தமிழ்க் கடவுள் முருகன் ஒரு திரில்லிங் பிரியர். ஆம், நண்பர்களே பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அப்படி..!
குன்றின் மேல் குமரன்:
நம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மலை உச்சியில் நின்று கொண்டு தான் அருள்பாலிக்கிறார் முருகன். அப்படி அருள்பாலிப்பதனாலேயே நம் அழகனுக்கு "குன்றின் மேலிருக்கும் குமரன்" என பெயர்சூட்டினர் நம் முன்னோர்கள். அதேப் போல திருச்செந்தூரில் ஆர்ப்பரிக்கும் ஆழி அருகே கோவில் கொண்டு காட்சியளிக்கிறார் சண்முகர்.
நெல்லையில் திகில் சாகசம்:
ஆனால் நம் நெல்லையில் இன்னும் ஒருபடி மேலே போய் பாய்ந்தோடும் தாமிரபரணிக்கு நடுவே அசால்ட்டாக அமர்ந்திருக்கிறார் ஆறுமுகன். உலகில் உள்ள கடவுள் சிலைகளுக்கு ஆற்று நீர் கொண்டு அபிஷேகம் நடைபெறும் நிலையில், ஆறே வந்து வருடந்தோறும் முருகனுக்கு அபிஷேகம் செய்கிறதென்றால் அது நம் நெல்லையில் மட்டும் தான் நடக்கும்.
வியக்க வைக்கும் விஞ்ஞானம்:
காலங்காலமாக வருடந்தோறும் பெருக்கெடுக்கும் தாமிரபரணியின் சீற்றத்தை இந்த முருகன் கோவில் எப்படி தாக்குபிடிக்கிறது என்று பார்க்கும் போது, நம் முன்னோர்களின் நுட்பமான விஞ்ஞானம் நம்மை வாய்ப்பிளக்க வைக்கிறது.
நதியின் குறுக்கே நகராத படகு:
குறுக்குத்துறை முருகன் கோவிலின் கட்டுமானம் படகு வடிவில் அமைந்துள்ளது. அதாவது ஆற்றை எதிர்த்து கூம்பு வடிவத்தில் நீண்டிருக்கிறது கோவில். இதனால் பாய்ந்து வரும் நதி நீர் இரண்டாக கிழிந்து இருபுறமும் பிரிந்து விடுகிறது. இதனால் எந்த வேகத்தில் வெள்ளம் வந்தாலும் கோவிலுக்கு எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை.
1992 வெள்ளத்தின் போது கோவிலுக்கு மேல் தண்ணீர் சென்ற போதும் சில ஓடுகள் தான் காணாமல் போனதாம்.!😜
1992 வெள்ளத்தின் போது கோவிலுக்கு மேல் தண்ணீர் சென்ற போதும் சில ஓடுகள் தான் காணாமல் போனதாம்.!😜
திருச்செந்தூரின் தாய்க் கோவில்:
குறுக்குத்துறையின் மற்ற பெருமைகள் நம்மை இன்னும் ஆச்சர்யப்பட வைக்கிறது.
1. திருச்செந்தூர் கோவிலில் இருக்கும் முருகனின் மூலவர் சிலை குறுக்குத்துறை பாறைகளில் இருந்து தான் வெட்டி செதுக்கப்பட்டுள்ளது.
2. வெள்ளையர்களால் கடலில் தூக்கி வீசப்பட்ட திருச்செந்தூர் செப்பு முருகன் சிலைக்கு பதிலாக புதிய சிலை ஒன்றை செய்துள்ளனர். ஆனால் அந்த சிலை மீண்டும் கிடைத்துவிட்டதால், புதிதாக செய்யப்பட்ட சிலையை நம் குறுக்குத்துறைக்கு கொண்டு வந்து நிறுவியுள்ளார்கள்.
இதனால் நம் நெல்லை குறுக்குத்துறை திருச்செந்தூரின் தாய்க் கோவிலாக அழைக்கப்படுகிறது.
அதிசயம்,அற்புதம்:
இப்படி பல பெருமைகளை தாங்கி நிற்கும் இந்த முருகன் கோவில் நம் பொருனையின் ஆர்ப்பரிப்பையும் தாங்கி நிற்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.!
Comments
Post a Comment