Skip to main content

நெல்லையப்பர் பேராலயம்.


     வணக்கம் அன்பு நண்பர்களே, திருநெல்வேலிக்கென்று பல பெருமைகள் இருக்கலாம். பாபநாசம்,குற்றாலம் தொடங்கி உவரி வரை ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. இந்த சிறப்புகளை விடவும் நெல்லைக்கு பெருஞ்சிறப்பை சேர்ப்பது நெல்லையப்பர் ஆலயம்.
நெல்லை மாநகரின் மத்தியிலுள்ள இந்த ஆலயம் பல சிறப்புகளை உடையது. அதை பார்போம் வாருங்கள்.

அமைப்பு:
அம்மன், சுவாமி ராஜகோபுரங்கள்
     நெல்லை மாநகரின் மையப்பகுதியில் இருக்கிறது நெல்லையப்பர் கோவில். சுவாமிக்கென்று(நெல்லையப்பர்) தனி சன்னதி, ராஜகோபுரம் அம்மனுக்கென்று (காந்திமதி அம்பிகை) தனி சன்னதி, ராஜகோபுரம் என இரண்டு பிரம்மாண்ட கோவில்களாக இக்கோவில் அமைந்திருக்கிறது.
இவ்விரு கோவில்களையும் இணைக்கும் வகையில் சங்கிலி மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. இதற்க்கு அருகாமையில் ஸ்வாமிக்கான பொற்றாமரைக்குளம் அலகுற அமைந்திருக்கிறது.
பொற்றாமரைக்குளம்



கட்டிடக்கலை:
     நெல்லையப்பர் கோவில் திராவிட கட்டடக்கலையின் அற்புத சான்றாக திகழ்கிறது.ஆயிரக்கணக்கான சிற்பங்கள், ஐந்து ராஜகோபுரங்கள், கலைநயமிக்க ஆயிரங்கால் மண்டபம், பிரம்மாண்ட காய்கனி,மலர் தோட்டம், நூற்றுக்கணக்கான சந்நிதிகள் என்று சுமார் 16 ஏக்கரில்  கோவில் கட்டப்பட்டுள்ளது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விடவும் பரப்பளவில் பெரியது நெல்லையப்பர்கோவில்.தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய  சிவதலம் இது  என்கிறாகள்  ஆன்மீக பெரியோர்கள்.

அற்புத வேலைபாடுகள் :
     கோவிலின் பிரதான வாசல், நெல்லையப்பர் சன்னதி முன் அமைந்துள்ளது. அதன் வழியாக உள்ளே நுளையும்போதே கேரள கட்டிடக்கலையில் அமைந்த மர மண்டபம் நம்மை வரவேற்க்கும்.
மரச்சிற்பங்கள்


அதில் மரத்தில் மனித சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கும். அதை தாண்டி ராஜ கோபுரத்தினுள் நுளையும் போது நாயக்கர் கால கற்சிற்பங்களை நாம் காண முடியும். அதன் அருகே பிரம்மாண்ட நந்தி அமைந்துள்ளது. இது வளர்வதாக ஒரு நம்பிக்கை பக்தர்களிடயே உள்ளது.

நெல்லையப்பர் (சுவாமி) சன்னதி:
     நந்திக்கு நேராக இருக்கும் வாசலினுள் சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உயரமான மண்டபத்தில் நெல்லையப்பர் அமர்ந்திருப்பார். அந்த மண்டபத்தில் ஏறுவதற்க்கு கற்படிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த படிக்கட்டு மண்டபத்தின் மேல்ப்பகுதி கருங்கல்லால் கூரை போல செதுக்கபட்டிருக்கும். அந்த மண்டபத்தை உலகப்புகழ் பெற்ற இசைத்தூண்கள் தாங்கி பிடிதிருக்கின்றன.

இசைத்தூண்கள்


சரிகமபதனிச என்று ஓசை எழுப்பும் அந்த தூண்கள் ஒரே கல்லினால் செதுக்கபட்ட அதிசயம். உள்ளே நெல்லையப்பர் மிகவும் எளிமையான தோற்றத்தில் அமர்த்திருப்பார். நெல்லை மாநகருக்கே சொந்தக்காரனான நெல்லையப்பர் எளிமையாக இருந்து இறை தத்துவம் போதிக்கும் அழகு இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதம்.
காந்திமதி அம்பாள் , சுவாமி நெல்லையப்பர்


நெல்லை காந்திமதி சந்நிதி:
     காந்திமதி சன்னதி என்று சொல்வதை விட, காந்திமதி கோவில் என்று சொல்வது தான் சரி. ஏனெனில் மற்ற ஆலயங்களைபோல் இல்லாமல் இக்கோவிலில் அம்மனுக்கு தனி கோவிலே அமைக்கபட்டிருக்கும். இது சிவனும் சக்தியும் சரி நிகர் தான் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும். நெல்லையப்பர் பிராகாரத்தில் தென் புறமாக அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை அமைந்துள்ளது. அது வழியாக சென்று அம்பிகையை தரிசனம் செய்யலாம்.

தட்சிணாமூர்தி சந்நிதி:
     அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் தாமரைக்குளம் அருகில் அமைந்துள்ளது இச்சன்னிதி. இங்கு ஞான தச்சிணாமூர்தி அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தபடுகிறது.

திருவிழாக்கள்:
     மதுரையை போலவே  நெல்லை நெல்லையப்பர் ஆலயத்திலும் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதில் தனித்துவமானது ஆனி பெருந்தேர்திருவிழா.உலகில் நடைபெறும் மிகப்பழமையான தேர்திருவிழா இது. ஒரே நாளில் ஐந்து தேர்கள் லட்சக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்படும். இதில் இழுக்கப்படும் நெல்லையப்பர் தேர் ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய தேராகும்.மேலும் முழுவதும் மக்களால் இழுக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய தேரும் இதுவே...!
ஆனி பெருந்தேரோட்டம்


போக்குவரத்து:
   
 நெல்லை சந்திப்பு ரயில் நிலையம்
நெல்லையப்பர் ஆலயம் நெல்லை ரயில் சந்திப்பு மற்றும் பெரியார் மத்திய பேருந்து நிலயத்தில் இருந்து  1.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.அங்கிருந்து அடிக்கடி மாநகர பேருந்து வசதி உள்ளது.

 என்ன நண்பரே....! நெல்லையப்பர் கோவிலோட இத்தனை சிறப்புகள பாத்து பூரிச்சு போய்ட்டீங்களா..? 
உடனே கிளம்புங்க நெல்லையப்பர் கோவிலுக்கு ஒரு விசிட் அடிக்க.....!

Comments

  1. Sure...i need more information about nellai city..

    ReplyDelete
  2. Sure...i need more information about nellai city..

    ReplyDelete
  3. s, you can get more information through this blog.
    which type of information u need.?

    ReplyDelete
  4. Trichy or nellai..which is the best city??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...