தமிழ் பிறந்த மாவட்டம் என்ற சிறப்பை கொண்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இப்போது தமிழர்கள் தோன்றிய மாவட்டம் என்ற பெருமையை அறிவியல் பூர்வமாக பெற்றிருக்கிறது. திருநெல்வேலியில் தோன்றும் நதிகள் இந்த பெருமையை நெல்லைக்கு பெற்றுத் தந்துள்ளன.
முதலில் தாமிபரணி: இப்போது நம்பியாறு
இந்தியாவிலேயே முதன்முதலில் அகழாய்வு நடந்த நதிக்கரை என்ற பெருஞ்சிறப்பு பொருநை நதிக்கு உண்டு. நெல்லையில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூரில் அந்த அகழாய்வு முதல்முறையாக நடந்தது. தற்போது, அது கொற்கை, சிவகளை என பிரம்மாண்டமான முறையில் விரிவடைந்துள்ளது. அதன் அடுத்த கட்டமாக தாமிரபரணியின் கிளை நதியான நம்பியாறு அகழாய்வாளர்களின் அடுத்த களமாக உருவெடுத்துள்ளது.
துலுக்கர்பட்டி எனும் தொல்லியல் பொக்கிசம்:
திருநெல்வேலி மாநகரின் தென் பகுதியில் இந்த தளம் அமைந்திருக்கிறது. வள்ளியூருக்கு தென்கிழக்கில் 6 கி.மீ தொலைவில் இருக்கும் துலுக்கர்பட்டி தமிழ்நாட்டின் கடைக்கோடி தொல்லியல் தளமாக அகழாய்வு செய்யப்படவுள்ளது. இந்த இடத்தில் குறியீடுகள் கொண்ட கருப்பு சிவப்பு மண் ஓடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இது பழம்பெரும் காலமாக கருதப்படும் இரும்பு மற்றும் தொடக்க வரலாற்று காலத்தை சோ்ந்தவை என அரசு அறிவித்துள்ளது. மேலும் இது ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகியவற்றுக்கு சமகாலத்தில் இருந்த ஊராகும். எனவே, இதன் முடிவுகள் இன்னும் பெரிய அளவில் தாக்கத்தை செலுத்த இ்ருக்கிறது.
தொல்லியல் பூமி திருநெல்வேலி:
ஆதிச்சநல்லூர், சிவகளை தொல்லியல் ஆய்வுகளின் மூலம் திருநெல்வேலி தமிழ்நாட்டின் மிகப் பழமையான நாகரிக மாவட்டம் என்ற பெருமையை உலக அரங்கில் பறைசாற்றியது. தற்போது பொருநையின் கிளை நதியில் நடக்க இருக்கும் துலுக்கர்பட்டி அகழாய்வின் முடிவுகள் இந்தியாவின் மனித குல வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.! மேலும் இது இந்தியாவின் பூர்வீக இனமான தமிழினத்தின் பிறப்பிடம் திருநெல்வேலி மண் தான் என்பதையும் நிறுவி நிற்கும்.
Comments
Post a Comment