வணக்கம் அன்பு நண்பர்களே.! தமிழகத்தின் முக்கிய நகரமான நெல்லை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஆம், நம் நெல்லையின் பெருமைமிகு பத்து நாள் திருவிழாவான ஆனிப்பெருந்திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. இனி தினந்தோறும் சுவாமி அம்மன் வீதி ஊர்வலம், கச்சேரி நடனம் என்று பத்து நாள்களுக்கு நெல்லையில் கொண்டாட்டம் தான். இதன் உச்ச நிகழ்வான தேரோட்டம் வரும் 14ம் தேதி நடக்கவுள்ளது. நாட்டில் ஓடும் மற்ற தேர்களுக்கு இல்லாத பெரும் சிறப்புகளெல்லாம் வரும் புதனன்று ஓடவிருக்கும் நம் நெல்லையப்பர் தேர்களுக்கு உண்டு...! அவைகள் என்னென்ன ...?
வாருங்கள்....! பார்ப்போம்..
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்:
நெல்லையப்பர் பேராலயம் |
அம்சமான ஐந்து தேர்கள்:
நெல்லையில் ஆனித்திருவிழாவின் போது ஐந்து தேர்கள் ரத வீதிகளை சுற்றி வரும். சுவாமி தேர்(நெல்லையப்பர்) , அம்பாள் தேர் (காந்திமதி) , முருகன் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என்று ஐந்து தேர்கள் வலம் வந்து வீதிகளை அழகுபடுத்தும். இந்த ஐந்து தேர்களில் முக்கியமானது நெல்லையப்பர் தேராகும்.
இதன் சிறப்பம்சங்கள் :
1. இது தமிழகத்தின் 3வது மிகப்பெரிய தேர் ஆகும்.
2. சுமார் 400 டன் எடை கொண்டது இத்தேர்.
3. இதன் அச்சு லண்டனில் ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டது.
4. முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தேர்.
5. 518 ஆண்டுகளாக தடையின்றி நடைபெறும் உலகின் பழமையான தேரோட்டம்.
6. 1505 ம் ஆண்டு முதல் நெல்லையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
7. சுதந்திரத்திற்கு பின் வெள்ளையனை வெளியேற்றிய மகிழ்ச்சியில் தேசிய கோடியை தலையில் பறக்க விட்டபடி வலம் வந்த சுதந்திர தேர் , நம் நெல்லையப்பர் தேர்.
இத்தனை சிறப்புகளை கொண்ட தேரோட்டம் வரும் 14ம் தேதி நெல்லையில் நடக்கவிருக்கிறது. லட்சக்கணக்கான பக்க்தர்கள் நெல்லையில் கூடவிருக்கிறார்கள்..
என்ன நண்பரே... நீங்களும் நிச்சயம் வாருங்கள். நெல்லை அதிரட்டும்..!
Comments
Post a Comment