ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் ஆயுதப் போர் உலகம் முழுமைக்கும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. எங்கே, 3-ம் உலகப் போர் மூண்டு விடுமோ என உலகின் பணக்கார, நடுத்தர நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன. இந்த தருணத்தில் நம் நெல்லையின் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளை சற்றேனும் திரும்பிப் பார்ப்போம். பிரிட்டன் படையில் அன்றைய இந்தியா: 2-ம் உலகப் போர் நடந்த சமயத்தில் இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக இல்லை. பிரித்தானிய பேரரசின் காலனியாதிக்க நாடாகவே இருந்தது. எனவே, அன்றைய இந்திய வீரர்கள், பிரிட்டன் ராணுவப்படையில் சோ்ந்து 2-ம் உலகப் போரில் ஈடுபட்டார்கள். நெல்லை - அதிமுக்கிய விமான தளம்: 2-ம் உலகப்போரின் போது மதறாஸ் மாகாணத்தில் மிக முக்கிய விமான தளமாக நெல்லை கயத்தாறு விமான நிலையம் செயல்பட்டது. 1936-ம் ஆங்கிலேயர்களால் எழுப்பப்பட்ட கயத்தாறு இரட்டை விமான தளத்தில் 2-ம் உலகப் போர் சமயத்தில் பெரிய பெரிய போர் விமானங்கள் வந்திறங்கி தென்னாட்டின் வான்வெளியை கண்காணித்துள்ளன. ஒரே நேரத்தில் 2 விமானங்கள் தறையிறங்கவும், வானில் எழும்பவும் செய்தன என்று கயத்தாறு ஊர்மக்கள் நினைவுபடுத்துகிறார்கள். உலகப்போருக்கு பின்னர்