தமிழர்களின் வரலாறு நம் நெல்லையில் இருந்தே தொடங்குகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஒன்றிய அரசு உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக நாகரிகத்தின் தொட்டில்:
நெல்லையில் இருந்து 18 கி.மீ தொலைவிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு இன்று தெரிவித்துள்ளது. அதாவது கிருஸ்து பிறப்பதற்கு முன்னரே நம் தாமிரவருணி கரையில் உயர்ந்த நாகரிகம் செழித்து இருந்துள்ளது.
கீழடிக்கும் முந்திய நெல்லை நாகரிகம்:
சமீபத்தில் மதுரை கீழடியில் நடந்த அகழாய்வின் போது 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அதற்கும் முந்தியதாக நம் நெல்லை நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கிறது. இதனால் தமிழர்களின் தாய்மடி நம் தென்பாண்டி சீமைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.!

Comments
Post a Comment