நாம் படிக்கின்ற காலத்தில் இந்தியாவின் மிகப்பழமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றே நம் வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே நம் நெல்லை தாமிரபரணி கரையோரத்தில் மிகச் செழிப்பான நாகரிகம் இருந்துள்ளது.
4000 ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகம்.
நம் தாமிரபரணி கரையோரப்பகுதி இப்போது போலவே அந்த காலங்களிலும் மிகச் செழிப்பாக இருந்துள்ளது. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை உயர்ந்த நாகரீகத்தை பின்பற்றி நம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆதியில் தோன்றிய ஆதிச்சநல்லூர்:
நம் நெல்லையில் இருந்து பதினெட்டே கி.மீ தொலைவில் தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி இங்கே நடந்து கொண்டிருந்த சமயத்தில் அலெக்ஸாண்டர் என்ற தொல்பொருள் ஆய்வாளர் அகழாய்வை மேற்கொண்டார். அதில் அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது. ஆம், உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு ஒன்று அங்கே இருப்பதைக் கண்டு அசந்துபோனார்.
சுமார் 110 ஏக்கரில் அது அமைந்திருக்கிறது. இடுகாடே இத்தனை பெரியதாக இருந்தால் அங்கே மிகப் பெரிய நகரம் ஒன்றும் இருந்திருக்கும் என அறிவித்தார் அந்த ஆய்வாளர்.
அது மட்டுமின்றி ஆதி தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த படைக் கருவிகள்,பயன்படுத்திய சாமான்கள்,தங்கம்,இரும்பு முதலிய உலோகங்கள் என பலவற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார் அவர்.
முதுமக்கள் தாழி..!
இறந்தவர்களின் உடலை மண்கலங்களில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் அந்த மக்களிடையே இருந்துள்ளது. இது எகிப்து மம்மி போன்ற நடைமுறை. இதுவும் அகழாய்வின் போது கண்டறியப்பட்டது. ஆனால் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் போதுமான அளவில் பதிவு செய்யப்படவில்லை. இந்திய வரலாற்றில் பெரும் மாற்றத்தை இது கொண்டுவரும் என்பதால் இதை தொடுவதற்கே அச்சப்படுகிறார்கள்.
வருகிறது அருங்காட்சியகம்:
இந்நிலையில் வெகுநாட்களுக்குப் பிறகு, நம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை காட்சி படுத்த வசதியாக உலகத் தரமிக்க அருங்காட்சியகம் ஒன்றை ஆதிச்சநல்லூரில் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கீழடிக்கும் முந்திய நாகரீகம்.
தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கும் கீழடி அகழாய்வு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தியது எனக் கூறப்படுகிறது. இது தமிழர்களின் தாய்மடி என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் ஆதிச்சநல்லூர் நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.
கீழடியில் நடைபெற்றதை போலவே மிகப்பெரிய அகழாய்வை நம் ஆதிச்சநல்லூரில் நடத்தினால் இந்திய துணைகண்டமே வியக்கும் வகையில் முடிவுகள் வெளிவரக்கூடும்.
தமிழ் மொழி தோன்றிய நம் நெல்லை மண்ணில் தான் மனித இனத்தின் முதல் நாகரீகமும் தோன்றியது என்ற தகவல் வரலாறாக பதியப்படும்...
தாமிரபரணி நதிக்கரை தரணியெங்கும் புகழ்பெறும்.!

Nalla Pathivu
ReplyDeleteTamil thondirathu kumamari kandam nellai illa
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉண்மையில் ஆதித்தன் நல்லூர் என்பதே ஆதிகாலத்து பெயர். பின்னர் காலப்போக்கில் பேச்சில் (கொச்சை தமிழில் ) ஆதிச்சநல்லூர் என மறுவியுள்ளது.
ReplyDeleteஆகையால் தூய தமிழில் ஆதித்தன் நல்லூர் என உண்மையான பெயரை மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும்.