ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் ஆயுதப் போர் உலகம் முழுமைக்கும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. எங்கே, 3-ம் உலகப் போர் மூண்டு விடுமோ என உலகின் பணக்கார, நடுத்தர நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன. இந்த தருணத்தில் நம் நெல்லையின் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளை சற்றேனும் திரும்பிப் பார்ப்போம்.
பிரிட்டன் படையில் அன்றைய இந்தியா:
2-ம் உலகப் போர் நடந்த சமயத்தில் இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக இல்லை. பிரித்தானிய பேரரசின் காலனியாதிக்க நாடாகவே இருந்தது. எனவே, அன்றைய இந்திய வீரர்கள், பிரிட்டன் ராணுவப்படையில் சோ்ந்து 2-ம் உலகப் போரில் ஈடுபட்டார்கள்.
நெல்லை - அதிமுக்கிய விமான தளம்:
2-ம் உலகப்போரின் போது மதறாஸ் மாகாணத்தில் மிக முக்கிய விமான தளமாக நெல்லை கயத்தாறு விமான நிலையம் செயல்பட்டது. 1936-ம் ஆங்கிலேயர்களால் எழுப்பப்பட்ட கயத்தாறு இரட்டை விமான தளத்தில் 2-ம் உலகப் போர் சமயத்தில் பெரிய பெரிய போர் விமானங்கள் வந்திறங்கி தென்னாட்டின் வான்வெளியை கண்காணித்துள்ளன.
ஒரே நேரத்தில் 2 விமானங்கள் தறையிறங்கவும், வானில் எழும்பவும் செய்தன என்று கயத்தாறு ஊர்மக்கள் நினைவுபடுத்துகிறார்கள். உலகப்போருக்கு பின்னர், இந்திய ராணுவ விமானங்களும், மற்ற சில விமானங்களும் இந்த தளத்தில் இறங்கி வானில் எழும்பியிருக்கின்றன.
இவ்வாறு உலகப் போரில் பங்கெடுத்த கயத்தாறு விமான தளம் இப்போது பராமரிப்பு இன்றி சூட்டிங் ஸ்பாட்டாக மாறி நிற்பது வேதனையான விஷயம்.!
Comments
Post a Comment