தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது.
ஆய்வு முடிவில் அதிர்ச்சி:
ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது.
2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர். இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது.
நெல்லையில் வீழும் விவசாயம்:
இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது.
பசுமையை இழக்கிறது நெல்லை:
மேலும் நெல்லை மாநகரின் மரங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் குறைந்துள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் நம் நெல்லையின் வனப்பரப்பு சுமார் 178% அளவிற்கு குறைந்துள்ளது.
மேலும் நெல்லை மாநகரின் மரங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் குறைந்துள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் நம் நெல்லையின் வனப்பரப்பு சுமார் 178% அளவிற்கு குறைந்துள்ளது.
விவசாயத்தை அழித்து வளர்கிறோம்:
நம் நெல்லை மாநகரின் பரப்பளவில் இந்த 10 ஆண்டுகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை 31% அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
நம் நெல்லை மாநகரின் பரப்பளவில் இந்த 10 ஆண்டுகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை 31% அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
நெல்லையை வாட்டி வதைக்கும் வெயில்:
மேற்கண்ட சூழலியல் மாற்றங்களால் நம் நெல்லையின் வெப்பநிலை 165% உயர்ந்துள்ளதாக பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நெல்லையின் சராசரி வெப்பநிலை 30 முதல் 32 டிகிரி செல்ஷியஸ் அளவில் தான் இருந்துள்ளதாம். ஆனால் தற்போது அது 38-40 வரைக்கும் பதிவாகி வருவதாக அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒருபுறம் நம் நெல்லை அசுர வேகத்தில் வளர்வது மகிழ்ச்சியை அளித்தாலும் நம் நெல்லையின் உயிர்நாடியான விவசாயமும் பசுமைச்சூழலும் கடுமையாக பாதிப்படைவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
நம்ம ஊரின் பசுமையை மீட்டெடுக்க நெல்லையின் பிள்ளைகளான நாம் என்ன செய்யப்போகிறோம்.?
வயலை அழித்து கட்டுமானம் வேண்டாம் மரங்களை வளர்ப்போம் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வேண்டாம் ஆற்றை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்
ReplyDelete