உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா கொடு நோய். வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை இந்நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
வளர்ந்த மாநிலங்களே இலக்கு:
இந்தியாவில் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலமான மகாராஷ்டிரா தான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மராட்டியத்திற்கு அடுத்த பெரிய பொருளாதார மாநிலமான நம் தமிழகமும் 2வது அதிக தொற்றாளர்களை கொண்டிருக்கிறது.
ஆறுதலளித்த நெல்லை:
தமிழ்நாட்டு நிலவரத்தின் படி அதிக தொற்றாளர்களை கொண்டு சென்னை மாநகரம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பாதிப்பை கண்டறிந்த நம் நெல்லையில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஆனால் எண்ணிக்கை 63ஐ தாண்டிய போது நோய் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது 95% பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். நெல்லை மக்களின் ஒத்துழைப்பும், மாவட்ட நிர்வாகத்தின் அதிரடியான நடவடிக்கைகளும் இதற்கு கைகொடுத்தன.
திரும்புவோரால் திணறல்:
ஆனால், சமீப காலமாக நெல்லையின் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களான மராட்டியம், கர்நாடகா ஆகியவற்றில் இருந்து வருவோரால் எண்ணிக்கை உயர்ந்து தற்போது 300 ஐ நெருங்கி நிற்கிறது.
நாடோடி நெல்லையர்கள்:
வேலை தேடி வெளியூர் சென்று வாழ்வதை வாழ்க்கை கடமைகளுள் ஒன்றாகவே மாற்றி வைத்திருந்த நம் நெல்லை மக்கள், இன்று அதே காரணத்தால் அல்லல்படுவது நிச்சயம் சோகமானது தான்..
Comments
Post a Comment