அழகிய ஆற்றுப் பாலக் காட்சிகள்
ஒரு வாரத்துல மொத்தம் ஏழு நாட்கள். அது தான் எல்லாத்துக்கும் தெரியுமே.? ஆமா, அந்த ஏழு நாட்கள்ள ஐஞ்சு நாள் தான் எனக்கு காலேஜ் இருந்துச்சு....காலேஜ் இருந்ததது நம்ம பாளையங்கோட்டையில தான். அதாவது ஜங்சன்ல இருந்து சரியா 3 கி.மீ. எல்லாத்தைப் போல நானும் பஸ்லப் போற ஆள் தான். அதுவும் வேணி பஸ்ஸா பார்த்து ஏர்றது வழக்கம்.
மூஉனு கி.மீ!! பயணங்கறதுனால சீட்டு இருந்தாதா ஏற்ரது. ஏற்ன உடனே பின் வாசலுக்கு நேரெதிர் சீட்ட புடிச்சாச்சுனா ஒரு நிம்மதி.
பயணம் ஆரம்பம்.
வண்டி சங்சன (ஜங்சனை) தாண்டி தேவர் சிலைக்கு வந்துரும். சில நேரம் சிக்னல்ல சிக்கி 20 செகண்ட் நிக்குறது வாடிக்கை. அத தாண்டி ஒரு வழியா மீண்டு வந்ததும் அழகான ஆத்துப்பாலம் கண்ணுக்கு தெரியும்.
பாலத்தின் மீது பயணம்.
பஸ் அந்த பாலத்துல போய்க்கிட்டிருக்கும் போது உண்மைலயே பெருமையா பிரம்பிப்பா இருக்கும். என்னா அத கட்டி 175 வருஷம் ஆகுது. அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கும் நெல்லையையும் பாளையங்கோட்டையையும் விடாம புடிச்சு வச்சிருக்கு. பாலத்தில இருந்து பார்த்தா கலெக்ட்டர் ஆபிஸ்ல தேசிய கொடி பொதிகை காத்துல மாசா பறக்குறது தெரியும். கொஞ்சம் பார்வைய திருப்பினா போதும் பூமியோட சொர்க்கம் தெரியும். அட ,நம்ம திருநெல்வேலி ஆத்தங்கரையத்தான் அப்டி சொல்றேன்.
அதுக்கு நடுவுல தாமிரபரணி தவழ்ந்து வரும் அழகே தனி.!
தைப்பூச மண்டபம்.
தாமிரபரணிக்கு அடுத்து கண்ணுல படுறது தைப்பூச மண்டபம். ஆத்தங்கரையில இருக்குற அந்த மண்டபமும் நெல்லையப்பர் கோவிலும் ஒரே நேர்க் கோட்டுல இருக்குதாம். அடுத்து அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்க கல் மண்டபங்கள் கூடுதல் அழகு.
ஆத்தங்கரையின் வரலாறு
திருநெல்வேலி ஆத்தங்கரைக்கும் வரலாறு இல்லாம இல்ல.! கூத்து, நாடகங்கள்னு தொடங்கி இந்திய சுதந்திர போராட்டம் வரைக்கும் எல்லாம் இந்த கரைல தான் நடந்துருக்கு. வ.உ.சி, பாரதி, சிவா ன்னு பல வீரர்களோட வீர முழக்கங்கள் இன்னும் அங்க எதிரொலிச்சுகிட்டு தான் இருக்கு.
குறுக்குத்துறை காட்சிகள்
தூரத்துல தெரியுற கருப்பந்துறை ரயில்வே பாலத்த சொல்லியே ஆகணும். ஏன்னா அந்த பாலம் ரெண்டு மாநிலத்தையே பிரிக்குற இடம்.ஆமாங்க, பாலத்துக்கு இந்த பக்கம் மதுரை ரயில்வே கோட்டம் அந்த பக்கம் திருவந்திரம் ரயில்வே கோட்டம்.
உத்து பாத்தா குறுக்குத்துறை முருகங்கோயில் தெரியும். ஆனா தெக்க இருந்து வர்ற ரயிலுங்க அடிக்கடி அந்த காட்சிய கலைச்சிடும். அப்போ தூரத்துல இருந்த பொதிகை மலையும் அந்த காட்சியோட சேர்ந்துடும்.

எறங்குறவங்க வாங்க..!
இந்த இயற்கை தரிசனத்துக்கு பிறகு, "கொக்கிரகுளம் கலெக்டர் ஆபீஸ் வந்துட்டு இறங்குறவுங்க வாங்க" ன்னு கண்டெக்டர் அண்ணன் கூப்பிடுவாரு.
நம்மளும் இறங்கி போயி பாலத்துக்கு மேல நின்னு அந்த காட்சிகளை திரும்பத் திரும்ப பாக்கனும்னு தோணும்.
ஆனா, காலேஜிக்கு லேட்டாயிருங்குறதுனால இறங்குறது கிடையாது.
அது ஒரு அழகிய நிலா காலம்..!
ஆனா, காலேஜிக்கு லேட்டாயிருங்குறதுனால இறங்குறது கிடையாது.
அது ஒரு அழகிய நிலா காலம்..!
Comments
Post a Comment