அயர்லாந்திலிருந்து நம் நெல்லைக்கு வந்து தமிழ் தொண்டாற்றி மறைந்த மொழியியல் அறிஞர் கால்டுவெல் பற்றிய கட்டுரையை கவிஞர் வைரமுத்து நேற்று பாளையங்கோட்டையில் அரங்கேற்றினார். இந்நிகழ்விற்கு வைகோ தலைமை தாங்கினார். அதில் பேசிய கவிஞர் வைரமுத்து நம் திருநெல்வேலியின் பெருமைகளை சிலாகித்துப் பேசினார்.
குற்றாலத்தைப் போன்ற அழகும்,குளுமையும் நிறைந்த நீர்வீழ்ச்சிகள் உலகில் வேறு எங்குமே இல்லை என கால்டுவெல் தனது புத்தகத்தில் எழுதியிருப்பதாக வைரமுத்து தெரிவித்தார். மேலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக நெல்லைச் சீமை விளங்க கால்டுவெல்லும் ஒரு வகையில் காரணமாக இருந்ததாக அவர் கூறினார்.
நம் திருநெல்வேலி மண்ணில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை அவர் உணர்ச்சிப் பொங்க கூறிய போது நூற்றாண்டு அரங்கமே ஆர்ப்பரித்தது. விசிலும் பறந்தன.
மேலும், திருநெல்வேலியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல இவ்வூரில் வாழும் அஃறிணைகளுக்கும் சுயமரியாதை உணர்வு அதிகம் என வைரமுத்து பேசினார். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே முடியும் ஒரே ஜீவநதியான தாமிரபரணியே அதற்கு சாட்சி என்ற போது கைதட்டல்கள் அரங்கை நிறைத்தன.!
கால்டுவெல் பற்றி கட்டுரை பாட வந்த வைரமுத்து நம் திருநெல்வேலியின் பெருமைகளை புகழ்ந்து தள்ளியது வந்திருந்தவர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது.

Comments
Post a Comment