நாளை முதல் நம் நெல்லை மாவட்டத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழமுக்கத்தை ஒட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தாழ்வு மண்டலமானது மெல்ல நகர்ந்து இலங்கை தென் தமிழகம் பகுதியில் மூன்று நாட்களுக்கு நிலைகொள்ள உள்ளது. இதன் காரணமாக நெல்லை,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களின் கடலோரங்களிலும், தாமிரபரணி உருவாகும் பொதிகை மலைப் பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாம்.! இம்மழை 9ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தென்மேற்கு பருவ காலத்தின் போது மிகுதியான மழைப் பொழிவை நம் நெல்லை மாவட்டடம்
ஏற்கனவே தென்மேற்கு பருவ காலத்தின் போது மிகுதியான மழைப் பொழிவை நம் நெல்லை மாவட்டடம்
பெற்றது. அதனால் அனைத்து அணைகளிலும் கணிசமான நீர் இருப்பு உள்ளது. சமீபத்திய மழையினால் அவ்வணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு பெருமழை பொழிய உள்ளதால் அணைகள் நிரம்பி தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோட வாய்ப்புள்ளது. நாளை தீபாவளி முதல் மழை வலுப்பெற உள்ளதால் நம் நெல்லையின் குட்டிச் சுட்டிகள் கவலையிலும் விவசாய பெருங்குடி மக்கள் ஆனந்தத்திலும் திளைக்கின்றனர். நெல்லையை செழிக்க வைக்க வருகை தரும் பெருமழையை பேருவகையுடன் வரவேற்போம்..!
Comments
Post a Comment