று முதல் தென்மேற்குப் பருவமழை துவங்குகிறது. இதனால் நெல்லை, குமரி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையமும் அறிவித்துள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் நெல்லையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சீசன்: கேரளாவில் பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் குற்றால சீசனும் அமோகமாக இருக்கும். அருவிகளில் குளிக்க வாய்ப்பில்லாமல் போனாலும் நெல்லை மாவட்டத்தின் வானிலை குளிர்ந்தே இருக்கப் போகிறது.