கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை இயக்கப்பட்டுவந்த பாலருவி எக்ஸ்பிரஸ் வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் நெல்லை வரை நீடிக்கப்படுகிறது. செங்கோட்டை-புனலூர் அகலப் பாதை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக ஓடவுள்ள இந்த ரயில் நெல்லையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தங்கள்:
புதிய பாலருவி ரயில் செங்கோட்டை,தென்காசி,பாவூர்சத்திரம்,
கீழக்கடையம்,அம்பை,சேரன்மகாதேவி முதலிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ரயில் ஓடத் தொடங்கினால் நெல்லை-கேரளா இடையே தொழில் மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment