Skip to main content

திருநெல்வேலியும் கருணாநிதியும்.!

கருணாநிதி.! அரை நூற்றாண்டுகால தமிழக அரசியலில் தன் இருப்பை பல வழிகளில் வெளிப்படுத்தி வந்த ஓர் அரசியல் ஆளுமை. தனது திட்டங்களால் எந்த அளவுக்கு புகழப்பட்டாரோ அதே அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளான அபூர்வ அரசியல்வாதி.!

கருணாநிதியின் வாழ்க்கை, முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்தியே அமைந்திருந்தாலும் திருநெல்வேலியோடு அவர் கொண்டிருந்த தொடர்பு மிக முக்கியமானது.

நெல்லையை புண்ணிய பூமியாக்கிய கலைஞர்:

இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சமயம் கருணாநிதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காண வந்த அண்ணா மிகவும் மனம் நெகிழ்ந்து "என் தம்பி கருணாநிதி அடைபட்டிருக்கும் இந்த இடம் நான் யாத்திரை மேற்கொள்ளவேண்டிய புண்ணிய பூமி" என்று அழைத்து பேசியது திமுகவின் வரலாற்று தருணமாகும். இந்நிகழ்வு  அண்ணா-கலைஞர் இடையேயான ஆழ்ந்த நட்பை  தமிழ்நாட்டுக்கு அறிவித்தது.

"நெஞ்சினிக்கும் நெல்லை"!

திமுகவின் நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாள் விழா சென்னையில் நடந்து வந்ததே வாடிக்கையாக இருந்த நிலையில் முதன் முறையாக சென்னைக்கு வெளியே நம் நெல்லையில் நடத்திக் காட்டினார் நெல்லை மாவட்டக்காரர் வைகோ. அவரின் அழைப்பால் நெல்லை வந்த கருணாநிதி தொண்டர்படை அணிவகுப்பை கண்டு அசந்துபோய் விட்டாராம். பின்னர் இந்நிகழ்வை பற்றி "நெஞ்சினிக்கும் நெல்லை" என கட்டுரை எழுதினார்.

திமுகவைப் பிளந்த நெல்லைக் காரர்.

திமுகவை பிளவுபடுத்தியவர்களுள் முக்கியமானவர்கள் இருவர். ஒருவர் மிகப்பெரிய நடிகர் எம்.ஜி.ஆர். மற்றொருவர் நெல்லையில் கல்வி பயின்ற பேச்சாளர் வைகோ.!

எம்.ஜி.ஆரைக் காட்டிலும் திமுகவை செங்குத்தாக பிளந்தவர் நம் நெல்லைக்காரர் வைகோ தான் என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்று.

நவீன நெல்லையின் வடிவமைப்பாளர்.

நெல்லையப்பர் கோவிலும் தாமிரபரணியுமே நெல்லையின் அடையாளமாக இருந்து வந்த நிலையில் அதை மாற்றும் வகையில் இந்தியாவின் முதல் ஈரடுக்கு பாலத்தை நம் நெல்லையில் அமைத்தார் கலைஞர்.
அதற்கு திருவள்ளுவர் பெயரை சூட்டியது அவரின் நுண்ணரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

அதுமட்டுமல்ல, மனோண்மணியம் பல்கலைக்கழகம், வடக்கு-தெற்கு பைபாஸ் சாலை திட்டம் முதலியவற்றையும் அவரே கொண்டுவந்தார்.

1998 ல் மாபெரும் சமூக பதற்ற நிலை நம் நெல்லையில் நிலவிய போது "நெல்லை-பெருந்தொல்லை" என விமர்சித்தவர் பின்னர் கமிட்டி அமைத்து ஆய்வு செயது கங்கைகொண்டான்,நாங்குநேரி SEZ., எல்காட் ஐடி பூங்கா முதலியவற்றை நெல்லைக்கு  கொண்டுவந்தார். இப்படி பல திட்டங்களை ஒரு முதல்வராக நம் நெல்லைக்கு  பரிசளித்துள்ளார் கருணாநிதி. அவரின் பங்களிப்பை நெல்லை என்றும் மறவாது.!





Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...