நெல்லை பாபநாசம் முண்டந்துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 28 ஆண்டுகளாக தற்காலிக இரும்பு பாலத்தில் நடந்து வந்த போக்குவரத்து தற்போது புதிய பாலத்திற்கு மாறியிருக்கிறது.
சுருட்டியெறிந்த பெருவெள்ளம்:
1993ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பேயாக கொட்டித் தீர்த்த புயல் மழையில் பாபநாசம் அணை நிரம்பி வழிந்தது. அணை உடைவதை தடுக்க ஒரே நேரத்தில் ஆற்றில் 2லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த வெள்ளத்தில் முண்டந்துறை பாலம் சுக்குநூறாகி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர், ராணுவத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் இதுநாள் வரையில் போக்குவரத்து நடந்து வந்தது.
பிறந்தது புதுப்பாலம்:
இந்நிலையில் அங்கு புதிய பாலம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது, அது நிறைவடைந்து முதல்வரால் பாலம் எளிமையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய பாலம் எந்த பெருவெள்ளத்தையும் தாங்கும் வகையில் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment