Skip to main content

செழிக்கும் நெல்லையை சீரழிக்க முயற்சி.?

சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை போல இராஜபாளையம்-செங்கோட்டை இடையே புதிய நான்கு வழிச்சாலையை போட அரசு முடிவெடுத்துள்ளது.

ரம்மியமான மலையடிவாரச் சாலை.!

தமிழகத்தின் அழகான சாலைகளுள் மதுரை-செங்கோட்டை சாலையும் ஒன்று. விருதுநகர்,நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த சாலை அமைந்துள்ளது.
எழுமிச்சை,கரும்பு,நெல் என சகலமும் செழித்து வளரும் நிலங்கள் நடுவே இச்சாலை செல்கிறது. இந்த சாலையில் தான் இரு மாவட்டங்களின் முக்கிய நகராட்சிகள் அமைந்துள்ளன.

விருதுநகர்:

*ஸ்ரீவில்லிபுத்தூர்.
*ராஜயாளையம்.

நெல்லை:

*புளியங்குடி
*சங்கரன்கோவில் (பைபாஸ்)
*கடையநல்லூர்
*தென்காசி
*செங்கோட்டை

இந்த நகரங்களை வடக்கு மாவட்டங்களோடு இணைப்பது இச்சாலை தான். ஆண்டு தோறும் குற்றாலம் சீசன் நேரத்திலும், சபரிமலை சீசனிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையில் பயணிக்கும். இதனால் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக்க அரசு முடிவெடுத்துள்ளது.

பாதையே மாறுகிறது:

புதிதாக வரவுள்ள இந்த நான்கு வழிச்சாலை ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி அமையவுள்ளது. அதாவது சிவகிரி,வாசு,புளியங்குடி முதலிய ஊர்களுக்குள் செல்லாமல் மேற்கு பகுதியில் அமையவுள்ளது.

பாதிக்கும் பயிர்த்தொழில்:

ஏற்கனவே இருக்கும் பாதையில் இருந்து விலகி புதிய பாதையில் நிறைவேற்றப்பட்டவுள்ள இந்த சாலையால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்படுகிறது. காலங்காலமாக விவசாயம் செய்து வந்த கிணறுகளையும் நிலங்களையும் இழந்து விடுமோ என்று இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் சாலையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால் மேற்கு தொடர்ச்சிமலையின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகுமோ என சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.

மாற்றுவழி உண்டா.?

இந்தச்சாலையை விவசாய நிலங்களுக்குள் செல்லாதவாறும் அமைக்கலாம் என்று அப்பகுதி மக்கள் யோசனை சொல்கிறார்கள். இதனால் 8 கி.மீ குறையவும் வாய்ப்புள்ளதாம்.

தங்களின் யோசனையை கேட்க அரசு முன்வரவேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இத்திட்டத்திற்கு எதிராக தற்போதே ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. 
தங்களின் யோசனையை அரசு கேட்காவிடில் விவசாயிகள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.


விவசாயத்தில் செழிக்கும் திருநெல்வேலியின் மேற்கு பகுதிகளை சீரழியாமல் காப்பது அரசின் கடமை.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...