கொரோனாவிற்கு அடுத்து இந்தியாவின் புதிய விருந்தாளியாக வந்து இறங்கியிருக்கிறது வெட்டுக்கிளிகளின் படை. தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வர வாய்ப்புகள் குறைவு என அரசு கூறுகிறது. ஆனால், வரலாற்றில் தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்த நிகழ்வு பதிவாகியிருக்கிறது.
ஆதாரத்துடன் கூறும் மதுரை எம்.பி:
17 ம் நூற்றாண்டில் (அதாவது 1600களில்) வடக்கிலிருந்து வெட்டுக்கிளிகள் சாரை சாரையாக மதுரைக்கு வந்திருக்கின்றன. சோள கதிர் அளவுள்ள அந்த வெட்டுக்கிளிகள் மதுரையின் விவசாய நிலங்களை பாழ்படுத்தியுள்ளன. பின்னர், அந்த படை தெற்கே நெல்லையை நோக்கி சென்றது என மதுரை எம்.பியும் தமிழின் முன்னணி எழுத்தாளருமான சு. வெங்கடேசன் தனது காவல் கோட்டம் நாவலில் பதிவு செய்திருக்கிறார். மேலும் அது இலங்கை வரை சென்றிருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.
பாதிப்பு அகோரம்:
வெட்டுக்கிளிகள் நடத்திய அந்த படையெடுப்பால் ஏராளமான பயிர்கள் நாசமாதோடு பஞ்சமும் பசியும் தலைவிரித்து ஆடியதாகவும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற அந்நாவலில் சு. வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.
Comments
Post a Comment