தமிழகத்தின் முன்னாள் சபாநாயகரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான பி.ஹெச்.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 74. தமிழக அரசியல் களத்தில் தாக்கம் செலுத்திய திருநெல்வேலிக்காரர்களுள் மிக முக்கியமானவர் அவர்.!
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியர்:
திறமையான வழக்கறிஞராக திகழ்ந்து அரசியலில் இறங்கிய பாண்டியன் நம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர். சொந்த பகுதியில் தனக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அதிமுகவில் தனக்கென தனியிடத்தை பிடித்து வைத்திருத்தார் பி.ஹெச். பாண்டியன். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் நபர்களில் முக்கியமானவராக விளங்கியவர்.
வானளாவிய அதிகாரம் படைத்தவர்!
தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்த போது தனது அதிரடியான செயல்பாடுகளால் அரசியல் அரங்கை அலற விட்டவர் பி.ஹெச்.பாண்டியன். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று இவர் முழங்கிய போது இந்தியாவே தமிழகத்தை திரும்பிப் பார்த்தது.
ஜெயலலிதா முதல் சசிகலா வரை!
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகியா? ஜெயலலிதாவா? என்ற நிலை வந்த போது ஜானகி பக்கம் இருந்து ஜெயலலிதாவை எதிர்த்தார். அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜானகி அணி சார்பாக இவர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். பின்னர் ஒன்றுபட்ட அதிமுகவில் இயங்கியவர், நெல்லை எம்.பியாகவும் இருந்துள்ளார்.
ஜெ. மரணத்திற்கு பிறகு பெரும்பாலான அதிமுகவினர் சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொண்ட நிலையில் தனியாளாக நின்று சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் பி.ஹெச். பாண்டியன். பின்னர் இவரோடு ஓபிஎஸ்சும் சேர்ந்து கொள்ள தமிழக அரசியல் தலைகீழானது.!
இப்படி,
தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான நம் நெல்லையில் பிறந்து தனது திறமையால் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை தீர்மானிக்கும் வல்லமை உள்ளவராக வாழ்ந்து மறைந்துள்ளார் பாண்டியன் அண்ணாச்சி.! அவரை நம் நெல்லை நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்.!
அஞ்சலி...

Comments
Post a Comment