பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது.
இனி நெல்லை தான் No.1.
இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம்.
திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு!
ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசியா சங்கரன்கோவிலா?
வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
தென்காசி:
*ஏற்கனவே தென்காசி நாடாளுமன்ற தொகுதியாக இருப்பதால் தென்காசி மாவட்டம் உருவாகவே வாய்ப்பு அதிகம்.
*மேலும் முக்கிய ரயில்வே,சாலை சந்திப்பாகவும் தென்காசி திகழ்கிறது.
*இப்போதே நெல்லையைப் போன்ற வட்டார போக்குவரத்து அலுவலகம் அங்கு செயல்படுகிறது.
*குற்றாலம் அருகிலிருப்பதால் தென்காசி தமிழகம் முழுவதும் பிரபலம்.
சங்கரன்கோவில்:
*நெல்லை மாவட்டத்தில் நெல்லைக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக இது இருக்கிறது.
*சங்கரன்கோவில் பல ஆண்டுகளாக அமைச்சர்களின் தொகுதியாக இருந்து வருகிறது.
*புதிய மாவட்டம் உருவானால், அம்மாவட்டத்தின் மையப்பகுதியாக சங்கரன் கோவிலே இருக்கும்.
நெல்லைக்கு என்ன இழப்பு.?
*புதிய மாவட்டம் உருவானால் நெல்லையின் முக்கியத்துவம் சற்றே குறையும்.
*உலகப்புகழ் பெற்ற குற்றால அருவியை நெல்லை மாவட்டம் இழக்கும். (எனினும் பாபநாசம், மாஞ்சோலை நெல்லையில் நீடிக்கும்)
*கேரள எல்லையை கொண்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இருந்து நெல்லை நீக்கப்படும்.
*அலுவல் ரீதியாக நெல்லைக்கு வரும் தென்காசி பகுதி மக்களின் எண்ணிக்கை குறையும்.
நெல்லையின் அடுத்த பிள்ளை:
பாரம்பரியமிக்க நம் நெல்லை மாவட்ட பகுதிகளைக் கொண்டு தான் ராமநாதபுரம்,விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.
அவை அனைத்தும் இன்று தனித்த வளர்ச்சியில் பயணித்து வருகின்றன.
அந்த வரிசையில் புதிய மாவட்டமும் இணைய வாய்ப்புள்ளது.
அவை அனைத்தும் இன்று தனித்த வளர்ச்சியில் பயணித்து வருகின்றன.
அந்த வரிசையில் புதிய மாவட்டமும் இணைய வாய்ப்புள்ளது.
புதுப் புது பெயரில் மதுரைக்கு தெற்கே எத்தனை மாவட்டங்கள் உருவானாலும் தென் பாண்டி நாடு என்ற நமது பூர்வீகப் பெயரில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.!
Comments
Post a Comment