Skip to main content

மோடி ஆட்சியில் நம் நெல்லை பெற்றது என்ன?



பெரும் ஆரவாரத்தோடு ஆட்சிக்கு வந்த மோடியின் ஆட்சிகாலம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐந்தாண்டுகால கால மோடி ஆட்சியில் நம் நெல்லை பெற்றது என்ன.? வாருங்கள் பார்ப்போம்.

உருப்படியான ஸ்மார்ட் சிட்டி திட்டம்:

இந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் நம் நெல்லைக்கு கிடைத்த சிறந்த திட்டமென்றால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான். முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த நெருக்கடியால் நம் திருநெல்வேலியையும் அத்திட்டத்தில் ஒன்றிய அரசு சேர்த்துக் கொண்டது. அதனால் பல உட்கட்டமைப்பு வசதிகள் நம்மூரில் நடந்து வருகின்றன.

நவீனமாகும் ஜங்ஷன்:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நம் ஜங்ஷன் பஸ் நிலையம் 78 கோடி ரூபாயில் நவீனமாகி வருகிறது.

மேலும் அம்ருத் என்னும் திட்டத்தின் கீழ் நம் நெல்லையில் பல இடங்களில் பூங்காக்கள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன.

மற்றவை:

இவைத்தவிர

1. செங்கோட்டை-புனலூர் வழித்தடத்தில் பாலக்காடு-நெல்லை புதிய ரயில்.

2. நெல்லை- தாம்பரம் புதிய எக்ஸ்பிரஸ்.

3. மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம் நெல்லை வரை நீட்டிப்பு.

4. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை.

குறைகள்:

மேற்கண்ட நிறைகள் நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் குறைகளும் இல்லாமல் இல்லை.

1. காலங்காலமாக இருந்து வரும் நெல்லை தனி ரயில்வே கோட்ட கோரிக்கை மோடி ஆட்சியிலும் நிறைவேறவில்லை.

2. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டான நெல்லையில் ஐஐடி (அ) எம்ஐடி அமைக்க வேண்டும் என்ற கல்வியாளர்களின் கோரிக்கையும் நிறைவேறவில்லை.

3. கயத்தாறில் நெல்லை விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியும் செயல்வடிவம் பெறவில்லை.

4. நம் தாமிரபரணியை தூய்மை படுத்தி நீர்வழிப் போக்குவத்தை துவக்கும் முயற்சியும் செயல்படுத்தப்படவில்லை.

5. மேலும் சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் அமைச்சர் நிர்மலா முன்மொழிந்த  ராணுவ தளவாட சாலையில் நெல்லை நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் புறக்கணிக்கப்பட்டது.

விடிவு காலம் வருமா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நம் நெல்லை தொகுதியில் முக்கிய புள்ளிகள் பலரும் களமிறங்க காத்திருக்கின்றனர். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் களமிறங்குவார் என செய்திகள் வருகின்றன. காங். சார்பில் பீட்டர் அல்போன்ஸ் களமிறக்கப்படலாம். மேற்கண்ட வேட்பாளர்கள் மக்கள் பணிகளில் திறமையாளர்கள் என்பதால் நம் நெல்லையின் கோரிக்கைகள் வரும் காலங்களில்  நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...