ஆனால் வடகிழக்கு பருவமழையின் சர்க்கார் நம் நெல்லையில் எப்போதுமே எடுபடுவதில்லை. அதற்கு காரணம் நம் தாமிரபரணி நதியும் அதன் அணைகளும் தான்.!
நதியின் விஸ்வரூபம்!
பொதிகை மலையில் ஆண்டு தோறும் மழைப் பொழிவு இருப்பதால் வற்றாத ஜீவநதியாக பாய்கிறது நமது தாமிரபரணி நதி. ஆனால், மழைக் காலங்களில் அதன் ஓட்டம் பெரும் ஆரவாரமாய் இருக்கும். மலையிலுள்ள மண்ணையும் மரங்களையும் வாரி சுருட்டிக் கொண்டு சமவெளியில் பாய்ந்து ஓடும். எனினும் அதனால் எந்த விதமான பெரும் பாதிப்பும் நம் மக்களுக்கு ஏற்ப்படுவதில்லை.
அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நம் நதியை நாம் பாதுகாக்கும் முறை தான்.
ஆற்றுக்கு அப்பால் தான் ஊர்கள்:
பாபநாசத்தில் தொடங்கி புன்னைக்காயல் வரை ஆற்றுக்கு மிக மிக அருகில் எந்த ஊரும் இருப்பதில்லை. விதிவிலக்கு நம் நெல்லை மாநகரம். இதற்கு முக்கிய காரணம் வெள்ளத்தின் போது ஆறு எடுக்கும் விஸ்வரூபம் தான்! எனவே அதற்கு பயந்தே நமது ஊர்கள் ஆற்றில் இருந்து தொலைவான பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
அரண் போன்ற அணைகள்:
அடுத்த காரணம் நம் தாமிரபணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள்... கிட்டத்தட்ட பதினோறு அணைகள் தாமிரபரணியை தடுத்து நிறுத்த கட்டப்பட்டுள்ளன. இது வெள்ளத்தில் இருந்து மட்டுமல்ல வறட்சியிலிருந்தும் நம்மை காத்து வருகின்றன.
வேகத்தடையாய் தடுப்பணைகள்:
அதற்கு அடுத்து தடுப்பணைகள், மொத்தமாக எட்டு தடுப்பணைகள் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. இவை மன்னர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் நுணுக்கமான வடிவமைப்புகளோடு கட்டப்பட்டவை. இத்தனை ஆண்டுகளாக பல கடும் வெள்ளப் பெருக்குகளை அடக்கி ஆண்டு இன்னும் கம்பீரமாக நிற்கின்றன.
இவையனைத்தும் தான் நம் திருநெல்வேலியை எத்தகைய புயல் மழை சுழன்றடித்தாலும் காப்பாற்றி வருகின்றன.
இதனால் இயற்கையும் அடங்கிப்போகிறது நம்மிடம்.!
Comments
Post a Comment