அன்றய பாண்டியர்களின் தலைநகரம், பிரிட்டிஷ் மதராச மாகாணத்தின் முக்கிய நகரம் . நவீன தமிழகத்தின் 2 து மிகப்பெரிய நெற்களஞ்சியம் என்று புகழ் பல பெற்ற நம் நெல்லை சமீப காலமாக அதன் முக்கியத்துவதை இழக்க துவங்குகிறதா....? அலசுவோம் வாருங்கள்..!
நெல்லையின் முக்கியத்துவம்:
இன்று நம் காணும் நெல்லை மாநகரம், இரு வாரங்களுக்கு முன் உருவான திடீர் நகர் அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக சிறுக சிறுக வளர்ந்த பாரம்பரிய நகரம். ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவின் படி நெல்லையின் வயது 3000க்கும் மேல். வற்றாத ஜீவா நதியின் தாமிரபரணியின் கரையில் அமைந்த நம் நெல்லை தமிழ் வளர்த்த பேரூர்.சுதந்திர தமிழகத்தில் அதிக நகரங்களை கொண்டிருந்த ஒரே ஜில்லா.இப்படிஎத்தனயோ பெருமைகளை நம் நெல்லை மாவட்டம் கொண்டிருந்தது..ஆனால் காலம் செல்ல செல்ல நெல்லையின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்பதை காலம் நமக்கு உணர்த்துகிறது.
காரணம் என்ன..?
ஒரு காலத்தில் அரசியல் ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் செழிப்பிலிருந்த நெல்லைக்கு இந்நிலை ஏற்ப்பட காரணம் ஒன்று இரண்டில்லை. பல...!
வேலைவாய்ப்பு :
புவியியலின் படி நம் நெல்லை மாவட்டம் விவசாயத்திற்க்கு ஏற்ற பகுதியாக விளங்கிவருகிறது. ஆனால் இதுவே, நம் நெல்லை பிராந்தியத்தை தொழில் துறையில் பின்தங்க வைத்திருக்கிறது. இது ஒரு வகையில் நியாயம் தான் என்றாலும், விவசாயம் சாராத பகுதிகளுக்கும் நெல்லை மாவட்டத்தில் குறைவில்லை.! வடக்கே கங்கைகொண்டான் துவங்கி தெற்கே திசயன்விளை வரை தொழிற்சாலைகளை அமைக்க யஏற்ற இடங்கள். இங்கு தொழில் வளர்ச்சி யஏற்ப்பட்டல் தமிழகத்தின் மிக முக்கிய பொருளாதார மண்டலமாக
நெல்லை வளர்ச்சி பெறும்...!
சுற்றுலா:
இயற்கையிடம் நம் நெல்லை பெற்ற பரிசுகள் கொஞ்ச நஞ்சமில்லை. இமயமலைக்கு நிகராக புகழ் கொண்ட பொதிகை மலை, உலகோரை தான் பக்கம் இழுக்கும் வல்லமை கொண்ட குற்றால அருவிகள், பிரம்மாண்ட நெல்லையப்பர் பேராலயம், தாமிரபரணி பாசன வயல்வெளிகள், நூற்றுக்கணக்கான பழம்பெரும் கோவில்கள், என்று புகழ் பெற்ற பல சுற்றுலா தலங்கள் நெல்லை மாவட்டத்தில் இருக்கின்றன.. ஆனால் அவைகள் பற்றிய தகவல்கள் ஏனோ , சக தமிழர்களுக்கு தெரியாத நிலை இன்னும் தொடர்கிறது.குறிப்பாக நெல்லையப்பர் கோவில் பற்றியே தமிழகத்தின் பல பேருக்கு முழுமையாக தெரியவில்லை..! இதை போக்க வேண்டுமென்றால் நெல்லையின் தகவல்களை அகிலமெங்கும் நாம் பரப்பியாக வேண்டும்.
அரசியல்:
ஒரு காலத்தில் நெல்லை ஆங்கிலயே அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பகுதி. வ.ஊ.சி., பாரதியார், சிவா போன்ற அரசியல் ஆளுமைகள் நெல்லையை தென்னிந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அடயாளம் காட்டியது. ஆனால் அதற்க்கு பின்னர் காயிதே மில்லத், வைகோ, என்று சுருங்கிய இந்த பட்டியல் இந்நாட்களில் இல்லாமலேயே ஆகிவிட்டது. இன்றய அரசியல் தளத்தில் நெல்லை பகுதியில் இருந்து ஆளுமைமிக்க அரசியல் தலைமை என்று சென்னையில் வெகு சிலரே இருக்கிறார்கள். அவர்களும் அரசியல் காரணங்களுக்காக நெல்லை சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
தீர்வு தான் என்ன.....!
1. கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவை விரைவாக செயல்படுத்துதல்.
2. நாங்குநேரி SEZ ஐ செயல்பாட்டுக்கு கொண்டுவருதல்.
3. நெல்லையை தலைமை இடமாக கொண்டு புது ரயில்வே கோட்டத்தை உருவாக்குதல்
4. மாநகரில் பொழுதுப்போக்கு பூங்காக்களை புதிதாக ஏற்படுத்துததல்.
5. காயத்தாறில் நெல்லை விமான நிலையத்தை அமைத்தல்.
6. தாமிரபரணி நீர் வழி திட்டத்தை செயல்படுத்துதல்.
7. நெல்லை மாவட்டத்தை சர்வதேச இயற்கை சுற்றுலா பிராந்தியமாக
அறிவித்தல்.
8. தாமிரபரணி நதியை தூர்வாரி, நீர் தேக்கி வியசாய பாசன பரப்பை அதிகப்படுத்துதல்.
9. நெல்லையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் ஆளுமைகளை தேர்தலில் தேர்ந்தெடுத்தல் போன்றவைகள் நம் நெல்லையை வளர்ச்சி பாதையை நோக்கி கூட்டிச்செல்லும்....!
இல்லையெனில், வெறும் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் சிறப்பு ரயில்களை விட்டு ரயில்வே லாபம் சம்பாதிக்க மட்டுமே நம் நெல்லை பயன்படும். உலக வெளிச்சம் பெறாமல் வெறும் விவசாய பிராந்தியமாக மட்டுமே இருக்கும்...! விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்..!
https://www.google.com/amp/s/m.timesofindia.com/city/madurai/tied-in-red-tape-graft-us-tech-majors-2-5-lakh-sqft-tirunelveli-project-yet-to-boot/amp_articleshow/58588585.cms
ReplyDeletePost about the article in above link in tamil in this blog...Let the world know
ReplyDelete