தமிழக ஆளுநர் (பொறுப்பு) |
தமிழக அரசியல் களம் :
எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் களம் நம் தமிழகத்தினுடையது. ஆனால் தற்போது அது கக்கும் அனல் ஒட்டு மொத்த இந்தியாவையும் வாட்டி வதைக்கிறது . ஆம் நண்பர்களே, இந்திய அரசியல் விரும்பி களின் ஒட்டு மொத்த கவனமும் நம் தமிழக அரசு கவிழுமா? கலையுமா? அல்லது தொடருமா? என்பதை நோக்கியே இருக்கிறது.
வீடியோ விவகாரம் :
ஓட்டெடுப்பை ஒட்டி நடந்ததாக சொல்லப்படும் குதிரை பேர வீடியோ சமீபத்தில் பிரபல தொலைக்காகாட்சி ஒன்றில் வெளியாகி அதிமுக இரு அணிகளையும் கலக்கமடைய வைத்திருக்கிறது. இதில் சம்பந்தப்ப்பட்ட எம்.எல்.ஏ புகாரை மறுத்தாலும் எதிர்க்கட்சிகள் அதை விடுவதாக இல்லை.
கெத்து காட்டும் திமுக:
இந்த வாய்ப்பை மற்ற கட்சிகளைக் காட்டிலும் முறையாக பயன்படுத்துவது தி.மு.க தான். சி.பி.ஐ. விசாரனை கோரி ஹைகோர்ட்டில் முறையிட்டது , சட்டசபையில் வெளிநடப்பு செய்தது என்று மக்கள் பார்வையை தன் பக்கம் திருப்ப முயல்கிறார் ஸ்டாலின் . அதை தாண்டிய நடவடிக்கையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்கவும் கோரியிருக்கிறார் அவர்.
ஆளுநரின் அதிரடி :
ஸ்டாலினின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டிருப்பது இன்னும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. இதனிடையே உயர் நீதிமன்றமும் கிடுக்கிப்பிடி விசாரனையை துவங்கியிருக்கிறது. இந்நிகழ்வுகள் எடப்பாடி அரசுக்கு நெருக்குதலை உண்டாக்கியுள்ளது. இதுவே மக்கள் மத்தியில் ஆட்சியின் ஆயுசு பற்றி பேச வைத்துள்ளது.
என்ன நடக்கும் இனி ....?
ஆளுநர் விசாரனைக்கு உத்தரவிட்டிருப்பது சம்பிரதாயமானது தான் என்றாலும், அதன் முடிவை தீர்மானிப்பதில் டெல்லியின் பங்கு இருக்கக் கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதற்கிடையே உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டால் நிலைமை கைமீறி சென்று விடும் என்பதால் ஆளுங்கட்சியினர் உட்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் இதெல்லாம் நடந்து, அதன் பிறகு தான் ஆட்சியின் மீது ஆளுநர் வைக்க முடியும். அதற்கு முன் அவரை ஸ்டாலினில்லை மோடியே சந்தித்தாதாலும் தமிழக எடப்பாடி அரசுக்கு பாதகமில்லை.
இருந்தாலும், நொடிக்கு நொடி மாறும் அரசியல் வானிலையால் என்ன வேண்டுமானாலும் நிகழும் என்பதே இன்றைய யதார்த்த நிலை.....!
Comments
Post a Comment