நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பலருக்கு நண்பராக, கடவுளாக விளங்குபவர் விநாயகர். இன்னும் சிங்கிளாக விளங்குவது அவரது தனிச்சிறப்பு. அப்படிப்பட்ட விநாயகருக்கு நம் நெல்லையில் ராஜாகோபுரத்துடன் கூடிய தனிக் கோவில் கம்பீரமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா.?
தாமிரபரணி நதிக் கரையோரத்தில் மணிமூர்த்தீஸ்வரம் என்னும் இடத்தில் அழகிய கோவில் ஆனைமுகனுக்கு அமைந்துள்ளது. பிள்ளையாருக்கு என்று பிரத்யேகமாக பல கோவில்கள் இருந்தாலும், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையார் கோவில் என்ற பெருமை நம் நெல்லை. மணிமூர்த்தீஸ்வரம் கோவிலுக்கே உண்டு. பிள்ளையார்பட்டியில் கூட துணைக் கடவுளாக மட்டுமே அருள்பாலிக்கும் விநாயகர் நம் நெல்லையில் மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நம்ம ஊரு விநாயகர் கமிட்டெட் ஆன விநாயகராக இங்கு வீற்றிருக்கிறார். ஆம், விக்னேஷ்வரி என்ற பெண் தெய்வத்தோடு இங்கு அருள்பாளிக்கிறார் நம்மூரு உச்சிஷ்ட்ட விநாயகர். நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், விழாக் கோலம் பூண்டுள்ளது இக்கோவில்.
வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து இக்கோவிலுக்கு சாலை வசதி உண்டு.!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் நண்பர்களே.!

Comments
Post a Comment