சேலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்துவைத்துள்ளார். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதான் தமிழகத்தின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்பது போல செய்திகளும் பரவி வருகின்றன.
உண்மை என்ன?
சேலத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தை ஈரடுக்கு மேம்பாலம் என்று அழைக்கலாமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
ஏனெனில் தற்போது கட்டப்பட்டுள்ள அந்த பாலம் முழுமையான இரண்டடுக்கு பாலமாக அமைக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பாலம் மேலும் கீழுமாக அமைந்துள்ளது. ஆனால் நெல்லையில் முழு பாலமும் ஈரடுக்காக அமைந்துள்ளது.
மேலும், நெல்லை மேம்பாலத்தில் ஒரே தூணின் மீது இரண்டு அடுக்குகளும் அமைந்திருக்கிறது ஆனால் சேலத்தில் பக்கவாட்டில் தூண் எழுப்பப்பட்டு இரண்டாவது பகுதி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீடியாக்கள் இதனை ஈரடுக்கு பாலம் என்றும், தமிழகத்தின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் இது தான் என்பது போலவும் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
Comments
Post a Comment