தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் சேரும் ஒரே வற்றாத நதியும் தமிழ் மொழி பிறந்த பொதிகை மலையை தனது தோற்ற இடமாக கொண்ட தாமிரபரணி நதியின் சிறப்பை அமெரிக்காவின் North Carolina மாகாணம் பிரகடனமாக வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடும் முடிவையும் வடக்கு கரோலினா ஆளுநர் அந்த பிரகடனத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆளுநரின் அட்டகாச காரணங்கள்:
ஆளுநரின் பிரகடனம். |
ஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக அறிவிக்க பல்வேறு நியாயமான காரணங்கள் இருப்பதாக நார்த் கரோலினா ஆளுநர் தனது பிரகடனச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவைகள்:
1. 3,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருநை நாகரிகம் மற்றும் கீழடி அகாழாய்வின் மூலம் உலகின் பழமையான மொழி – தமிழ் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. நார்த் கரோலினா மாகாணத்திற்கு தமிழர்கள் வழங்கிவரும் பங்களிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே, 2022 ஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக பிரகடனப்படுத்துகிறேன் என ஆளுநர் திரு. ராய் கூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
நமது பொருநை அகழாய்வின் தாக்கம் அமெரிக்கா வரை எதிரொலித்து இருப்பது உண்மையிலேயே நெல்லைக்கு பெருமையளிக்கும் விஷயம் தான்.!
Comments
Post a Comment